
----------
1984-ம்
ஆண்டு இரண்டு கோடி ரூபாய்
என்பது மிகப்பெரிய விஷயம்.
சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர்.
அந்தத் தொகையைத் தன் சொந்த
சேமிப்பிலிருந்து எடுத்துக்
கொடுத்ததில் மலைத்துப்
போனார் பிரபாகரன்.
இரவெல்லாம் கண்
விழித்து உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள்.
அத்தனையும் நூறு ரூபாய்
நோட்டுக் கட்டுகள்.
எண்ணி முடித்து எடுத்து வைத்தபோது விடிந்தே போயிருந்தது.
`தம்பி நேரில் வராததில்
முதல்வருக்கு வருத்தம்தான்’ –
பாலசிங்கம்
சொன்னார்.
`அவசியம் நேரில்
பார்த்து நன்றி சொல்லத்தான்
வேண்டும்’ என்றார் பிரபாகரன்.
அந்த வாரமே ஒரு நாள்
குறிக்கப்பட்டது. ராமாவரம்
வீட்டுக்குப் பிரபாகரனும்
பாலசிங்கமும் நேரில்
சென்று எம்.ஜி.ஆரைச்
சந்தித்தார்கள். வரவேற்றார்.
உட்காரச் சொல்லிப் பேச
ஆரம்பித்தார்.
தமிழகத்தில்
இன்றைக்கு இலங்கை குறித்துப்
பேசாத தலைவர்கள்
யாருமில்லை. முதன்முதலில்
அவர்களுக்கு உதவலாம், உதவ
வேண்டும்,
உதவுவது நமது கடமை என்று கருதிச்
செயல்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர்
ஆரம்பித்து வைத்ததைத்தான்
மற்றவர்கள் பின்பற்றத்
தொடங்கினார்கள்.
எம்.ஜி.ஆர். செய்தது வெறும்
பண உதவி மட்டுமல்ல.
விடுதலைப் புலிகள்
அமைப்பு மிகவும் சிக்கலான
ஒரு சூழலில் என்ன
செய்வதென்று புரியாமல்
தடுமாறிக்கொண்டிருந்த சமயம்
அது. அப்போது எம்.ஜி.ஆர்.
நீட்டிய நேசக்கரம், அவர்கள்
தன்னம்பிக்கை இழக்காதிருக்கப்
பேருதவி புரிந்தது.
இந்திய உளவு அமைப்பான RAW
அப்போது போராளிக்
குழுக்களுக்குப்
பயிற்சியளித்துக
்கொண்டிருந்தது.
டெலோ இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இருந்தது.
ப்ளாட் இருந்தது.
நூற்றுக்கணக்கான,
ஆயிரக்கணக்கான இலங்கைப்
போராளி இயக்க இளைஞர்கள் வட
இந்தியாவில் சில ரகசியப்
பயிற்சி முகாம்களில்
மும்முரமாகப்
பயின்றுகொண்டிருந்தார்கள்.
என்ன காரணத்தினாலோ இந்தப்
பயிற்சி முகாமில் பங்குபெற
முதலில்
புலிகளை அழைக்கவில்லை.
பிறகு கடுமையாக
முயற்சி செய்து,
வாதாடித்தான் இடம்பெற
முடிந்தது. ஆனால்,
சொற்பமான
போராளிகளுக்கு மட்டுமே பயிற்சி தர
முடியும்
என்று சொல்லப்பட்டது.
இந்த ஓர வஞ்சனையில் மிகவும்
மனம் நொறுங்கிப்
போயிருந்தார் பிரபாகரன்.
என்னவாவது செய்து தமது போராளிகளுக்கு நல்ல
பயிற்சியளிக்க வேண்டும்,
தரமான
ஆயுதங்களை வாங்கவேண்டும்
என்று எண்ணிக்கொண்டிரு
ந்தவருக்கு எம்.ஜி.ஆர். அளித்த
பணம்
ஒரு வரமாகவே தெரிந்தது.
உடனடியாக
சென்னைக்கு வெளியே புறநகர்ப்
பகுதிகளில் சில
பயிற்சி முகாம்கள்
நிறுவப்பட்டன.
இலங்கையிலிருந்து பல
விடுதலைப் புலிகள்
தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு
இந்த
முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்
கள். மறுபுறம் நவீன
ஆயுதங்களை வாங்குவதற்கான
ஆலோசனைகள் பலமாக
நடைபெற்றன.
பிரபாகரன், `கே.பி.யைக்
கூப்பிடுங்கள்’
என்று சொன்னார்.
கே.பி. என்கிற குட்டி என்கிற
குமரன் பத்மநாதன் என்கிற
செல்வராஜா குமரனைப் பற்றிப்
பொதுவாக
வெளியே யாருக்கும் அதிகம்
தெரியாது. விடுதலைப்
புலிகள் அமைப்பின் ஆயுதக்
கொள்முதல் பிரிவின் தலைவர்
அவர். இலங்கையில்
மயிலிட்டி என்னும் ஊரில்
பிறந்தவர். எளிய மீனவக்
குடும்பம். இளமையில்
வறுமை. கஷ்டப்பட்டுப்
படித்து முன்னேறி,
இயக்கத்துக்காகப் பாதியில்
விட்டவர். தொடக்கத்தில்
`டெலோ’வில் உறுப்பினராக
இருந்தார் கே.பி. குட்டிமணி,
தங்கதுரை காலத்து டெலோ.
உமா மகேஸ்வரன் விவகாரம்
வெடித்து, விடுதலைப்
புலிகள் அமைப்பில்
பிளவு ஏற்பட்டபோது, மனம்
வெறுத்துப் போன பிரபாகரன்,
டெலோவுடன்
இணைந்து செயலாற்ற
முடிவு செய்து அங்கே போனபோது அறிமுகமானவர்.
பிரபாகரன் டெலோவில்
அதிககாலம் இல்லை. ஆனால்,
சில நல்ல நட்புகள்
அவருக்கு அங்கே ஏற்பட்டன.
கே.பி. அதிலொருவர்.
ஒரு சம்பவம் நடந்தது.
வெகு முக்கிய சம்பவம். 1981-ம்
ஆண்டு மார்ச் 25-ம்
தேதி ஒரு பெரும்
கொள்ளைக்குத்
திட்டமிட்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகளும்
டெலோவும்
இணைந்து திட்டமிட்ட
கொள்ளை. நீர்வேலிக்
கொள்ளை என்று சரித்திரம்
அதனைச் சொல்லும்.
வடமராச்சி பகுதியில் உள்ள பல
வங்கிக் கிளைகளிலிருந்து
அன்றைக்குப் பணத்தைத்
திரட்டிக்கொண்டு ஒரு வேன்
யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருந்
தது. அரசாங்கத்துக்குச்
சொந்தமான வேன்.
உள்ளே இருந்த பணத்தின் மொத்த
மதிப்பு எண்பது லட்சம். நல்ல
செக்யூரிடி.
ஆயுததாரிகளின் பாதுகாப்பு.
கொண்டுபோய்த்
தலைமையகத்தில்
சேர்த்துவிட்டால்
தீர்ந்தது விஷயம்.
அப்படியா? நாம் அந்தப்
பணத்தை எடுக்கிறோம்
என்று பிரபாகரன் சொன்னார்.
ஒரு கைத்துப்பாக்கி வாங்கக்கூடப்
பணமில்லாமல் இயக்கங்கள்
அவஸ்தைப் பட்டுக்கொண்டிரு
ந்த தொடக்ககாலத்தில்
வங்கிக்கொள்ளைகள்தான்
அன்றைக்கு அவர்களுக்கு ஒரே வழியாக
இருந்தது.
டெலோவுடன்
இணைந்து செயல்படலாம்
என்று முடிவு செய்து பிரபாகரன்
குழுவினர் வந்து சேர்ந்திருந்த
புதிது. ஒரு கம்பீரமான
தொடக்கமாக
அது அமைவதற்கு இந்தக்
கொள்ளை பெரிதும் உதவும்
என்று இரு தரப்புமே நினைத்திருந்தது
. திட்டமிட்டார்கள். யாழ்ப்பாணம்
பாயிண்ட்
பெட்ரோ நெடுஞ்சாலையெங்க
ும் போராளிகள்
அணி வகுத்து மறைந்து நின்றார்கள்.
வேன் புறப்பட்ட இடத்துக்குச்
சற்றுத்தள்ளி ஒரு மோட்டார்
சைக்கிளில் இளம்
போராளி ஒருவர் தயாராகக்
காத்திருந்தார்.
அவருக்கு இடப்பட்டிருந்த
உத்தரவு, வேனை விடாமல்
பின் தொடர்ந்து வா என்பது.
வேனின் முன்னும் பின்னும்
செக்யூரிடி போலீஸார்
மோட்டார் சைக்கிளில்
வந்துகொண்டிருப்பார்கள்.
அவர்களிடம் ஆயுதம் இருக்கும்.
போலீஸாருக்குப் பின்னால்
இந்த மோட்டார் சைக்கிள்
வரவேண்டும்.
இடையே யாருக்கும் சந்தேகம்
வந்துவிடக் கூடாது.
தாக்குதல் நடத்தத்
திட்டமிடப்பட்டிருந்த
நீர்வேலியை அடைவதற்குச்
சற்றுமுன்னால்
வேகமெடுத்து செக்யூரிடி பைக்குகளைத்
தாண்டி இந்த வண்டி முன்னால்
வரவேண்டும். வேன்
வந்துவிட்டது என்பதை அறிவிக்கும்
எச்சரிக்கை சிக்னல் கொடுக்க
வேண்டும். மிச்ச
வேலையை மறைந்திருக்கும்
விடுதலைப் புலி,
டெலோ போராளிகள்
பார்த்துக்கொள்வார்கள்.
வாக்கி டாக்கிகளோ,
மொபைல்
போன்களோ புழக்கத்தில்
இல்லாத காலம். நேரடித் தகவல்
ஒன்றுதான் வழி.
பாதுகாப்பு பந்தோபஸ்துடன்
வரும் பண வண்டியைப் பின்
தொடர்ந்து வந்து,
ஒரு கட்டத்தில்
முன்னேறி நண்பர்களுக்குத்
தகவல் தந்து காரியத்தைக்
கச்சிதமாக முடிக்கப்
பேருதவி புரியும்
மிகப்பெரிய பொறுப்பு.
செய்து முடித்தவர் கே.பி.,
அன்றைக்குத்தான்பிரபாகரன்
அவரை நெருக்கமாகப்
பார்த்தது. புன்னகை செய்தார்.
கையைப் பற்றி அழுத்தினார்.
நண்பா, நாம் இன்னொரு நாளும்
சந்திப்போம்.
அப்போது நினைத்திருக்க
முடியாது, அந்த
இன்னொரு நாள் சந்திப்பு,
நிரந்தர
உறவாகப்போகிறது என்று.
அப்படித்தான் ஆனது.
நீர்வேலி சம்பவத்துக்குப்
பிறகு கே.பி. தமிழகத்துக்குத்
தப்பி வந்து இருந்தார்.
போராளி இயக்கங்களுக்கு இங்கே ஆயுதங்கள்
வாங்கி அனுப்ப
முயற்சி செய்துகொண்டிருந்த
வக்கீல் கந்தசாமி என்பவரிடம்
அசிஸ்டெண்டாகச் சேர்ந்தார்
கே.பி. மும்பையில் வாசம்.
இந்திய – பாகிஸ்தான்
எல்லையிலும் இந்திய – நேபாள
எல்லையிலும் வேலை.
நிறைய வெளிநாட்டுப்
பயணங்கள். ஒவ்வொரு பயணமும்
புதிய புதிய
பாஸ்போர்ட்களில். கே.பி.
ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.
இன்றைக்குவரை அப்படித்தான்.
அவரிடம்
தாய்லாந்து குடியுரிமை இருப்பதாகச்
சொல்லுவார்கள்.
அவரது தாய்நாட்டுக்
குடியுரிமை எண் 550971231.
எம்.ஜி.ஆர். கொடுத்த பணத்தில்
ஒரு பகுதியை ஆயுதக்
கொள்முதலுக்காகச்
செலவிடுவது என்று முடிவு செய்து கே.பி.யைக்
கூப்பிட்டு விஷயத்தைச்
சொன்னார் பிரபாகரன்.
அநேகமாக புலிகள்
இயக்கத்துக்கென கே.பி. செய்த
முதல் அசைன்மெண்ட்
அதுவாகத்தான்
இருக்கவேண்டும்.
குறுகிய காலத்தில் பல
நாடுகளில்
தனக்கு உருவாகியிருந்த
தொடர்புகளை வைத்து ஏராளமான
நவீனரகத் துப்பாக்கிகள்,
தோட்டாக்கள், கண்ணி வெடிகள்,
தகவல் தொடர்புக்
கருவிகளை வாங்கி பத்திரமாகக்
கப்பலேற்றி அனுப்பிவிட்டார்
கே.பி.
சென்னை துறைமுகத்துக்கு
சரக்கு வந்து சேர்ந்தபோது பிரபாகரனுக்கு இன்னொரு சிக்கல்
வந்தது. ஆயுதங்கள்
வந்துவிட்டன. ஆனால்
எப்படி எடுப்பது? முன்னதாக
உமா மகேஸ்வரன்
இதே மாதிரி ஓர் ஆயுதக்
கொள்முதல் செய்திருந்தார்,
அவருடைய ப்ளாட்
இயக்கத்துக்காக. அதுவும்
இதே மாதிரி சென்னை துறைமுகத்துக்கு
வந்தபோது புலனாய்வு அதிகாரிகள்
மோப்பம் பிடித்துவிட்டார்கள்.
கோடிக்கணக்கான பணம். அசுர
முயற்சி. ஒரு தவம்
மாதிரி செய்து வரவழைத்த
ஆயுதங்கள் அனைத்தும்
கைப்பற்றப்பட்டு, காணாமல்
போயின.
உமா இடிந்தே போய்விட்டார்.
பிரபாகரன் யோசித்தார்.
முயற்சி செய்வது பெரிய
விஷயமில்லை. அது சரியான
பலனைத் தரவேண்டும்.
வேண்டியது கொஞ்சம்
புத்திசாலித்தனம்.
உடனே பாலசிங்கத்தைக்
கூப்பிட்டார். அண்ண, நீங்கள்
முதலமைச்சரிடம் விஷயத்தைச்
சொல்லுங்கள். எதையும்
மறைக்கவேண்டாம்.
நமது ஆயுதக் கப்பல்
வந்திருக்கிறது.
சேதாரமில்லாமல் நமக்குச்
சரக்கு கிடைத்தாக வேண்டும்.
அவர்தான் உதவ வேண்டும்.
அவரால் மட்டும்தான் உதவ
முடியும்.
எம்.ஜி.ஆருடனான அடுத்த
சந்திப்பு அப்போது நடந்தது.
இப்போதும் எம்.ஜி.ஆர்.தான்
உதவினார். சற்றும்
சலனமில்லை. பரபரப்பில்லை.
ஒரு ஈ எறும்புக்கும் விஷயம்
தெரியாது.
ஒரே ஒரு போன்கால்.
யாருக்குச் செய்தார்
என்று யாருக்கும் தெரியாது.
ஆயுதங்கள் அனைத்தும்
அலுங்காமல் குலுங்காமல்
திருவான்மியூர்
வீட்டுக்கு வந்து சேர்ந்தன..
(தொடரும்)
posted from Bloggeroid
No comments:
Post a Comment