Wednesday, 25 June 2014

முருகா


செந்தூரின்
கரையிலே ஒரு சிங்கார
அழகனாம்,
அவன் சேவடி போற்றினால்
துயரத்தை மறக்கலாம்,
அறியாமைத் திரியினால்
தெரியாமல் எரியும்,
ஆணவத் தீ அவன் பார்வையில்
அணையும்,
நான் இன்று காட்டும்
கண்ணியமா?
இல்லை என்றோ செய்த
புண்ணியமா?
தனைப் பாடும்
வாய்ப்பினை அவன்
கொடுத்தது,
அவனின்றி எனக்கிங்கு யார்
அடுத்தது?
மனம் அவனால்
மட்டுமே நிறைந்துள்ளது,
பல மாற்றங்கள் அவனால்
நிகழ்ந்துள்ளது,
ஆயிரம் ஆயிரம் தெய்வங்கள்,
தினம் ஆராதித்திடும்
சமயங்கள்,
அனைத்தும்
உண்மையா தெரியவில்லை,
ஆராய
அடியேனுக்கு விருப்பமில்லை..
தண்டமிழ் நாட்டின் தலைவன்
அவனானால்,
ஒரு சேவகனாக சேவைகள்
புரிவேன்,
தர்ம யுத்தத்தில் அந்த
தளபதி சொன்னால்,
தருணம் இதுவென என்னுயிர்
விட்டுவேன்,
அவன் பெயரைத் தவிர ஓர்
வேள்வியில்லை,
அவன் அருளுள்ள வரையில்
தோல்வி இல்லை...!

posted from Bloggeroid

No comments:

Post a Comment