Friday, 13 June 2014

நன்றி திருமுருகன் காந்தி

நின்றுபோனது மழைமட்டுமல்ல.
வானம் கிழித்த இரைச்சலில்
கலையாத உறக்கம்
கனவுநீக்கி மண்வாசம்
எழுப்பியது.
தெப்பமாய் நனைந்த
ஜன்னலைத் தடவும்
மரமொன்று
சிறகு ஒடுங்கிய
காக்கைக்கு
இலைகள்
போதாதென்று சுருங்கி நின்றது.
ஓங்கி உயர்த்திய கைகளுடன்
முனிசெய்யும் தவமாய்
மரங்கள் வரங்களை
வேர்களுக்கு பாய்ச்சிக்கொண்ட
ிருந்தது.
எழுதி முடிக்கும் முன்
நின்று போனது மழை.
இரண்டுமுறை சூரியன்
எழுந்து விழுந்த கணத்தில்
விருட்டென பாயும்
சக்கரங்களுக்கிடையே
சிதறும் நிலத்துகள்களில்
மறைந்து போனது
மழையின் மகிழ்ச்சியும்
மண்ணின் வாசமும்.
வெயில்வரட்டும்,
மழையின் நினைவுகளைச்
சுமக்க.

posted from Bloggeroid

No comments:

Post a Comment