
ஈழம் ஒரு இனத்தின் வரலாறு
இன்றுவரை
அழுத கண்ணீரைத்
துடைக்காமல்
தேடிக் கொண்டிருக்கின்ற
ோம்
எங்கள் இனத்தையும்
வாழ்ந்த இடத்தையும்.
முள்வேலியால் அடைக்கப்
பட்ட
முள்ளிவாய்க்கால் எங்கே?
முளைக்கப் பட்டிருக்கிறது
போதி கொண்ட புத்தனின்
விகாரை அங்கே!
பிஞ்சுகள் என்றும் பாராமல்
நஞ்சு வீசிய
வஞ்சகர்கள் நெஞ்சத்தில்
பட்சிகளும் ஒரு நாள்
பித்தெறியும்,
கிழித்தெறியும் என்ற அச்சம்
இல்லாமலா போயிடும்
பொய்யெனத் தெரிந்தும்
பூக்களை பொசிக்கி
எலிகளைச் சுட்டு
புலியென்று
பறை சாற்றிய படைக்கு
மரணித்தவனும் மீண்டும்
மரமாய் எழுவான் என்ற
மரண பயம்
இல்லாமலா போயிடும்.
கொத்துக் கொத்தாய்
குண்டுகள் தூவி
பூச்செண்டுகளை நாசம்
செய்தான்
எங்கள்
உடமைகளை அழித்து
உரிமைகளை சேதம்
செய்தான்.
பறக்கட்டும்
சிங்கக்கொடியென்று
தமிழச்சிகள்
ஆடைகளைக்
கிழித்தெறிந்தான்
ஒழியெட்டும் தமிழென்று
பாலியல் சேதம் செய்தான்
அறியாத சிறுமி முதல்
வயதான ஆயாவரை
உடல்களை ருசிபார்த்தான்
அடங்கிய அப்பாவிகளுக்கு
அடைக்கப் பட்ட
முள்வேலிக்குள்
குண்டுவைத்தே குழிவைத்தான்
வெள்ளை இறக்கைகளை
மெல்லப் பறக்கவிட்டு
கள்ளமில்லாக்
கனவுகளோடு
எண்ணங்களில்லாப்
பள்ளிச் சிறாருக்கும்
குடும்பமே கதியெனக்
கொண்ட
அப்பாவித் தமிழனுக்கும்
யாதறியும்?
நடந்தது யுத்தமா?
தமிழினாய்ப்
பிறந்தது குற்றமா
கொடுமையிலும்
கொடுமை
கண்ணில்லா உலகம் இன்று
கண்ணீர் வடிக்கிறது
ஆழில்லா ஐ நா
அரங்கில்லாமல்
நாடகம் ஆடுகிறது.
உலகப் போர்க்குற்றதினம்
மே 18
தமிழன் உள்ளத்திலும்
தீ சுட்ட தினமும் மே 18
மாண்டவர்கள் தமிழரல்ல
மா வீரர்கள்
ஆமாம்
மறந்துவிட்டான் அந்த
மடையன்
நான்கு பேர் பலியானால்
நாற்பது பேர் புலியாவான்
என்பதை
வென்றுவிட்டோம்,
அழித்து விட்டோம் என்றவன்
இன்று
கூடாரக்
குடிசை அமைக்கின்றான்
பாதுகாப்பு வலையமென .
புத்தன்
புரியவைத்தானோ தெரியாது
அந்தப் பித்தனுக்கு
கருவில் உள்ளவனும்
நாளை களமாடுவானென்று.
இன்றுவரை அழுகின்றோம்
இதுவரைக்கும்
கேள்வியில்லை
இனமொன்ரு அழிந்ததை
சொல்லத்தான்
யாருமில்லை,
உலகம் கண்மூட
ஐ நா
அயர்ந்து தூங்கியது
காடையன் கழியாட்டம்
கண்மூடி வெறியாடியது
அப்பாவித் தமிழந்தானே
கொத்துக் கொத்தாய்ப்
பலியானது
ஈழம் சிதைந்ததா?
எம்மினம் அழிந்ததா?
கனவு கலைந்ததா?
கண்ணீர் ஓய்ந்ததா?
இல்லவே இல்லை
புல்லும் புயல் வீசும் பூமி
என்றும்
புன்னகையே பூசிக்கும்
எங்கள் சாமி
அழிந்தவன் எல்லாம்
புலியில்லை என்பதை ஏன்
இன்னும் உணரவில்லை
சிங்கள ஆர்மி.
தமிழனை அழிக்க
தமிழ் இனத்தை ஒழிக்க
புறப்பட்ட சிங்களனுக்கு
புரியும் ஒருநாள்
தமிழனின் தாகம்
தமிழீழத் தாயகமென்று.
இனத்தின் மணத்தை
சுவாசிக்கத்
தந்தது முள்ளிவாய்க்கால்
இரக்கமில்லா அரக்கர்களினால்
உலகத் தமிழன் உப்புக்
கண்ணீரோடு
இரத்தக் கண்ணீர் வடித்த நாள்
மே 18
என் தேசத்தில்
பாய்ந்தவன் புலியானான்
பயர்ந்தவன் எலியானான்
பலியான அத்தனை பேரும்
மீண்டும் பயிரானான்
தமிழனுக்கு தனி நாடு
போராட்டத்தின் பதிவேடு
தனி ஈழம்
எங்கள் தமிழீழம்.
posted from Bloggeroid
No comments:
Post a Comment