Friday, 27 June 2014

ஒரு பெண்ணிண எலக்கியவாதியின்அக சிறந்த கவிதை

ஒரு புணர்தலின் உச்சியில்
விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத்
தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்
என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே
தலையை இழுத்தேன்
உபரி என
யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என
தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின்
மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய்
தந்தாய்
முலைகளைப்
பிசைந்து சே என்றாய் பிடல்
என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல
மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட்
என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில்
புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில்
பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய்
பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
-லீனா மணிமேகலை.

posted from Bloggeroid

No comments:

Post a Comment