
தலைவன் மக்கள் விட்டு
எட்ட நின்று..
குளிரூட்டி வாகனத்தில்
தான் மகிழ்ந்திருந்து..
வெயில் காய்ந்த
புழுதி குளித்த
வியர்வை வழிந்தோடும்
மக்கள் முன்..
கசங்காத வெள்ளை வேட்டி
மேடை
தரிசனம் தந்து..
வலு விழந்த
வாழ்விழந்த சொந்தங்கள்
முன்..
நாலு வார்த்தை
நயவஞ்சகமாய் உதிர்த்து…
எதிரி தாழ் பணிந்து
சூழ்ச்சி மகுடம் சூடி…
கேட்ட கேள்வி
நேரிடைப் பதில் இன்றி
மேவிப் பேசி..
வாய்கிழிய
தத்துவம் பேசி…
புத்திசீவித்தனம் என்று
தலைக்கன
ரவுடீசம் செய்து
நடப்பவனல்ல..!
தானைக்கும்
தலைவன்…
தமிழர் தரணிக்கும்
பரணிக்கும்
சொந்தக்காரன்
தமிழர் தளபதி…
தகுதி விகுதி
என்றின்றி…
தமிழ் தாயை
தரையில் வந்து
அவள் நிகராய் நின்று
கையெடுத்து வணங்கி..
அவள் புரியும்
மொழி கொண்டு
உறவாடும் இவனே
உண்மைத் தலைவன்..!
தமிழ் தாய்
மைந்தன்..!
posted from Bloggeroid
No comments:
Post a Comment