
வல்வெட்டித்துறையில்
அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள்
ஒரு குழுவாகச்
செயல்பட்டுக்கொண
்டிருந்தார்கள். பெரும்பாலும்
பிரபாகரனைக் காட்டிலும்
வயதில் மூத்தவர்கள்.
இரண்டு நண்பர்கள்
அவர்களை வழிநடத்திக்கொண்
டிருந்தார்கள். ஒருவர்,
நடராஜா தங்கதுரை.
இன்னொருவர்,
செல்வராஜா யோகச்சந்திரன்.
துடிப்பானவர்கள்.
ஏதாவது செய்யவேண்டும்
என்கிற தணியாத தாகம்
கொண்டவர்கள்.
தரப்படுத்துதல் என்கிற பெயரில்
தமிழ் மாணவர்களை அரசாங்கம்
பழிவாங்கிக்கொண்டிருப்பதில்
வெறுப்புற்றிருந்தவர்கள். தமிழ்
அரசியல்வாதிகளால்
பத்து பைசாவுக்குப்
பிரயோஜனமில்லை என்று வருந்திக்கொண்டி
ருந்தவர்கள். தமிழர்களின்
மீட்சிக்கு ஆயுதம்
ஒன்றே இறுதி வழி என்று முடிவு செய்து,
களம் இறங்கியிருந்தவர்கள்.
ஆனால் அது அத்தனை சுலபமாக
இல்லை. ஆயுதம் கிடைப்பது.
வெடிபொருள்கள் கிடைப்பது.
கிடைத்ததெல்லாம் இரண்டாம்
தரம். உடைந்த துப்பாக்கிகள்.
துருப்பிடித்த பிஸ்டல்கள்.
கெஞ்சிக் கூத்தாடினால்
ஏழெட்டு ரவைகள் கிடைக்கும்.
சுடுவதற்குப்
பயிற்சி வேண்டாமா?
பயிற்சிக்கு ரவைகளை வீணாக்கினால்
புரட்சிக்கு என்ன செய்வது?
தவித்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு மெக்கானிக்கை நட்பாக்கிக்கொண்
டு, கிடைத்த உடைந்த
துப்பாக்கிகளைக்
கொடுத்து ரிப்பேர் செய்யச்
சொல்லியிருந்தார்கள்.
குழுவின் இளம் உறுப்பினராகச்
சேர்ந்திருந்த பிரபாகரனுக்கு,
அந்த மெக்கானிக்கின்
அசிஸ்டெண்டாக
வேலை பார்க்க வாய்ப்புக்
கிடைத்தது.
துருப்பிடித்த பிஸ்டல்களைக்
கழற்றிப் போட்டு ரிப்பேர்
செய்யும் மெக்கானிக்கின்
கைவிரல்களையே இமைக்காமல்
பார்த்துக்கொண்டிருப்பார்
பிரபாகரன். எண்ணெய் போட்டுத்
தேய்த்துத்
தேய்த்து மெருகேற்றி,
பகுதி பகுதியாக மீண்டும்
இணைத்து, ஒரு நல்ல
உருப்படியாக
மாற்றி வைத்துவிட்டு மெக்கானிக்
எழுந்து போனதும் பிரபாகரன்
அதனைக் கையில் எடுப்பார்.
மீண்டும் பகுதி பகுதியாகக்
கழற்றிப் போட்டுவிட்டு,
மெக்கானிக்
செய்தது போலவே திரும்ப
இணைத்துப் பார்ப்பார். அதுதான்
ஆரம்பம்.
தங்குமிடம்தான் பெரும்
பிரச்னையாக இருந்தது.
டீக்கடைகளின் பின்புறம்.
ரயில்வே லைன் ஓரத்து புதர்
மறைவுகள். நண்பர்களின்
வீடுகள். கோயில் திண்ணைகள்.
பள்ளிக்கூடத் திண்ணைகள்.
உலகம் உறங்கும்
வரை விழித்திருந்துவிட்டு,
ஒதுங்கிப் படுப்பார். ஊர்
விழிப்பதற்கு முன்னால்
எழுந்து போய்விட வேண்டும்.
எந்த இடமானாலும் சரி.
இதுதான் விதி. இதுதான்
வாழ்க்கை.
ரொம்பக் கஷ்டமாக
இருக்கிறதா தம்பி?
தங்கதுரை ஆதரவாகக் கேட்பார்.
பிரபாகரன் சிரிப்பார். என்ன
சாப்பிட்டாய்? அடுத்த
கேள்வி அநேகமாக
அதுவாகத்தான் இருக்கும்.
பொதுவாக அந்நாட்களில்
பிரபாகரன்
உட்கார்ந்து வயிறாரச்
சாப்பிட்டது வெகு அபூர்வம்.
வசதியில்லாமல் இல்லை.
இடமில்லை என்பதுதான்
விஷயம். போலீஸ் தேடத்
தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததுமே தலைமறைவாகியிருக
்க வேண்டும்.
வீடுவரை வந்துவிட்டபின்
தப்பித்தது சற்றே பிழை.
இன்னும் கொஞ்சம்
முன்கூட்டி யூகித்திருக்க
வேண்டும். இப்போது தேடுதல்
தீவிரமடைந்திருக்கும். எங்கும்
கண்காணிப்புக் கழுகுகள்
வட்டமிட்டபடியேதான்
இருக்கும்.
இத்தனைக்கும் அன்றைய பிற
தமிழ் இளைஞர்கள்
செய்ததுபோல், அப்போது அவர்
வங்கிக்கொள்ளை எதிலும்
ஈடுபடவில்லை.
யாழ்ப்பாணத்திலி
ருந்து பாயிண்ட்
பெட்ரோவுக்குப் போகும்
பேருந்து ஒன்றில் தீ வைத்த
குழுவில் அவர் இருந்தார். மக்கள்
இல்லாத பேருந்து.
ஷெட்டுக்குப்
போய்க்கொண்டிருந
்தபோது வழியில் நிறுத்தி,
ஓட்டுநரை இறங்கி நடந்து போகச்
சொல்லிவிட்டு எரித்தார்கள்.
அதற்குத்தான் போலீஸ்
தேடிக்கொண்டிருந்தது.
வெறும் ஆர்வம்.
ஏதாவது செய்யும் ஆர்வம். கவன
ஈர்ப்பில் ஆர்வம். அரசாங்கத்தைப்
பதறச் செய்யமாட்டோமா என்கிற
தவிப்பு.
அப்படியாவது தமிழர்களுக்கு ஏதாவது செய்யமாட்டார்கள
ா என்கிற எதிர்பார்ப்பு. ஆனால்,
இம்மாதிரியான உதிரிச்
செயல்கள் பெரிய அளவில்
உதவாது என்று மட்டும்
அவருக்குத்
தோன்றிக்கொண்டே இருந்தது.
ஏதாவது ஒரு புள்ளியில்
தொடங்க வேண்டும். ஆனால்
இதுவல்ல. இப்படியல்ல. எனில்
எது? எப்படி?
யோசித்துக்கொண்டிருந்தார்.
இரவுப் பொழுதுகளில்
வயல்வெளியில்
இறங்கி வெகுதூரம் நடப்பார்.
வயல் காட்டில்
எங்கே கிழங்கு பயிரிட்டிருக்கி
றார்கள் என்று பார்ப்பார்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு.
இருட்டில் தடவிப்
பார்த்து செடியை உணர்ந்து,
கிழங்கைத்
தோண்டி எடுத்துக்கொள்வார்.
மேலும் நடந்து மிளகாய்த்
தோட்டம் பக்கமாகப் போய்
நாலைந்து பச்சை மிளகாய்களை வேலியோரம்
நின்று பறித்துக்கொள்வார்.
எங்காவது கால்வாய்
அல்லது குளத்தில் கிழங்கைக்
கழுவி,
கையாலேயே தோலைச்
சீவிவிட்டு பச்சையாக
அப்படியே உண்பார்.
தொட்டுக்கொள்ளப்
பச்சை மிளகாய்.
கஷ்டம்தான் இல்லை?
யோகச்சந்திரன் என்கிற
குட்டிமணி கேட்பார்.
இல்லையே என்பார் பிரபாகரன்.
பச்சை சர்க்கரை வள்ளிக்கிழங்கும்
பச்சை மிளகாயும்
வெகு விரைவில்
அவரது இஷ்ட
உணவாகிவிட்டிருந்ததுதான்
காரணம்.
வீட்டை விட்டு வெளியேறி எத்தனை நாளானது என்பதே நினைவில்லை.
வாழ்க்கை அதன் போக்கில்
காட்டாறாக ஓடிக்கொண்டிருந்
தது. திடீரென்று ஒருநாள்
பிரபாகரன் மறைந்திருந்த
இடத்துக்கு வேலுப்பிள்ளை வந்து நின்றார்.
அதிர்ந்து போய்விட்டார்
பிரபாகரன். அப்பா, நீங்களா?
இங்கேயா?
போலீஸ்காரன்
தேடுவது பிழைப்புக்கு.
அவனிடம் சிக்காதிருக்க
முடியும். பெற்றவன்
தேடுவது அப்படியா? தம்பி,
என்ன இது? என்ன
செய்துகொண்டிருக்கிறாய்?
பிரபாகரன் உடனே பதில்
சொல்லவில்லை. வெகுநேரம்
யோசித்தார். பிறகு சொன்னார்.
அப்பா, உங்களுக்கு முழுக்கப்
புரியுமா என்று தெரியவில்லை.
என்னால்
உங்களுக்கு இனி பயனில்லை.
என்னை விட்டுவிடுங்கள்.
தலைமறைவுக் காலத்தில்
பிரபாகரனைச்
சுற்றி ஒரு சிறு குழு சேர்ந்திருந்தது
. தங்கதுரை,
குட்டிமணி குழுவிலிருந்தவர
்கள் அல்லர். இது வேறு குழு.
வேறு இளைஞர்கள்.
பிரபாகரனைப்
போலவே ஆர்வமும் துடிப்பும்
மிக்க இளைஞர்கள்.
அதிகமில்லை. பத்துப்
பதினைந்து பேர் இருக்கலாம்.
ஒரு குழுவாகச் செயல்படலாம்
என்று முடிவு செய்திருந்தவர்க
ள். பிரபாகரனைத் தங்கள்
தலைவராக ஏற்றுக்கொண்டிரு
ந்தவர்கள். தமக்குள் பேசி தங்கள்
இயக்கத்துக்குப் `புதிய தமிழ்ப்
புலிகள்’
என்று பெயரிட்டிருந்தார்கள்.
வெளியில் யாருக்கும்
தெரியாது. பெயர் அல்ல;
அப்படியொரு குழு உருவானது கூட.
தலைமறைவு வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும்
என்று தெரியவில்லை.
கொஞ்சம் வெளிச்சத்தில் நடமாட
முடிந்தால்
ஏதாவது செய்யலாம்
என்று எண்ணியிருந்தார்கள்.
ஆனால் துரதிருஷ்டவசமாக,
பிரபாகரன் பதுங்கியிருந்த இடம்
அவரது தந்தைக்குத்
தெரிந்தது போலவே போலீஸுக்கும்
தெரிந்து போனது. அடுத்த
இடம் தேடும் அவசரத்தில்
அப்போது இருந்தார் பிரபாகரன்.
அப்போதுதான்
வேலுப்பிள்ளை வந்திருந்தார்.
சொல் தம்பி. என்ன
செய்யப்போகிறாய்?
இந்தியாவுக்குப்
போகப்போகிறேன்
அப்பா என்று அவர்
சொல்லவில்லை. ஆனால்
அதைத்தான்
அப்போது செய்தார்..
(தொடரும்)
posted from Bloggeroid
No comments:
Post a Comment