Saturday, 19 July 2014

2008முன்பு வரை இறந்த முதியவர்களின் பிணத்தை பார்க்க தெம்பு இல்லாத எனக்கு இப்பொழுது எல்லாம் உண்ணும் உணவில் குழந்தையின் கை கால்கள் கிடந்தால் கூட அதை எடுத்துவிட்டு சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டேன் இறந்த தாய்யின் மார்பில் பால் உறுஞ்சும் குழந்தைகள் பிணந்துக்கு நடுவில் இருந்தால் கூடஎன்னால் கவிதை எழுத முடிகிறது எனக்கு காதல் வருகிறது என்னால் ஃபுரோனே பார்க்க முடிகிறது என்னுள் இருந்த மனிதத்தை கொண்டு மிருகம் ஆகிவிற்றேன்

posted from Bloggeroid

Tuesday, 15 July 2014

இனவெறியன் யார்?

நான் ஒரு இனவெறியனாம்!
இப்போதுதான்
நிறுவிக்காட்டியதாகக்
கூறினார்கள்!?
என்னால் அதை முழுதும்
மறுக்க முடியவில்லை!
அழிவுக்குத் தள்ளப்படும் ஓர்
இனத்தின் முடிவை
அந்த இனத்திற்கான
உரிமை மறுப்பை
அந்த இனத்தின் உயிரிழப்பை
அந்த இனத்தின் கற்பழிப்பை
தடுத்து நிறுத்தத் தேவை ஓர்
இனவெறியன்தான் என்றால் நான்
இனவெறியனாகவே இருந்துவிட்டுப்
போகிறேன்.
இன்றைய தமிழினத்தின்
நிலையிலிருந்து அதை மீட்டெடுக்கும்
இனவெறியர்களை மேலும்
மேலும்
உருவாக்கவே செய்வேன்.
நான்கே வரியில்
கூறுகிறேன்.
இவ்வுலகத் தமிழரே!
'நல்லவனாக
இருக்கிறாயோ இல்லையோ வல்லவனாக
இரு'
'தமிழன் வாழவேண்டும்
இல்லையேல் எவனும்
வாழக்கூடாது' .

posted from Bloggeroid

Thursday, 10 July 2014

எங்கள் தமீழீழம்


ஈழம் ஒரு இனத்தின் வரலாறு
இன்றுவரை
அழுத கண்ணீரைத்
துடைக்காமல்
தேடிக் கொண்டிருக்கின்ற
ோம்
எங்கள் இனத்தையும்
வாழ்ந்த இடத்தையும்.
முள்வேலியால் அடைக்கப்
பட்ட
முள்ளிவாய்க்கால் எங்கே?
முளைக்கப் பட்டிருக்கிறது
போதி கொண்ட புத்தனின்
விகாரை அங்கே!
பிஞ்சுகள் என்றும் பாராமல்
நஞ்சு வீசிய
வஞ்சகர்கள் நெஞ்சத்தில்
பட்சிகளும் ஒரு நாள்
பித்தெறியும்,
கிழித்தெறியும் என்ற அச்சம்
இல்லாமலா போயிடும்
பொய்யெனத் தெரிந்தும்
பூக்களை பொசிக்கி
எலிகளைச் சுட்டு
புலியென்று
பறை சாற்றிய படைக்கு
மரணித்தவனும் மீண்டும்
மரமாய் எழுவான் என்ற
மரண பயம்
இல்லாமலா போயிடும்.
கொத்துக் கொத்தாய்
குண்டுகள் தூவி
பூச்செண்டுகளை நாசம்
செய்தான்
எங்கள்
உடமைகளை அழித்து
உரிமைகளை சேதம்
செய்தான்.
பறக்கட்டும்
சிங்கக்கொடியென்று
தமிழச்சிகள்
ஆடைகளைக்
கிழித்தெறிந்தான்
ஒழியெட்டும் தமிழென்று
பாலியல் சேதம் செய்தான்
அறியாத சிறுமி முதல்
வயதான ஆயாவரை
உடல்களை ருசிபார்த்தான்
அடங்கிய அப்பாவிகளுக்கு
அடைக்கப் பட்ட
முள்வேலிக்குள்
குண்டுவைத்தே குழிவைத்தான்
வெள்ளை இறக்கைகளை
மெல்லப் பறக்கவிட்டு
கள்ளமில்லாக்
கனவுகளோடு
எண்ணங்களில்லாப்
பள்ளிச் சிறாருக்கும்
குடும்பமே கதியெனக்
கொண்ட
அப்பாவித் தமிழனுக்கும்
யாதறியும்?
நடந்தது யுத்தமா?
தமிழினாய்ப்
பிறந்தது குற்றமா
கொடுமையிலும்
கொடுமை
கண்ணில்லா உலகம் இன்று
கண்ணீர் வடிக்கிறது
ஆழில்லா ஐ நா
அரங்கில்லாமல்
நாடகம் ஆடுகிறது.
உலகப் போர்க்குற்றதினம்
மே 18
தமிழன் உள்ளத்திலும்
தீ சுட்ட தினமும் மே 18
மாண்டவர்கள் தமிழரல்ல
மா வீரர்கள்
ஆமாம்
மறந்துவிட்டான் அந்த
மடையன்
நான்கு பேர் பலியானால்
நாற்பது பேர் புலியாவான்
என்பதை
வென்றுவிட்டோம்,
அழித்து விட்டோம் என்றவன்
இன்று
கூடாரக்
குடிசை அமைக்கின்றான்
பாதுகாப்பு வலையமென .
புத்தன்
புரியவைத்தானோ தெரியாது
அந்தப் பித்தனுக்கு
கருவில் உள்ளவனும்
நாளை களமாடுவானென்று.
இன்றுவரை அழுகின்றோம்
இதுவரைக்கும்
கேள்வியில்லை
இனமொன்ரு அழிந்ததை
சொல்லத்தான்
யாருமில்லை,
உலகம் கண்மூட
ஐ நா
அயர்ந்து தூங்கியது
காடையன் கழியாட்டம்
கண்மூடி வெறியாடியது
அப்பாவித் தமிழந்தானே
கொத்துக் கொத்தாய்ப்
பலியானது
ஈழம் சிதைந்ததா?
எம்மினம் அழிந்ததா?
கனவு கலைந்ததா?
கண்ணீர் ஓய்ந்ததா?
இல்லவே இல்லை
புல்லும் புயல் வீசும் பூமி
என்றும்
புன்னகையே பூசிக்கும்
எங்கள் சாமி
அழிந்தவன் எல்லாம்
புலியில்லை என்பதை ஏன்
இன்னும் உணரவில்லை
சிங்கள ஆர்மி.
தமிழனை அழிக்க
தமிழ் இனத்தை ஒழிக்க
புறப்பட்ட சிங்களனுக்கு
புரியும் ஒருநாள்
தமிழனின் தாகம்
தமிழீழத் தாயகமென்று.
இனத்தின் மணத்தை
சுவாசிக்கத்
தந்தது முள்ளிவாய்க்கால்
இரக்கமில்லா அரக்கர்களினால்
உலகத் தமிழன் உப்புக்
கண்ணீரோடு
இரத்தக் கண்ணீர் வடித்த நாள்
மே 18
என் தேசத்தில்
பாய்ந்தவன் புலியானான்
பயர்ந்தவன் எலியானான்
பலியான அத்தனை பேரும்
மீண்டும் பயிரானான்
தமிழனுக்கு தனி நாடு
போராட்டத்தின் பதிவேடு
தனி ஈழம்
எங்கள் தமிழீழம்.

posted from Bloggeroid

Saturday, 5 July 2014

கரும்புலிகள்


கரும்புலி
சாவுக்குத் தேதிகுறிக்கும்
சரித்திரம்.
கந்தகத்தை மேனியிற் கட்டிய
சந்தனம்.
வீதியுலாவுக்காக
வெளியில் வராத விக்கிரகம்.
உயிர்மூச்சை ஊதிவிடும்
உன்னதம்.
அடிமுடியை அறியமுடியாத
அற்புதம்
தென்றலும் புயலும்
சேர்ந்ததான கலவை.
இவர்களை எழுதத்
தொடங்கினால்…
எந்தமொழியும்
தோற்றுப்போகும்.
வார்த்தைகள்
வறுமை அடையும்
உளவியலாளர்கள்
உள்ளே புகுந்தாலும்
வெறும்கையோடுதான்
வெளியே வருவார்கள்.
கற்பனைக்கவிஞர்கள்
கவிதை எழுதினால்
அற்புதம் என்பார்கள்
அடுத்தவார்த்தை வராது.
சித்திரக்காரர்களும்
தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும்.
பக்கத்திலிருந்து பழகியவர்கள்
கூட
குறிப்புக்கள் மட்டும் தான்
கூறமுடியும்.
ஆழத்தோண்டினாலும்
மூலவேர் தெரியாது.
சமுத்திர நீரை
அகப்பையால்
அள்ளி அளக்கமுடியுமா?
ஓடும் முகிலை
ஏணிவைத்து எட்டித்தொட
முடியுமா?
எதிரியின் எந்தவலுவும்
இறுதியில் இவர்களிடம்
சரணடையும்.
கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர்.
மறுநாள்
வெடித்த
செய்தி வெளிவரும்போது
ஜாதகமும் சோதிடமும்
தங்களுக்குத்
தாங்களே தீமூட்டிக்
கொள்ளும்
காலால் நடந்து
வாயால் மொழிந்து
கையால் தலைவாரிக்
கொண்டு
எல்லோரையும் போலவேதான்
இவர்களும்.
உள்ளே எரியும் விடுதலைக்
கனல்மட்டும்
வேறுபட்டது.
உயிர்ப்
பூவை கிள்ளி எடுத்து
விடுதலைக்கு விலைகொடுக்கும்
வித்தியாசமானவர்கள்.
கிட்ட நெருங்க முடியாத
இலக்குகளைக்கூட
தொட்டு அசைத்துவிடும்
துணிச்சலர் இவர்.
முதுகில்
வேர்க்குரு போட்டாலே..
முந்நூறு மருந்துகள் தேடும்
உலகில்
சாவைத் தம் தோள்களில்
சுமந்து
நொடிகளை கணக்கிட்டு நகரும்
நூதனங்கள்
காற்றிலும் நீரிலும் இவர்கள்
கலக்கும்போது
காற்றுக்கு வேர்க்கும்.
நீர் நெருப்பாகிவிடும்.
இவர்களுக்கு;
சூரியன் கைகளுக்கு எட்டும்
தூரம்தான்.
பசுபிக் சமுத்திரம் முழங்கால்
ஆழம்.
கரும்புலிகள்;
தலைவன் தலைவாரிவிடும்
புயல்கள்.
தாயை நேசிக்கும் அளவுக்கு
தலைவனையும் நேசிப்பவர்கள்.
தாயகத்தை மட்டும்
பூசிப்பவர்கள்.
ஆவிபிரியும் அடுத்த
கணம்பற்றிய அச்சம்
இவர்களின் அகராதியில்
அச்சிடப்படுவதில்லை.
யுலை 5.1987
கருமைக்கும் பெருமை வந்த
நாள்.
புலியொன்று முதல்
கரும்புலியான தினம்
நெல்லியடியில்
“மில்லர்” புதிய
வரலாற்றை தொடக்கிய நாள்.
“எல்லாம் சரி
வடமாராட்சி எமது கட்டுப்பாட்டில்”
கொழும்புக்குச்
செய்தி அனுப்பியவனின்
வாய் மூட முன்னர்
செவிப்பறைகள் கிழிந்தன.
சாவு நேரே ஓடிவந்து
முகத்தில் சந்திக்குமென்று
எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான்.
“உயிராயுதம்” வலுவானது.
கரும்புலிகள்
தேவை அறிந்து செல்பவர்களே அன்றி
சாவை விரும்பிச்
சந்திப்பவர்களல்ல..
இவர்கள் வசந்தம் தழுவாத
கொடிகளோ
முகில்கள் முத்தமிடாத
மலைமுகடுகளோ அல்ல.
இதயம் இரும்பாலானவர்களும்
அல்ல.
பனியாய் உருகும்
நெஞ்சுக்கும்
பாகாய் இனிக்கும்
வார்த்தைகளுக்கும்
உரிமையாளர்கள்.
வெடித்த பின்னரும்
இவர்கள் எல்லோரும்
வெளிச்சத்துக்கு வருவதில்லை.
சுவரொட்டியில் சிரிப்பவர்கள்
சிலர்தான்.
“நடுகல் நாயகர்கள் ” ஆகும்
வாய்ப்பும்
எல்லோருக்கும் ஏற்படப்
போவதும் இல்லை.
கல்லறை கூட இல்லாத
காவியமாய்
வாய்விட்டு சொல்லியழும்
வாய்ப்பும் இல்லாமல்
சிலருக்கு வெளியே தெரியாத
வேரின் வாழ்வு.
பலருக்கு மரணம் வாழ்வின்
முடிவு
கரும்புலிகளின் ஜனனம் மட்டும்
மரணத்தில்தான் ஆரம்பம்
கால நதியில்
இவர்கள் ஓடிக் கரைய
மாட்டார்கள்.
மற்றவர்களுக்கு
இனி என்ன செய்வதுதென்று
தலைவெடிக்கும் போதுதான்
இந்த சுகந்த ஊதுபத்திகள்
உடல்வெடித்துப் போகிறார்கள்.
“ஊரறியாமலே உண்மைகள்
கலங்கும்
ஒருபெரும் சரித்திரம்
ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப்
புரியும்
வெடிமருந்தேற்றிய
வேங்கையைத் தெரியும்”
பூகம்பத்தை போத்தலில்
அடைத்தது போல
வந்தவரிகளில் வென்றவரிகள்
இவை.
கரும்புலிகளுக்கு காணிக்கை என்ன?
கண்ணீரா?
கல்லறையா?
இல்லை.
எதுவுமே இல்லை
நெஞ்சின் நினைவே
நெடிய கோபுரம்.
கரும்புலி அடிமுடி
அறிய முடியாத அற்புதம்!

posted from Bloggeroid

Thursday, 3 July 2014

பண்டிதர் அயோத்திதாசர் முதல் சாதி எதிர்ப்பு போராளி தமிழன்


பண்டிதர் க. அயோத்திதாசர்
1845 வருடம் மே-20 ல்
சென்னையில் பிறந்தார். தன்
இயற்பெயர் காத்தவராயன்.
அப்பா பெயர் கந்தசாமி,
அம்மா பெயர்
தெரியவில்லை.
பண்டிதருடைய
தாத்தா பெயர் கந்தப்பன்.
கந்தப்பன் ஆங்கிலேயரிடம்
வேலை பார்த்தார் . பழைய
ஓலை சுவடிகள், தமிழ்
நூல்கள் வைத்திருந்தார்.
பாரம்பரிய சித்த
மருத்துவராக இருந்தார்.
இன்று நாம் வைத்திருக்கும்

ிருக்குறள் நூல்
பண்டிதறுடைய
தாத்தா பாதுகாத்த
நூலாகும். தன்
தாத்தா கந்தப்பனைபோலவே ம
ிக சிறந்த தமிழ் பண்டிதராக,
சித்த மருத்துவராக
விளங்கினர்.
வல்லகத்தி புலவர்
அயோதிதாசரிடம் கல்வி கற்க
சென்றார். தன் குருவின்பால்
கொண்ட அன்பின்காரணமாக
தன் பெயரை அய்யோதிதாசர்
என்று மாற்றிக்கொண்டார்.
இளமைப்பருவம்
பண்டிதர் வாழ்ந்த
சென்னை பகுதியில் 1869 –
“சூர்யோதயம்” இதழ்
வெளிவந்தது அதை புதுப்ப
ேட்டை வேங்கிடசாமி
பண்டிதர் நடத்தினார். 1871 இல்
“பஞ்சமன் ” இதழும்
வெளிவந்தது. அதில்
தமிழ்,தமிழக
வரலாறு போன்றவற்றை படித்
த பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள்
எப்படி தாழ்த்தப்பட்டார்கள்?
குறித்து விரிவாக
சிந்தித்தார். அதன் பயனாக
சாதியால் ஒடுக்கப்பட்ட
மக்களை எவ்வாறு விடுவிப்ப
து ?
அவர்களை எப்படி அரசியல்
படுத்துவது என சிந்தித்தார்.
தன்
தந்தை கந்தசாமியோடு ஊட்டி
சென்றார் தன் 25 வயதில்
“அத்வைதானந்த”
சபையை 1870௦ இல்
உருவாக்கி நடத்தினார்.நீலகிர
ியில் தேயிலைத் தோட்டப்
பணியாளர்களையும்
மலையின
பழங்குடி மக்களையும்
ஒருங்கிணைத்தார் . இதன்
மூலம் சாதிபேத
உணர்வை ஒழிக்க முற்பட்டார்.
மருத்துவப் பணிகளையும்
செய்தார். மலையின
பெண்ணை கலப்புத் திருமணம்
செய்துகொண்டார். இரங்கூன்
சென்றார்
அங்கே தனக்கு ஒரு ஆண்
குழந்தை பிறந்தது அதற்கு தச
ரதராமன் என் பெயர்
சூட்டினார். அந்த
குழந்தையும்
அவரது மனைவியும்
நோயினால்
இறந்துபோனார்கள்.
திராவிட மகாஜன சபை
இரங்கூனில்
செல்வசெழிப்பாக
வாழ்ந்தாலும் தமிழின மக்கள்
எப்படி சாதியால்
ஒடுக்கப்பட்டார்கள் ?
தீண்டப்படாத மக்களாக
ஒதுக்கப்பட்டது எப்படி ?
என்றும் அவர்கள்
விடுதலை குறித்து சிந்தித்
துக்கொண்டே இருந்தார்.
மீண்டும் ஊட்டி வந்து, தன்
உறவினரான
ரெட்டமலை சினிவாசன்
தங்கை தனலட்சுமியை திரும
ணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு பட்டாபிராமன்,
மாதவராம்,
ஜானகிராமன்,ராஜாராமன் 4
மகன்கள் பிறந்தனர். இந்நேரத்தில்
ஊட்டிக்கு ஓய்வொடுக்க
ஆல்காட் அவர்கள்
வந்திருந்தார். பண்டிதரும்
ரெட்டமலை சினிவசனும்
ஆல்காட்டை சந்தித்துப்பேசின
ார்கள். பல
முறை விவாதித்தனர்.
மதம், பவுத்த மதம்
குறித்து நிறைய
விவாதித்தனர். இச்சந்திப்புகள்
பண்டிதரை இனொரு திசைக்க
ு இட்டுச்சென்றது .
சென்னையில் ஒடுக்கப்பட்ட
மக்கள்
கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை
துவக்கி நடதிதிக்கொண்டிடு
க்கும் அருட் பணியாளர் ஜான்
ரத்தினம்
அவர்களோடு பண்டிதருக்கு ந
ட்பு ஏற்பட்டது.
ஒத்தக்கருத்துகொண்ட
இருவரும்
சேர்ந்து பணியாற்றினார்கள்.
ஜான் ரத்தினம் 1882 இல்
திராவிடர் கழகம் என்ற
ஒரு அமைப்பை நடத்திவந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள்
விழிப்புணர்வு பெறவேண்ட
ும் என்பதற்காக 1885 இல்
“திராவிட பாண்டியன் ”
என்னும் இதழை துவக்கினார்.
அந்த இதழின்
துணை ஆசிரியராக பண்டிதர்
பொறுப்பேற்றார்.பின்னால்
தமிழன் இதழ் சிறப்பாக
நடத்தியதற்கு இந்த
பின்புலமே காரணமாக
இருந்தது.
பண்டிதருக்கு அம்பிகாதேவி
, மாயாதேவி என்ற
இரு மகள்கள் பிறந்தனர்.
நாராதீய புராண சங்கைத்
தெளிவு
ஆல்காட் , ஜான் ரத்தினம்
இருவருடைய
தோழமையினால் பண்டிதரின்
சிந்தனை விசாலமடைந்தது .
தமிழின பூர்வக்குடிகள் ஏன்
தீண்டத்தகாதவர்களாக
ஆனார்கள் ? என்ற தேடுதலால்
ஊருஊராயி சுற்றித்திருந்த
ார். அப்போதுதான் “நாராதீய
சங்கைத் தெளிவு ” எனும்
ஓலைச்சுவடி கிடைத்தது.
அதில் பவுத்தர்கள்
எப்படி தீண்டத்தகாதவர்களாக
ஆனார்கள் என்பதையும்
சாதி பேத விவரங்களையும்
விவரித்திருந்தது. அதன் 570
பாக்களையும்
படித்துவிட்டு , தன் நெடிய
ஆராய்ச்சியின் விளைவாக
பவுத்தத்தின்
அடிப்படையை தாம்
வந்தடைந்ததாக பண்டிதர்
குறிப்பிடுகிறார்.
நீலகிரியில்
ஏற்கனவே ஒடுக்கப்பட்டோரை
ஒருங்கிணைத்து “திராவிட
மகாஜன சபை ” யை 1890 இல்
துவக்கி நடத்தினார் .
திராவிட மகாஜன சபையின்
சார்பாக
ஒரு மாநாட்டை ௦01-12-1891
இல் ஊட்டியில் நடத்தினார்
இதில் பல தீர்மானங்கள்
நிறைவேற்றி காங்கிரஸ்
செயலாளருக்கும் பிரிட்டிஷ்
அரசுக்கும் அனுப்பட்டது.
அத்தீர்மானங்கள்:
பறையர் எனக்
கூறுவது அவதூறு,
குற்றம் என சட்டம்
இயற்றவேண்டும்
கல்வி வசதி வேண்டும்
கல்வி உதவித்
தொகை அளிக்கவேண்டும்
கல்வி கற்றவர்களுக்கு அரசு வ
ேலை
உள்ளாட்சி அமைப்புகளில்
பிரதிநிதித்துவம்
பொது இடங்களில் நுழைய
உரிமை
அரசு அலுவலகங்களில்
நுழைய அனுமதி
கிராம முன்சீப் பதவி
கிராம
புறம்போக்கு தரிசு நிலங்கள்
வழங்கவேண்டும்
சிறைச்சாலை சட்டம் 464
பிரிவை நீக்குதல்
1892 ஏப்ரல் மாதம்
சென்னை விக்டோரியா அரங்க
ில் நடைபெற்ற
சென்னை மகாஜன
சபை மாநாட்டில்,
நீலகிரி பிரதிநிதியாக
பண்டிதர்
கலந்துகொண்டார் .இம்மாநாட்
டில்தான்
ஒடுக்கப்பட்டோருக்கு இலவச
கல்வி ,புறம்போக்கு தரிசு ந
ிலம்,
வேலைவாய்ப்பு போன்ற
கோரிக்கைகளை முன்வைத்த
ார். இறைவனை வழிபட
கோவிலுக்குள் நுழைய
அனுமதி கேட்டபோது,
அரங்கத்தில் உள்ள அனைவரும்
எழந்து நின்று ” அந்த
பறையனை வெளியே துரத்த
ுங்கள் ” என சத்தம்
போட்டார்கள் .
பண்டிதருக்கு ஒரே அதிர்ச்சி.
நாங்கள் இந்துக்கள் தானே ஏன்
கோவிலுக்குள் நுழைய
அனுமதி மறுக்கிறீர்கள் என
திரும்பத்திரும்ப கோபமாக
கேட்டார். “உங்களுக்குத்தான்
முனியாண்டி,
காளியாத்தா ,
மாரியாத்தா இருக்க்கே அதை
கும்பிடுங்கோ ”
என்று சொல்லி பண்டிதரை ம
ாநாட்டைவிட்டு விரட்டிவ
ிட்டனர். பண்டிதர் கடும்
கோபத்தோடு ஊர்
திரும்பினார்
தமிழன் இதழ் 102 ஆண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
கடைசியில் தொல்தமிழர்கள்
சாதியற்ற திராவிடர்கள்
உரிமைகளைப் பற்றி பேசி,
வேத
பிராமணீயத்தை எதிர்த்து,
சாதி ஒழிப்பு,
சுயமரியாதை ,
பகுத்தறிவு,
பிரதிநிதித்துவம் போன்ற
நவீன
கருத்தாக்கங்களை உருவாகிய
ண்டிதர் க. அயோத்திதாசரின்
தமிழன் இதழ், 102 ஆண்டுகள்
நிறைவு பெற்றுள்ளது.
சென்னை இரயப்பெட்டையிலி
ருந்து புதன் தோறும்
19.06.1907 முதல்
நான்கு பக்கங்களுடன்
அன்றைய
காலணா விலையில்
“ஒரு பைசாத்
தமிழன்”என்று தனித்துவமாய்
பெயர்
சூட்டப்பட்டு வெளிவந்தது.
இந்த இதழ் யாருக்காக
வெளிவருகிறது எனவும்
விளக்குகிறார். ” உயர்
நிலையும்,
இடைநிலையும் ,கடை நில
ையும் பாகுபடுத்தி அறிய
முடியாத மக்களுக்கு நீதி ,
சரியான பாதை ,
நேர்மை ஆகியவற்றை கற்பிப்ப
தற்காக, சில
தத்துவவாதிகளும்
இயற்கை விஞ்ஞானிகளும் ,
கணிதவியலாளரும்
இலக்கியவாதிகளும் பலரும்
ஒன்று கூடி இப்பத்திரிக்கைய
ை வெளியிட்டிருக்கிறோம்
. தமிழ் மனம் பரவ விரும்பும்
தமிழர் ஒவ்வொருவரும்
கையொப்பம்
வைத்திதனை யாதரிக்க
கோருகிறோம் .” என
அறிவிக்கிறார்.
இதழின் முகப்பில்
“ஒரு பைசாத் தமிழன்”
என்று இதழின் பெயரை புத்த
குறியீட்டு வடிவமான
ஒன்பது தாமரை இதழ்களின்
மீது எழுதி அதன் இடப்புறம்
‘ஜெ ய து ‘ என்றும் வலப்புறம்
‘மங்களம்’ என்றும் எழுதியும்
நடுவில்
நன்மைக்கடைபிடி என
எழுதி இரு புறமும் மலர்
கொத்து என
அழகுணர்வோடு மிக
நேர்த்தியாக தன் இதழின்
சின்னத்தை வடிவமைத்திருக்
கிறார்.
முதல் இதழில் கடவுள்
வாழ்த்து , அரசர்
வாழ்த்து ,தமிழ்
வாழ்த்து,பூர்வத்
தமிழொளி (அரசியல் தொடர்)
வர்த்தமானங்கள்
(நாட்டு நடப்புச்செய்திகள் )
சித்த மருத்துவ குறிப்புகள்
இடம்பெற்றன.
ஓராண்டுக்குப்
பிறகு வாசகர்களின்
வேண்டுகோளுக்கிணங்க ”
அச்சுக் கூடமும் பத்திரிகைப்
பெயரும் மாறுதல்
அடைந்தது” 26.08 .1908 என
விளக்கமளித்து “ஒரு பைசா”
நீக்கப்பெற்றது. பெண்கள்
கல்வி, வேலை வாய்ப்பு ,
வானிலை அறிக்கைகள்,
வாசகர் கடிதம் , அயல்
நாட்டு செய்திகள் ,
விளம்பரம், நூல் விமர்சனங்கள்
போன்றவை பிரசுரமாயின
தமிழகர்கள் அதிகம் வாழும்
கர்நாடக, கோலார் தங்க வயல் ,
பர்மா தென்னாப்பிரிக்கா சிங்
கப்பூர் போன்ற நாடுகளில்
தமிழன் இதழ்
பரவியது.இந்து மதத்தில்
காணப்படும்
மூடநம்பிக்கைகளை மிக
கடுமையாக விமர்சித்தது.
தமிழகத்தில் எந்த இயக்கமும்
தோன்றாத காலத்தில் வேத
மத , பிராமணீய எதிர்ப்பு ,
சாதி ஒழிப்பு , தமிழ்
மொழியுணர்வு ,
பகுத்தறிவு சமுக
நீதி பிரதிநித்துவம் ,தலித்
விடுதலை ,சுயமரியாதை
இந்தி எதிர்ப்பு பெண்
விடுதலை போன்ற
கருத்துகளை உரையாடல்
செய்து பல
இயக்கங்களுக்கு ஒரு முழும
ையான அரசியல் கருத்துத்
தொகுப்பை வழங்கிய தமிழன்
இதழ் குறித்து யாரும் பேச
தயக்கப்படுகிரர்கள்.இதழியலு
ம் அரசியலிலும் நவீனம்
குறித்த கருத்தாக்கங்கள்
தமிழன்
இதழிலிருந்தே துவக்கம்
பெற்றன என்று நாம்
உறுதியாக கூறலாம்.
தமிழ்த் தேசிய தந்தை
சென்னை ஆயிரம்
விளக்குப்பகுதியில்
பிறந்து (20.05.1845 )
சிறுவயதில்
நீலமலைக்கு குடிபெயர்ந்து
அங்கே ஒடுக்கப்பட்ட
மக்களை அணிதிரட்டி 1870 இல்
‘அத்வைதானந்த சபை ‘
ஒன்றை நிறுவி கிருத்துவ
மத மாற்றத்திற்கு எதிராக
செயல் பட்டார்.
அவரது குடும்பம் வைணவ மத
மரபுகளை பின்பற்றியவர்கள்.
அத்வைத வேதாந்தத்தில்
ஈடுபாடு கொண்டிருந்தால
ும் அதனுடைய
இறைக்கொள்கை –
சடங்குவாதம் -
ஆண்மீகக்கொள்கை – மத
பண்பாட்டுத்தளங்கள் என
அனைத்து வடிவங்களுக்க்ம்
எதிரான
ஒரு பகுத்தறிவு ரீதியான
விடுதலை மெய்யியலே அவ
ரது தேடலாக இருந்தது. அதன்
அடிப்படையில் சுய
சிந்தனை, சுய கருத்தியல்
தேடலாக்கவுமிருந்தது.
பண்டிதருடைய காலத்தில்
இந்துத்துவம் மீட்டுருவாக்கம்
செய்த காலம்.
பிரம்மா சமாஜம், ஆரிய
சமாஜம் போன்ற அமைப்புகள்
மூலம் அனைத்தையும்
இந்துக்குள் வலிய திணித்த
காலம். 1861 – 1891
வரை ‘யாரெல்லாம்
கிறித்துவர்கள்
இசுலாமியர்கள்
இல்லையோ அவர்களெல்லாம்
“இந்து” என பதிவு செய்த
காலம்.
பண்டிதர் வைணவ
மரபை ஆதரித்தாலும் “இந்து”
என்ற அடையாளத்தை ஏற்க
மறுத்தார்.
அவ்வாறு இந்து அடையாளத்த
ை ஏற்றுக்கொண்டால்,
இந்து சமூகத்தின் சாதிய
அமைப்பை ஏற்றுக்கொள்ளவே
ண்டும்.
தீண்டாமை,காணாமை,
சாதியக்
கொடுமையை அதிகமாக
அனுபவகிக்கும் தலித்கள்
ஒருபோதும் “இந்து”
அடையாளத்தை ஏற்கக்கூடாத
ு அதற்கு மாற்றாக
ஒரு அடையாளத்தை தேடத்து
வங்குகிறார். தமிழகத்தில்
அப்போது பக்தி வடிவங்களில்
தமிழ்-சைவ மீட்டுருவாக்கம்
முயற்சி நடந்தது.
இது ஒருவகையில்
சாதியத்தை உள் வாங்கலின்
ஒரு முயற்சியாகவே இருந்தத
ு. அதாவது தமிழ்-சைவம்
பிராமண எதிர்ப்புப்
பேசியது ‘சாதி ஒழிப்பு ‘
குறித்து மௌனம்
காத்தது என்பதால் தமிழ்-
சைவத்தோடு இணைய
வில்லை.
இதற்கிடையில் 1881 களில்
ஆங்கில அரசு மக்கள்
தொகை கணக்கெடுப்பு பணி
களில்
புகுந்து தலித்துகளுக்கு த
னித்துவமான்
அடையாளத்தை பதிவு செய்க
ிறார். “ஆதிதமிழன்” original
tamils என்று பதிவு செய்ய
வேண்டுமென
வற்புறுத்துகிறார்.
அப்போதெல்லாம் சாதியைச்
சொல்லித்தான் அழைப்பார்கள்.
சாதிதான்
தமிழனுக்கு அடையாளமாக
இருந்தக்காலம். அரிஜன் என்ற
வார்த்தை புழக்கத்தில்
இல்லை அதற்கு பதிலாக
“பஞ்சமர்கள்” என்றும் Depressed
Class
என்று அழைப்பதை மறுத்து “
ஆதி தமிழன்” என அழைத்தார்.
சாதியின் பெயரால்
அழைக்கப்பட்ட
தமிழர்களை சாதியற்ற
தமிழர்களாக பதிவு செய்தார்.
இழிவான
பெர்யர்களை மறுப்பது என்பது
கூட
சாதி ஒழிப்புக்கு வழிஎன்றா
ர். 1886 ஆண்டில்
“ஆதி தமிழர்கள் (தலித்கள்)
இம்மண்ணின் மைந்தர்கள்,
அவர்கள் இந்துக்கள் அல்ல” என
அறிக்கைவிட்டார். “நீண்ட
காலத்த்ற்கு முன் நிலவிய
பிராமணிய எதிர்ப்பு மரபின்
வாரிசுகளே அவர்கள்”
என்றார். தமிழ், தமிழன்
அடையாளத்தை தலித்
மக்களை மையமாகக்கொண்டு
ஒரு தேசியத்தை கட்டமைக்க
முயற்சிக்கிறார்.
பிரம்மா ஞான சபை ஆல்காட்
( 1832 – 1907 ) ஏற்பட்ட
தொடர்பால்,
தீண்டதாருக்கு கல்வி கற்க
அனுமதி மறுக்கப்பட்ட
சூழலில், சென்னையில்
முக்கியமான் 5 இடங்களில்
“ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் ” என
தலித்துகளுக்கு இலவச
பள்ளிகளை நிறுவினார்.
இருந்தபோதும் பிரம்மா ஞான
சபை பண்டிதரின்
தேடலுக்கு இசைவானதாக
இல்லை. கல்வியால்
மட்டுமே தலித்
மக்களை முன்னேற்ற
முடியும் என்ற
நம்பிக்கையில்
தலித்துகளுக்காக
ஒரு பெரிய
பள்ளியை சென்னையில்
நடத்திய அருட் திரு.டி. ஜான்
ரத்தினம்
அவர்களோடு நட்புகொண்டார்
, அவரோடு “திராவிட
பாண்டியன்” இதழ் நடத்தினார்.
இருந்தும் ஜான் ரத்தினம் போல
கிறித்துவ
மதத்திற்கு மாறவில்லை.
இந்தியாவில் அப்போதிருந்த
ஒரே கட்சி இந்திய தேசிய
காங்கிரஸ் கட்சி.
அதை “இந்து” பிராமணக்
கட்சி என்று ஒதுக்கிவிட்டார்.
மேற்கண்ட
அனதைது அமைப்புகளிலிரி
ந்தும் வேறுபட்டும்
அவற்றிக்கு எதிராகவும் சுய
அரசியலை சுய
கருத்தியலை நோக்கி நகர்கிற
ார்.
ஒடுக்கப்பட்ட
மக்களை ஒடுக்குவதற்காக
எழுப்பிய பண்பாட்டு , மதத்
தடைகளை நீக்குவது மட்டும
ே ஒடுக்கப்பட்ட மக்களின்
மெய்யான
விடுதலையை கொண்டுவர
ும். அதற்கான மரபுகளைத்
தேடிக்கண்டுபிடிதார்.
அது “பௌத்தம்” என்ற
சாதி ,வருண
எதிர்ப்பு மதம்தான்
பண்டிதருக்கு புகலிடமாகபட்
டது. ஆல்காட்டின்
உதவியோடு 1898 இல்
பௌத்தம் தழுவினார்.
சென்னை இராயப்பேட்டையில்
‘சாக்கிய பௌத்த சங்கம் ‘
நிறுவினார். சாதியற்ற
திராவிடர்களுக்கு முன்னோ
ர் வரலாறுகளையும் பௌத்த
தன்மத்தையும் விளக்குதல்
மற்றும் நற்பண்பிலும் சமய
ஒழுக்கத்திலும்
தலித்துகளை முன்னேற்றுத
ல் போன்ற நோக்கங்களாக
இருந்தது.
பண்டிதர் நடத்திய
ஏழு ஆண்டு தமிழன்
இதழ்களை காலவரிசையில்
பார்த்தால், பண்டிதரால்
உருவாக முடிந்த மாற்றுச்
சிந்தனைகள், மாற்றுக்
கதையாடல்கள்,
மாற்று வரலாற்ரைகாணலாம்
. சுய அரசியல்
உருவாக்கத்தைக் காணலாம்.
சாதி இழிவை அகற்றுவது
இழிதொழில்களை, சாதிப்
பெயர்களை மறுத்தார்.அவர்கள
ை சாதியர்றோர் என புதிய
வரலாற்றை எழுதினர்.
தலித்களுக்கு விடுதலையு
ம் அதிகாரமும்
வேண்டுமெண்டார்.
சமுதாய சமத்துவம்,
சாதி பேதமற்ற
சமூகத்தை கட்டமைக்க
விரும்பினார்.
அதற்கு பண்டிதர்
வழிகாடியகவும்
இருக்கிறார்.
பிராமணீய இந்துமத
எதிர்ப்பு யாவும் தன் சொந்த
பட்டறிவின் மூலம் பெற்ற
ஞானமாகும்.
பண்டிதர் காலத்தில்
வெளிவந்த தமிழ் இதழ்களின்
பெயர்கள்
ஞான போதினி,
பிரம்மா ஞானபோதினி,
சுகிர்த வர்த்தமானி,
நீலலோசினி, விகடதூதன்,
சுதேசமித்திரன், பிரபஞ்ச
மித்திரன்,
புதுவை மித்திரன்,
நாஞ்சில் நேசன்
தென்ன்னிந்திய டைம்சு….என
வடமொழியிலும்
ஆங்கிலத்திலும் வெளிவந்த
காலத்தில் , இன உணர்வேடு ,
இனிய தமிழில் தமிழன்
எனபெயர் சூட்டி ஒரு வார
ஏட்டை நடத்திய முதல்
தமிழ்த்தேச உணர்வின்
முன்னோடி பண்டிதர் க
அயோத்திதாசர் ஆவார்.
இந்திய பாரம்பரியம் பௌத்தம்
மதமாக இருந்தது என்பார்.
அதனை தன் தமிழ்
புலமை மூலம்
விளக்குகிறார்.
இந்தியா என்ற சொல் ‘இந்திரம்’
என்பதின் திரிபு.
இந்தியாவை புத்தனும்
அவனைக் குருவாக கருதும்
மக்களும் வாழும்
நாட்டிற்கு ‘இந்திரதேசம்’
என்ற பெயர் வந்தது. ஆரியர்
வருக்கைக்கு முன்
இங்கே ஒரு தேசம் இருந்தது.
இந்த தேசியத்தை பவுத்தம்
உருவாகியது. அதில்
பகுத்தறிவு, மனித
நேயம் ,சமயம்,
அறக்கருத்தொற்றுமை,மெய்
யியல் மற்றும்
நடைமுறை சார்பானதாகவே
இருந்து வந்திருக்கின்றது.
இதில் அந்நியரான
வெளியாரின் ஊடுருவால்,
படையெடுப்பால்
காலப்போக்கில் அது மந்திர
மாயத்தன்மையென
திரிக்கப்பட்டது.
அதாவது சொந்த நாட்டின்
சாதியற்ற பண்பாட்டை அயல்
சக்திகள், வெளியாட்ட்கள்
நசித்து திரித்துவிட்டார்கள்.
”மண்ணின்
மைதர்களே இமண்ணை ஆளவே
ண்டும்” என்கிறார். 30-10-1912
தமிழனில் எழுதுகிறார்
சுதந்திரம் அளித்தால்
இம்மண்ணின் மைந்தரான
தமிழருக்கே வழங்கவேண்டும்
என்றார். ” தமிழ் மொழியில்
பிறந்து, தமிழ் மொழியில்
வளர்ந்து, தமிழ் மொழிக்குச்
சொந்தமான பூர்வக்குடிகள்
சுதேசிகளுக்கு வழங்கவேண்
டும் ” மேலும் ”
கருணை தாங்கிய ஆங்கில
ஆட்சியாளர்களே சுதேசிகள்
மீது கருணை பாவித்து ஆட்ச
ி அதிகாரத்தை இத்தேச
பூர்வகுடிகளுக்கு அளிப்பத
ே கருணையாகும்.
நேற்று குடியேறி வந்தவர்கள
ையும் முன்னர்
குடியேறி வந்தவர்களையும்
சுதேசிகள் என
கருதி அவர்களிடம்
ஆட்சியை வழங்கினால்,
நாடு பாழாகி சீர்கெட்டுவி
டும்” என
நாடு விடுதலை பெற 35
ஆண்டுகளுக்கு முன்னரே எச்ச
ரிக்கிறார். புரட்சியாளர்
அம்பேத்கார் 1930 களில்
தலித்கள்
ஒரு தேசத்தை ஆளுகிற
வர்க்கமாக மாற
வேண்டுமென்கிறார்.
பிறப்பால் ஏற்படும்
ஏற்றத்தாழ்வுகளை அழித்து ச
மத்துவத்தை நோக்கி நடைப
ோடும் ஓர் அரசியல்
கருத்தியலை உருவாக்கும்
ஒரு தேசியத்தை கட்டமைக்கவ
ேண்டும். அதற்கு நாம்
அரசியல்
அதிகாரத்தை கைப்பற்ற
வெண்டும்.
அதற்கு பண்டிதரும்,
புரட்சியாளரும்
வழிகாட்டியாக
இருக்கிறார்கள

posted from Bloggeroid

Wednesday, 2 July 2014

தமிழன் இந்து? இந்து தமிழனா?

இந்துக்கள்
பார்ப்பனனை தலைவராக
ஏற்கிறீர்கள்..
தமிழர்களாகிய நாங்கள்
தமிழனை தலைவனாக
ஏற்கிறோம்....
நீங்கள்
சமசுகிருதத்தை வழிபாட்
டு மொழி என்கிறீர்கள்,,
நாங்கள் தமிழே தெய்வ
மொழி என்கிறோம்....
நீங்கள் இசுலாமியர்களை,
கிறித்துவர்களை எதிரிக
ளாகப் பார்க்கிறீர்கள்...
நாங்கள் அவர்களை சக
மனிதர்களாகப் ,
உறவுகளாகப்
பார்க்கிறோம்...
நீங்கள் பகவத்
கீதையை உங்கள் புனித
நூலாகப் பார்க்கிறீர்கள்..
நாங்கள் திருக்குறளைப்
பார்க்கிறோம்.......
தமிழன் இந்து அல்ல....
தமிழனின் மதம் அவன்
வாழ்க்கை முறையே...
இயற்கையோடு இயைந்த
வாழ்வு தமிழனுடையது .
... பல்லாயிரம் ஆண்டுகால
எங்கள் பட்டறிவுடன்
கூடிய அறிவியல்
வாழ்வியலை,
கடவுளுடன்
கலந்து சொன்னால்
பல்லாயிரம் ஆண்டுகாலம்
நீடிக்கும் என்பது என்
முப்பாட்டனின் கணிப்பு....
எப்போது பார்ப்பனன் தமிழ்
மண்ணுக்கு வந்தானோ,
சாதிகளை கூடவே கொ
ண்டுவந்தான்...
சாதிகளைப்
புகுத்தினான்...மேல்சாத
ி,கீழ்சாதி என்கிற
நஞ்சையும்
புகுத்தினான்....
ஆகவே பார்ப்பனிய
மதமே இந்து மதம்....
நாங்கள் என்றுமே பகவத்
கீதையைப்
படித்ததில்லை....
எங்களுக்கு என்று மதத்தல
ைவன்
என்றுமே இருந்ததில்லை.
கட்டுப்பாடுகள்
எமக்கு இல்லை.... எம்
முப்பாட்டன் முருகனும்,
பெண்கடவுள் அம்மனும்,
எல்லைச்சாமி அய்யனாரும
ே என் கடவுள்....எம்
குடிகாக்க உயிர்
கொடுத்த மறவர்களே எம்
குலதெய்வங்கள்....
நடுகல்லும்,வாளும்
வேல்கம்புமே எம்
குறியீடுகள்.... திருநீர்,
துளசி,சந்தானம்
குங்குமம் . வெத்திலை,
பாக்கு, தேங்காய் ,
பூசணிக்காய்,
பூசணி பூ, என
அனைத்தும் எம்
உடலையும், மனதையும்
போற்றி பாதுகாக்கும்
அணிகலன்கள்......
வெள்ளையன் வந்தான்.....
இந்து என்றான்.,..
இந்தியா என்றான்...
இந்நாட்டில்
எவனெவனெல்லாம்
கிறித்துவன்,
இசுலாமியன்.புத்தன்,பார்
சி இல்லையோ,
அவனெல்லாம்
இந்து என்றது பார்ப்பனர்கள்
எழுதிய அரசியலமைப்புச்
சட்டம் சொல்வதால்,
தமிழனும் இந்து ஆனான்...
அதனால்தான்,
இந்து என்பவன் இன்னும்
என்னை அடிமைப்படுத்திக
ொன்டு நம்மைச்
சுரண்டிக்கொண்டிருக்கி
றான்..........
தமிழர்களே,
விழியுங்கள் ......நம்மைச்
சுரண்டும் மத
அரசியலுக்கு முற்றுப்
புள்ளி வைப்போம்...தமிழ
ியம் என அறிவியல் கலந்த
நம்
வாழ்வியலை முன்னெடு
ப்போம்..

posted from Bloggeroid