
^^^^^
சந்திரகுப்த மௌரியரின் காலம்
கி.மு.321
முதல் கி.மு.292 ஆகும். அவர்
மகன் பிம்பிசாரரின்
காலம் கி.மு.293 முதல்
கிமு.272 ஆகும்.
சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்
காலத்திலேயே,
கி.மு. 300-க்கு பின்
தக்காணத்தைக் கைப்பற்றும்
பணி தொடங்கி விடுகிறது.
ஆனால் பிம்பிசாரரின்
ஆட்சிக் காலத்தில்
அதாவது கி.மு.293-க்குப்
பிறகு அது தீவிரப்படுத்தப்
படுகிறது//
மௌரியர்கள் முதலில்
வடுகர்கள்
துணை கொண்டு துளுவ
நாட்டைத் தாக்கி, அதனை ஆண்ட
நன்னன்
மரபினனை முறியடித்து,
அவனது தலைநகர்
பாழியை கைப்பற்றிக்
கொண்டனர். பின்
அதனை ஒரு வலிமையான
அரணாக மாற்றியமைத்து,
அங்கிருந்து அவர்கள் அதியமான்
மரபினனாகிய
எழினியையும், சோழ நாட்டின்
எல்லையிலுள்ள
அமுந்தூர்வேல்
திதியனையும், பாண்டிய
நாட்டு எல்லையிலுள்ள
மோகூர்த் தலைவனையும்,
படிப்படியாகத் தாக்கத்
தொடங்கினர். சேரர்
எல்லையில் இருந்த
நன்னனை முதலிலேயே தாக்கியழித்திரு
ந்ததால்,
முதலில் சேரர்களைத்
தாக்கினர்.
சேரர் படைத் தலைவன்
பிட்டங்கொற்றன்
மோரியர்களோடு பல
தடவை போர் புரிகிறான். போர்
வெற்றி தோல்வி இல்லாமல்
தொடர்கிறது. பின்
மௌரியர்களை அதியமான்
மரபினன் எழினி என்பான்
முதலில் வட்டாறு என்ற
இடத்திலும், பின் செல்லூர்
என்ற இடத்திலும்
எதிர்த்து தாக்குதல்
நடத்துகிறான்.
இறுதியில் செல்லூர் போரில்
எழினி வீர
மரணமடைந்து பெரும்
புகழடைகிறான். அதன்
பின்னரும் அதியமான் மரபினர்
மௌரியர்களை எதிர்த்து தொடர்ந்து இறுதிவரை தாக்குதல்
நடத்தினர். அதன்
காரணமாகவே அசோகரின்
கல்வெட்டில்,
அவர்களின் அரச குல வடமொழிப்
(பிராகிருதம்)
பெயரில் ‘சத்திய புத்திரர்கள்’
என மூவேந்தர்களுக்க
ு இணையாக இடம் பெற்றனர்
எனலாம்.
சோழ நாட்டெல்லையில் உள்ள
அமுந்தூர்வேல் திதியனும்,
பாண்டிய நாட்டெல்லையிலுள
்ள மோகூர்த் தலைவனும்
மோரியர்களை எதிர்த்துத்
தாக்கி அவர்களைத்
தடுத்து நிறுத்து கின்றனர்.
இறுதியில் திதியனும்
மோகூர்த் தலைவனும்
மோரியர்களைப் போரில்
தோற்கடித்து தங்களது எல்லையை விட்டு துரத்தி விடுகின்றனர்.
மோரியர்
படை பின்வாங்கி துளுவ
நாட்டை அடைந்து,
பாழி நகரில்
நிலை கொள்ளுகிறது.
மௌரியப் பேரரசின்
படை இதுவரை முழுமையாக
போரில் ஈடுபடவில்லை. அதன்
தென்பகுதி படைத்தலைவர்களே வடுகர்களின்
துணை கொண்டு போரை நடத்தி வந்தனர்.தமிழக
எல்லையில் ஏற்பட்ட
பெருந்தோல்வி மௌரியப்பேரரசினை
கொதித்தெழச்செய்
தது.உடனடியாக
பெரும்படை திரட்டப்பட்டது.
முதலில்
துளு நாட்டையும்,
எருமை நாட்டையும்
கடந்து வரும்
வழிகளிலுள்ள
பாறைகளை வெட்டிச்
செப்பனிட்டு மௌரியப்
பெரும்படை வருவதற்கான
பாதைகள் உருவாக்கும்
பணி நடைபெற்றது.
இந்த பெரும் போருக்கான
ஆயத்தப் பணிகள் சில
ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெ
ரிகிறது.
இப்பாறைகளை வெட்டி பாதை அமைக்கும்
பணி குறித்தும், மோகூர்
தலைவன்
பணியாதது குறித்தும்,
வடுகர் வழி காட்டியாக
இருந்து மோரியர்களுக்கு உதவினர்
என்பது குறித்தும் சங்க
புலவர்கள தங்கள் பாடல்களில்
தெரிவித்துள்ளனர். இந்த
பெரும்போருக்கான ஆயத்தப்
பணிகள் முடிந்த பின்
மௌரியப் பேரரசின்
பெரும்படை துளுவ நாட்டில்
வந்து தங்கி, தமிழகத்தின்
மீது படையெடுக்கத்
தயாராகியது//
தமிழகத்துக்கு வந்துள்ள
மிகப்பெரிய ஆபத்தை, சோழ
அரசன்
இளஞ்செட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான்.
எல்லையிலுள்ள படைத்
தலைவர்களை வேளீர்கள் மற்றும்
சிற்றரசர்களை மட்டும்
இப்பெரும்
போருக்கு பொறுப்பாக்குவது
பெரும் ஆபத்தில் முடியும்
என்றெண்ணி, தமிழர் ஐக்கிய
கூட்டணி அரசுகளை (மாமூலனார்
மற்றும் கலிங்க மன்னர்
குறிப்பிடும் தமிழக
அரசுகளின் கூட்டணி)
ஒன்று திரட்டி,
தனது தலைமையில் பெரும்
படையைத் திரட்டுகிறான்.
இப்போர் தமிழகப் போராக, தமிழக
கூட்டணி அரசுகளின் போராக
நடைபெற்ற போதிலும்,
இப்போரின் வெற்றி சோழர்களின்
வெற்றியாகவே வடவரிடத்திலும்,
நமது இலக்கியங்களிலும்,
புராணங்களிலும்
பதிவாகி, சேர,
பாண்டியர்களை விட சோழர்கள்
பெரும் புகழடைகின்றனர்.
தமிழக
கூட்டணி அரசுகளுக்கும்,
மௌரியப்
பேரரசுக்குமிடையே பெரும்
போர் துவங்கியது.
சோழ நாட்டெல்லையிலேய
ே பல தடவை மௌரியர்கள்
தோல்வியுற்றனர். எனினும்
தொடர்ந்து புதுப் புதுப்
படைகளை போருக்கு அனுப்பினர்.
மௌரியப் பேரரசின்
முழு ஆற்றலும்
திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம்
தாக்கப்பட்டது. தமிழகத்தின்
வடபகுதி முழுவதும்
மௌரியப் பெரும்படையால்
தாக்கப்பட்டது. வட
ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற
இடத்தில் நடைபெற்ற
பெரும்போரில்,
இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெருந்தோல்வியடை
யச்
செய்து துரத்தியடித்தான்.
வல்லம் போர் குறித்து அகம் 336-
ல் பாடிய பாவைக்
கொட்டிலார்என்ற பெண்பாற்
புலவர், மௌரியர்களை ஆரியர்
எனக் குறிப்பிடுகிறார்.
மௌரியர்கள் தங்களைஆரியர்
என்றே அழைத்துக்
கொண்டனர். (இது கி.மு.3-ம்
நூற்றாண்டுப் பாடல்//
மௌரியர்கள் சளைக்காமல்
தொடர்ந்து பல தடவை,
பெரும்படைகளை அனுப்பிக்
கொண்டேயிருந்தனர்.
ஆனால் போரில் பெரும்
இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய,
அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத்
தெரியவில்லை.இறுதியில்
தொடர்ந்து அடைந்து வந்த
தோல்விகளால் தாக்குப்பிடிக்க
இயலாமல் பெரும்
இழப்போடு பாழி நகருக்குப்
பின்வாங்கினர்.
இளஞ்செட்
சென்னி போரை தொடர்ந்து நடத்தி,
பாழி நகர்
வரை படையெடுத்துச்
சென்று, அதனைத்
தாக்கி, இறுதியில் பெரும்
வெற்றியை தமிழகத்துக்கு வாங்கித்
தந்தனன்.
முழுமையாக
posted from Bloggeroid
No comments:
Post a Comment