Wednesday, 11 June 2014

இந்து மதம் எங்கே போகிறது

புத்தர் வேள்விச்சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியைப் போட ... யாகத்தை விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு. (25)
’இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே; ஒருவனுக்கு இழப்பும் ஒருவனுக்குப் பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை இது.’ பிராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். (26)
பிராமணர்களின் மிகபெரிய பலமே யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வது தான். புத்த இயக்கத்திடமிருந்து ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீகரித்தார்கள்.

மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்.(26)
புத்த மதத்தினர் மெல்ல வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்தனர். பிராமணர்களும் பின் தொடர்ந்தனர். (27)

தீபவெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டது தான் தமிழனின் முதல் வழிபாடு. பூ + செய் = பூவால் செய். இது இணைந்து தான் பூசெய் .. பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது. (28) இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே. சட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார்.
வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம் தான் முன்னோடியாக இருந்திருக்கிறது.
’நாயகன் - நாயகி பாவம்’ என்ற பக்தி வடிவத்தை உலகுக்குக் கொடுத்ததே தமிழ் இனம் தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் புத்தம் மற்றும் சமணக் கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. சமணக் கொள்கைகள் தெற்கே திருநெல்வேலி வரை பரவி விட்டது. நாகப்பட்டினம் வரை புத்தம் புகுந்து விட்டது.
வட இந்தியாவில் புத்திசத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது.
பல்லவ ராஜாக்கள் வேதத்தை, வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர். புத்த போத

posted from Bloggeroid

No comments:

Post a Comment