என் இனம் என் நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ணமாட்டேன்
வேறு எவரையும் புகழந்துரை சொல்லமாட்டேன்
வரும் புண்மொழி பழியுரை துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்
இந்த பூட்கையில் ஒரடி தள்ள மாட்டேன்!”
# எந்தப் படையினில் நீ இருந்தாலும்
இனத்தை எதிர்த்திடாதே – தமிழா
எதிரிக் குழைத்திடாதே – உன்
சொந்தத் தமையனைத் தம்பியைக் கொல்லவே
சூழ்ச்சி நினைத்திடாதே – பகைவன்
சோற்றில் நனைந்திடாதே.”
#”அதோ என் தமிழரை சிங்களர் கொல்வார்!
ஆடும் என் சதை நரம்பு எல்லாம்!
அடடா! உலகம் கேட்டிடும் பார்த்திடும்!
ஆயினும் அதன்மனம் கல்லாம்!
இதோ, நான் ஒருவன் இங்கிருக் கின்றேன்!
எனைச் சிறைசெய்யினும் செய்க!
ஈழத் தமிழரை ஆதரிக் கின்றேன்!
என்தலை! கொய்யினும் கொய்க!”
#” வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என் கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்!
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலை யிரு கூராய்
போழ்ந்த்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
எரித்தாலும் புதைத்தாலும் என்
அணுக்களெல்லாம் அதுவே!”- #பாவலரேறு #பெருஞ்சித்திரனார்”

posted from Bloggeroid
No comments:
Post a Comment