Saturday, 7 June 2014

தமிழீழ போரட்ட பாதை


கொன்றுவிடலாம்,
ஒரு பிரச்னையும்
இல்லை.ஆனால்
பொன்னாலையில்
வேண்டாமே” என்றார் காண்டீபன்.
`அந்தோனியார்
கோயிலுக்கு அவன் வருவான்.
அங்கே வைத்துத்
தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும்
எளிது. என்ன சொல்கிறாய்?’
என்று இன்பம் கேட்டார்.
“கோயில், தேவாலயம் எல்லாம்
வேண்டாம்.
அவனை அவனது அலுவலகத்தில்
வைத்துக் கொல்வதுதான் சரி.
அலுவலகமெல்லாம்
சரிப்படாது. நடு வீதியில்
நாயைச் சுடுவதுபோல்
சுட்டுத் தள்ளவேண்டும்.
வீட்டுக்கே போய்
வேலையை முடித்துவிடலாம்
. காரில்
போகும்போது சுட்டுவிடலாம்.
ஏதாவது விழாவுக்கு வருவான்.
மேடையில்
முடித்துவிடலாம்…”
இடம், தேதி, தருணம்
தீர்மானித்து,
ஒரு திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டுவ
ிட்ட விவரம் தெரியாமல்
நண்பர்கள் லொக்கேஷன்
குறித்து விவாதித்துக்கொண
்டிருந்தார்கள். அவர்கள்
எல்லோருக்கும்
ஒரு கோப்பை தேநீர் போதும்.
குடித்துவிட்டு மணிக்கணக்கில்,
சமயத்தில் முழுநாள் கூட
உட்கார்ந்து விவாதிப்பார்கள்.
பேச்சில் சூடு பறக்கும்.
சிந்திக்கும்
கணத்திலேயே செய்து முடிக்கும்
வெறி கண்ணில்
ஒரு மின்னல்போல் வெட்டும்.
எதைச் செய்யலாம், எப்படிச்
செய்யலாம் என்பதில்
கருத்து வேறுபாடுகள்
ஏராளம் இருந்தாலும்,
ஏதாவது செய்தாகவேண்டும்
என்பதில் யாருக்கும்
இரண்டாவது எண்ணமில்லை.
ஏதாவது செய்வதற்கு ஒரு தொடக்கம்
வேண்டும். முந்தைய
தலைமுறையின் `ஏதாவதுகள்’
எதுவுமே பிரயோஜனமில்லை.
அவர்கள் உண்ணாவிரதம்
இருந்தார்கள். ஊர்வலம்
போனார்கள். கறுப்புக்
கொடி காட்டினார்கள்.
மேடை போட்டுப்
புலம்பினார்கள். கைதாகி,
அடிபட்டு,
எலும்பு முறிந்து படுத்தார்கள்.
என்றாவது ஒருநாள்
ஏதாவது நடக்கும் என்கிற
வண்ணமயமான கனவைச்
சாப்பிட்டபடி வாழ்ந்து முடித்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார்க
ள்.
இனி அந்த வழி உதவாது.
மறு கன்னத்தைக் காட்டிய
பெரியவர்களே,
உங்களை மதிக்கிறோம். ஆனால்
பின்பற்றுவதற்கில்லை.
அறவழிப் போராட்டங்கள்
மனிதர்களுக்குப் புரியும்.
சிங்களர்களுக்குப் புரியாது.
எங்கள் பாதை வேறு. எங்கள்
பயணம் அபாயகரமானது.
பணத்தையல்ல; எங்கள்
உயிரை நாங்கள்
முதலீடு செய்கிறோம்.
நாளைய சந்ததிக்கு சுதந்தரம்
அசலாகவும்,
நிம்மதி வட்டியாகவும்
கிடைத்துவிட்டுப் போகட்டும்.
இதோ, தொடக்கம். ஆனால்
துரதிருஷ்டவசமாக
துரையப்பாவிலிரு
ந்து ஆரம்பிக்கவேண்டி
யிருக்கிறது. ஆல்ஃப்ரட்
தங்கராஜா துரையப்பா.
தமிழர்தான். ஆனால்
தொகுதியில் எந்தத்
தமிழரோடும் உறவற்றவர்.
பிறகு எப்படி வோட்டு வாங்கி 1960
முதல் 65 வரை யாழ்ப்பாணம்
தொகுதியின் எம்.பி.யாக
இருந்தார்
என்று உடனே கேட்பீர்கள்.
தேர்தலில் போட்டியிட்ட
தமிழரசுக் கட்சியும் தமிழ்
காங்கிரஸ் கட்சியும்
தோல்வியடைய,
சுயேச்சையாகநின்ற
துரையப்பா வெற்றி பெற்றது எப்படி என்பீர்கள்.
அடுத்த ரவுண்டில் மேலும்
எப்படி மேயரானார் என்பீர்கள்.
நாங்கள் அரசியல்வாதிகளல்லர்.
ஆனால்
அருவருப்பு அரசியலின்
ஆணிவேர் வரை எங்களுக்குத்
தெரியும். கோட்டைக்குப்
போகும் வேட்கையில்,
வோட்டுக்குப் பேசும்
பேச்சுகளின் அபத்தம்
சாத்வீகிகளுக்குப்
புரியாதிருக்கலாம். அந்தத்
தலைமுறைதான்
அவனை நம்பி உட்காரவைத்தது.
எங்களிடம் அது பலிக்காது.
எத்தனைபேர்
முயற்சி செய்திருக்கிறார்கள்!
அமைதியல்ல;
ஆயுதமே தீர்வு என்று முடிவு செய்து களமிறங்கிய
தலைமுறையின் முதல் நபர்
தொடங்கி அன்றைக்கு அத்தனை பேருக்குமே அதுதான்
முதல் கனவாக இருந்தது.
துரையப்பாவைக்
கொல்லவேண்டும்.
சிவகுமாரன்
முயற்சி செய்திருக்கிறார்.
சத்தியசீலனுக்கு அந்த எண்ணம்
இருந்திருக்கிறது.
அவரது தமிழ் மாணவர்
பேரவையில் இருந்த
அத்தனை பேரும்
ஆசைப்பட்டார்கள்.
பேரவைக்கு வெளியே இருந்த
இளைஞர்களிடையேயும்
அது கனவாக இருந்தது.
இது கொலையல்ல;
களையெடுப்பு.
யாராலும் முடியவில்லை.
சந்தர்ப்பம் அமையவில்லை.
துரையப்பா லேசுப்பட்ட
ஆளில்லை என்பதும்
ஒரு காரணம். மாநகரத் தந்தை.
பாதுகாப்பு பந்தோபஸ்துகள்
அதிகம். அரசியலின்
மேல்மட்டம்வரை தொடர்புகள்
உண்டு.
கொழும்பு செல்வாக்கு அதிகம்.
ஆனாலும் யாழ்ப்பாணம்தான்
அவரது தலைநகரம்.
அங்கே இங்கே நகரமாட்டார்.
எதிரே யாரும் வந்தாலும் சரி,
வராவிட்டாலும் சரி. போகிற
வழியெல்லாம்
மூக்குக்கு நேரே இரு கைளையும்
உயர்த்திக் கும்பிட்டபடி போகிற
பழக்கம் வந்துவிட்டது.
அத்தனை மக்களுக்கும் நண்பன்
என்று சொல்லிக்கொள்வார்.
வடக்கில் இருக்கும்
ஒவ்வொரு தமிழ்க்குடும்பமும்
தனக்கு உறவு என்பார்.
கிறிஸ்தவர் என்றாலும்
ஹிந்து கோயில்களுக்குப்
போவார். கடவுள்
ஒரு பொருட்டில்லை என்றாலும்
அது ஒரு கம்பீரம். ஆஹா, மத
நல்லிணக்கவாதி. நம்மில்
ஒருவர். நமக்காக இருப்பவர்.
அவருக்குத்தான் கட்டம்
கட்டினார்கள். நாங்கள்
கொலை செய்யப்
போவதில்லை.
கொசு மருந்தடிக்கப்
போகிறோம்.
கொசு மருந்தடிப்பது கொலை என்றால்
இதுவும் அப்படியே ஆகுக.
`சீக்கிரம் சொல். எங்கே செய்யப்
போகிறோம்?’ காண்டீபன்
கேட்டார். அவர் அமிர்தலிங்கத்தி
ன் மகன். எனவே அப்பாவின்
வட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட
பொன்னாலை வேண்டாம்
என்று நினைத்தார்.
இது ஒரு பிரச்னை. பெரிய
பிரச்னை. ஒரு பொதுக்காரியம்
என்று எடுத்துக்கொண்டுவிட்ட
பிறகு சொந்த
விருப்பு வெறுப்புகள்
குறுக்கே வருவது அடுக்காது.
இங்கேதான் தடுக்கும்.
இதுதான் காலை வாரும்.
இதற்கு உண்ணாவிரதம்
தேவலை. ஊர்வலமே போதும்.
பொதுக்கூட்டம் இதனினும்
பெரிது. ஏன்
நண்பர்களே உங்களுக்கு இது புரியவில்லை?
போட்டுவைத்த
திட்டத்துக்கு மாற்றாக வந்த
அனைத்து யோசனைகளையும்
அந்த இளைஞன் நிராகரித்தான்.
“காண்டீபன், நீங்கள்
விலகிக்கொள்ளுங்கள். இன்பம்,
நீங்களும்.
நமது நட்பு எப்போதும்
தொடரும். ஆனால்
கடைசி நேரத்தில்
திட்டத்தை மாற்றுவது காரியத்தைக்
கெடுக்கும். நாம் பேசித்தான்
முடிவெடுத்தோம். ஆயிரம்
முறை பேசலாம். ஆனால்
முடிவு என்பது ஒருமுறை எடுப்பது.
இன்னொரு விஷயம். நம்மில்
சிலர் இந்தத் திட்டம்
பற்றி வெளியே பேசுகிறார்கள்
என்று கேள்விப்பட்டேன்.
வேண்டாம், அவர்களும்
விலகிக்கொள்ளட்டும்.
ஒரு துளி பயம்
என்பது ஒரு துளி விஷத்துக்குச்
சமம். எனக்கு அது இல்லை.
எனவே நான்
முடித்துவிடுகிறேன்.”
1954 நவம்பர் 26ம் தேதி பிறந்த
பிரபாகரன், ஆல்ஃப்ரட்
துரையப்பாவை பாயிண்ட்
ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டுக்
கொன்றபோது வயது 21.
அவரது நண்பர்களுக்கும்
கிட்டத்தட்ட அதே வயதுதான்.
அவர்களுக்கெல்லாம்
செய்யவேண்டும் என்கிற எண்ணம்
இருந்தது. செய்து முடிக்கும்
வல்லமை பிரபாகரனுக்கு இருந்தது.
திட்டத்தில் அவர் எந்த
மாறுதலையும்
ஒப்புக்கொள்ளவில்லை.
அதே வட்டுக்கோட்டை தொகுதி.
பொன்னாலை வரதராஜ
பெருமாள் கோயில் வாசல்.
வெள்ளிக்கிழமை தோறும்
துரையப்பா அங்கே வருவார்.
மாலை வேளை பூஜைகளில்
தவறாமல் கலந்துகொள்வார்.
அன்றைக்கும் வந்தார். பிரபாகரன்
காத்திருந்தார். உடன் சில
நண்பர்கள். கிருபாகரன், கலாபதி,
பற்குணம்.
துளி பதற்றமில்லை.
பயமில்லை. கரங்கள்
உதறவில்லை. நான் இதைச்
செய்யப்போகிறேன்.
ஒரே சாட்சி,
பொன்னாலை வரதராஜப்
பெருமாள். அவ்வளவுதான்.
காரிலிருந்து இறங்கிய
துரையப்பா, பிரபாகரனால்
சுடப்பட்டார்.
இறந்து விழுந்தவரை இழுத்துப்
போட்டார்கள். அருகே கிடந்த
துண்டு அட்டை ஒன்றை எடுத்து பிரபாகரன்
வேகமாக ஏதோ கிறுக்கினார்.
அதைத்
தூக்கி துரையப்பாவின்மீ
து போட்டார். அதில் TNT
என்றிருந்தது.
அவர் வந்த
காரிலேயே ஏறிக்கொண்டார்கள
். பற்குணம்
வண்டியை ஓட்டினார்.
நேரே சுன்னாகம் போய், பஸ்
ஸ்டாண்டில் இறங்கி, 769ம் நம்பர்
பஸ்ஸுக்காகக்
காத்திருந்து ஏறி,
யாழ்ப்பாணம்.
இறங்கியதும், “சரி பாப்பம்”
என்று பிரபாகரன்
விடைபெற்றார். இன்னொரு பஸ்
பிடித்து வல்வெட்டித்துறை
க்குப் போனார்.
வீட்டில் அப்பா திருவாசகம்
படித்துக்கொண்டிருந்தார்.
பார்த்ததும் புன்னகை செய்தார்.
அப்பா என்றால் அன்பு.
அப்பா என்றால் புன்னகை.
அப்பா என்றால் சாந்தம்.
“சாப்பிட்டீர்களா அப்பா?”
பிரபாகரன் சாப்பிட்டுவிட்டுப்
படுத்தார். நிம்மதியாகத்
தூங்கினார். செய்தது பற்றிச்
சிந்தனை ஏதுமில்லை.
இனி செய்யவேண்டியது பற்றித்தான்.
(தொடரும்)

posted from Bloggeroid

No comments:

Post a Comment