
சேலத்துக்குப் போய்விடலாம்’
என்று குட்டிமணி சொன்னார்.
அவர் தயாராக இருந்தார்.
தங்கதுரைக்கும்கூட அதுதான்
அப்போது விருப்பம்.
சேலத்தை அவர்கள்
தேர்ந்தெடுக்கக் காரணம்
என்னவென்று சரியாகத்
தெரியவில்லை. நண்பர்கள்
அங்கே இருந்திருக்கலாம்.
வேறு ஏதாவது பணிகள்
இருந்திருக்கலாம்.
பாதுகாப்புக்
காரணங்களுக்காகவும்
இருந்திருக்கலாம்.
ஆனால்
பிரபாகரனுக்கு விருப்பமில்லை.
சேலம் சென்று என்ன செய்வது?
வெறுமனே ஊர்
சுற்றுவது தவிர வேறு எந்தப்
பயனுமில்லை.
தப்பித்து வந்தது,
பதுங்கியிருப்பதற்காக
என்று அவர் கருதவில்லை.
செயல், செயல் முக்கியம்.
ஏதாவது செய்தாக வேண்டும்.
மிகத் தீவிரமாக இயங்கவேண்டிய
தருணம் என்று தனக்குள்
திரும்பத் திரும்பச்
சொல்லிக்கொண்டார்.
ஒரு தாற்காலிக
ஏற்பாடாகவே தமிழகப்
பயணத்தை அவர் எண்ணினார்.
சில நாட்கள் சென்னைக்குச்
சென்று தலைவர்களைச்
சந்திப்பது அவரது முக்கிய
நோக்கமாக இருந்தது.
யாராவது உதவ வேண்டும்
அதற்கு. யார்?
ஒரு செய்தி வந்திருந்தது.
அனுராதபுரம்
சிறைச்சாலையிலிர
ுந்து தப்பித்த
செட்டி தனபாலசிங்கம்
மயிலாப்பூரில்
வசித்துக்கொண்டிருக்கிறான்.
அடடே அப்படியா என்றார்
பிரபாகரன்.
செட்டியை அவருக்குத்
தெரியும். வெகு நன்றாகத்
தெரியும். அவனது சகோதரன்
செல்லக்கிளியையும்
தெரியும். செட்டியின்
பெற்றோர், உறவுக்காரர்கள்
அனைவரையும் தெரியும்.
செட்டி ஒரு மாதிரியான ஆள்.
ஒரு மாதிரி என்றால், உள்ளூர்
கிரிமினல் என்று பொருள்.
கொள்ளைத் திட்டங்களில் ஆர்வம்
கொண்டவன்.
அவனது வயதை ஒத்த தமிழ்
இளைஞர்கள் பலர்
விடுதலை வேட்கையுடன்
ஆயுதம் ஏந்திய சமயம், எந்த
வங்கியில் கைவைக்கலாம்
என்று மட்டுமே பார்த்துக்கொண்ட
ிருந்தவன்.
போராளி இளைஞர்கள்
தமது செயல்பாடுகளின்
ஒரு பகுதியாக
அரசு வங்கிகளில்
கொள்ளையடிப்பதை தமக்குத்தாமே அனுமதித்துக்கொண
்டதைச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொண்டு,
அவர்களுடன்
நட்பு ஏற்படுத்திக்கொண
்டு வரிசையாகக்
கைவரிசை காட்டுவதில்
மும்முரமாக இருந்தவன்.
விடுதலை, தமிழர் நலன்,
மேலான சகவாழ்வு, சுதந்தரக்
காற்று குறித்தெல்லாம்
செட்டிக்கு எக்காலத்திலும்
அக்கறை கிடையாது.
போராளி இளைஞர்கள்
வங்கிக்கொள்ளைகளில்
ஈடுபடுகிறார்களா? நல்லது.
அவர்கள் கொள்ளையடித்த
பணத்தில் ஆயுதம்
வாங்கிக்கொண்டு போகட்டும்.
நான் கூடச் சென்று என்
பங்குக்குக் கொஞ்சம்
அடித்துக்கொள்கிறேன்.
எனக்கு ஆயுதம் வாங்க
வேண்டாம். ஆனால்
ஆகவேண்டிய காரியங்கள்
வேறு பல உண்டு.
பிரபாகரனுக்கு இது தெரியும்.
செட்டி அப்படித்தான். அவனைத்
திருத்த முடியாது.
அது வேறு வார்ப்பு.
ஆனாலும்
பழகுவதற்கு நல்லவன்.
பலமுறை உடன்
உட்கார்ந்து பேசியிருக்கிறான
். போராளி இளைஞர்களின் பல
காரியங்களுக்கு அவ்வப்போது உதவிகூட
செய்திருக்கிறான்.
யாழ்ப்பாணத்தில் அவனைத்
தெரியாத போராளிகள்
கிடையாது. குட்டிமணி,
தங்கதுரை தலைமுறையைச்
சேர்ந்தவர்களிலி
ருந்து பிரபாகரன்
தலைமுறைக்காரர்கள்
வரை அனைவர் மத்தியிலும்
அவன் பிரபலம். மாணவர் பேரவை,
இளைஞர்
பேரவை உறுப்பினர்களுக்
கெல்லாம் கூட அவனைத்
தெரியும்.
தெரியுமே தவிர யாரும்
மதிக்கமாட்டார்கள். பார்த்தால்
ஒரு வணக்கம். நீ சுகமா, நான்
நலம். தீர்ந்தது விஷயம்.
சற்று ஒதுங்கியே இருப்பது வழக்கம்.
பிரபாகரனும் அப்படித்தான்.
ஆனாலும் இந்தச் சமயத்தில்
மயிலாப்பூரில்
செட்டி வந்து தங்கியிருப்பது ஒரு முக்கியமான
செய்தி. சென்னைக்குப்
போகும் எண்ணத்தில் இருந்த
பிரபாகரனுக்கு அது ஒரு நல்ல
செய்தியாகவும் பட்டது.
குறைந்தபட்சம் தங்கிக்கொள்ள
ஓரிடம். போதாது?
பிரபாகரன் வேதாரண்யத்திலிர
ுந்து பஸ் ஏறிப்
புறப்பட்டு மயிலாப்பூர்
வந்து சேர்ந்தார்.
அதற்குள் அவர் செட்டியுடன்
சென்று சேருவது பற்றி,
பெரியஜோதி சேலம்
சென்றிருந்த தங்கதுரைக்கும்
குட்டிமணிக்கும் தகவல்
சொல்லி விட்டார்.
அவர்கள் அதிர்ந்து போனார்கள்.
உடனே பிரபாகரனைத்
தொடர்பு-கொண்டார்கள்.
தம்பி வேண்டாம். அவன்
ஆபத்தானவன். தவிரவும்
உன்னுடைய நோக்கத்துடன்
ஒத்துப்போக முடியாதவன்.
அப்படியா?
செட்டி பிரபாகரனுடன்
வேறு விதமாகத்தான் பேசிக்-
கொண்டிருந்தான். நீங்கள்
எல்லோரும் என்னைத் தவறாகப்
புரிந்து-கொண்டிருக்கிறீர்கள்.
எனக்கும் அக்கறை இருக்கிறது.
எனக்கும் போராட்டத்தில்
ஈடுபாடு இருக்கிறது. நம்
மக்களின் நல்வாழ்வின்மீது
ஈடுபாடு இருக்கிறது.
யாழ்ப்பாணம் திரும்பியபிறகு நீ
வேறு செட்டியைப் பார்க்கப்
போகிறாய், பார்.
பிரபாகரனிடம் இயல்பாக
ஒரு வழக்கம் உண்டு. அவரால்
எந்தக் கூட்டத்திலும் சகஜமாக
இருக்கமுடியும். ஆனால் எந்தக்
கூட்டத்தின் சட்டைச் சாயமும்
தன்மீது ஒட்டாமல்
பார்த்துக்கொள்வார்.
பின்னாளில் `டெலோ’வாக
உருப்பெற்ற தங்கதுரையின்
நண்பர் வட்டத்தில் இருந்தபோதும்
பிரபாகரன்
தனது தனித்துவத்தை விட்டுக்கொடுத்த
தில்லை. செட்டி போன்ற
கிரிமினல்களுடன்
தொடர்பு இருந்தாலும்
தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டதி
ல்லை.
இதோ பார் செட்டி,
வங்கிக்கொள்ளை உனக்கு மிகுந்த
கிளுகிளுப்புத்
தருகிறது என்பதை நான்
அறிவேன்.
கொள்ளையடிப்பது என்
நோக்கமல்ல. ஆனால் இயக்கம்
நடக்கப் பணம் வேண்டும்.
வங்கியில் இருப்பது மக்கள்
பணமல்லவா என்று கேட்காதே.
அது அரசாங்க வங்கி.
கொள்ளையுடன் நீ தேங்கிப்
போவதால் நீ கிரிமினல்
என்று கருதப்படுகிறாய்.
பணமே இல்லாது போனாலும்
என்
செயல்பாடு நிற்கப்போவதில்ல
ை. வித்தியாசம் புரிகிறதா?
நிறையப் பேசினார்கள்.
யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய
பிறகு என்ன-வெல்லாம்
செய்யவேண்டும்
என்று பேசிப்பேசித்
திட்டமிட்டார்கள். திட்டங்கள்
செயல்படுத்தப்படத் தேவையான
பணத்துக்குத்
தானே பொறுப்பு என்று செட்டி சொன்னான்.
வேறென்ன?
வங்கிக்கொள்ளைதான்.
1974-ம் ஆண்டு மத்தியில்
பிரபாகரன் மீண்டும்
இலங்கைக்குத் திரும்பிச்
சென்றார்.
பரபரவென்று காரியங்கள்
நடைபெறத் தொடங்கின.
சாத்வீகிகள் அங்கே தபால் தலைப்
போராட்டம்
என்று ஒன்றை நடத்திக்கொண்டிர
ுந்த போது, பிரபாகரன்
தனது நண்பர்களை அழைத்தார்.
காத்திருந்தது போதும்
நண்பர்களே. நாம் தொடங்கலாம்
என்று சொன்னார். ஒரு பக்கம்
வங்கிக்கொள்ளைகள்
ஆங்காங்கே நடைபெற்றன.
பொறுப்பு செட்டியுடையது.
பிரச்னையே அங்குதான். இயக்கப்
பணிகளுக்காக
என்று சொல்லிவிட்டு நடத்திய
கொள்ளைகளில் பாதிப் பணம்
வந்து சேரவே இல்லை. அடடே,
செட்டி கார்
வாங்கிவிட்டானாமே?
அப்படியா? அவன்
பளபளவென்று சில்க்
சட்டை போட்டுக்கொண்டு போகிறான்,
கமகமவென்று செண்ட்
அடித்துக்கொண்டு வருகிறான்
என்று ஆளுக்கொரு தகவல்
சொன்னார்கள்.
பிரபாகரனுக்கு வெறுப்பாக
இருந்தது. ம்ஹும். சிலரைத்
திருத்தமுடியாது. அதற்காக
வருத்தப்பட்டுக்
கொண்டு உட்கார்ந்திருப்பதில்
அர்த்தமில்லை. சரி, நாம்
குண்டு வைக்கலாம்
என்று எழுந்தார்.
ஒரே நாள். ஒரே சமயம்.
யாழ்ப்பாணத்தின் முக்கியமான
ஒரு கடைவீதி,
ரயில்வே ஸ்டேஷன்,
ஒரு போலீஸ் ஸ்டேஷன்
என்று தேர்ந்தெடுக்-கப்பட்ட சில
இடங்களில் பிரபாகரன் வைத்த
குண்டுகள் வெடித்தன.
சிறீமாவோ பண்டாரநாயகா திரும்பி உட்கார்ந்து வடக்கிருக்க
ஆரம்பித்தார்.
உண்மையில்
பிரபாகரனுக்கு அப்போது பொது அமைதிச்
சீர்குலைவு நோக்கமாக
இருக்கவில்லை.
அவரது இலக்கு வேறு.
ஒரு பெரும்
படுகொலையைத்தான்
தொடக்கப்புள்ளியாக மனத்தில்
குறித்து வைத்திருந்தார்.
முதல் அத்தியாயத்தில் பார்த்த
ஆல்ஃப்ரட் துரையப்பா.
நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டிய
கிருமி என்று தீர்மானம்
செய்திருந்தார்.
அந்த வருடம் ஜனவரியில்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற
நான்காவது உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டின்
இறுதி நாளன்று காவல்
துறையும் நகர மேயரான
துரையப்பாவும்
இணைந்து நடத்திய களேபரத்தில்
ஒன்பது தமிழர்கள்
சுட்டுக்கொல்லப்
பட்டிருந்தார்கள்.
நூற்றுக்கணக்கானவர்கள்
படுகாயமடைந்திருந்தனர்.
தமிழர்கள் அத்தனை பேரின்
வெறுப்பும் அவர் பக்கம்
திரும்பியிருந்தது.
துரையப்பாவின் கணக்கைத்
தீர்த்ததுதான் பிரபாகரனின்
வெளியே தெரிந்த முதல்
செயல்.
அதன்பிறகு அவரது `புதிய
தமிழ்ப் புலிகள்’ புதிய வேகம்
கொண்டு இயங்க
ஆரம்பித்துவிட்டது.
1976 மே 5-ம் தேதி பிரபாகரன்
இயக்கத்துக்கு வேறு பெயர்
வைத்தார். தமிழீழ விடுதலைப்
புலிகள். புதிய
விதிமுறைகள் வகுத்தார்.
புதிய ஒழுக்கங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டன.
பழைய அமைப்பில் இருந்த
பிசிறுகள் அனைத்தும்
சரி செய்யப்பட்டன. சரி செய்ய
முடியாதவை களையப்பட்டன,
செட்டியைப் போல.
(தொடரும்)
posted from Bloggeroid
No comments:
Post a Comment