Wednesday, 25 June 2014

எம் முப்பாட்டன் மாவீரன் இராவணனின் வரலாறு


இராவணன்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.


இராமாயணத்தில் இராவணன்
இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திச் சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்காரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ!

posted from Bloggeroid

No comments:

Post a Comment