Wednesday, 21 May 2014

சமதளநாயகன் என்றுஅழைக்கப்பட்ட பால்ராஜ்

சமதளங்களின் சமரன்
என்று அழைக்கப்பட்ட
ப்ரிகடியர் பால்ராஜ்...
# போர் உச்சத்திலிருந்த
காலத்தில், இலங்கைத்
ராணுவத் தளபதி ராணுவ
மந்திரியிடம் பால்ராஜைப்
பற்றி இப்படியாய்க்
கூறுகிறார்...
"நீங்கள் கொடுத்த 45000
ராணுவத்தினரை வைத்து பிரபாகரன்
வந்து இருந்தால் கூட
எதிர்கொண்டு விடுவோம்...
ஆனால்
அங்கே நிற்பது பால்ராஜ்...
நம் ஒட்டுமொத்த
ராணுவத்தையே கொண்டு வந்து நிறுத்தினாலும்
அவனை வெல்ல
முடியாது..."
வெறும் 1200
புலிகளை வைத்துக்
கொண்டு உள்ளும்
வெளியுமாய் 45000 சிங்கள
ராணுவ
வீரர்களை எதிர்கொண்டான்...
அதுவும் ஒரு நாள்,
இரண்டு நாள் அல்ல 34
நாட்கள்... ஆம் புலிகள்
ஆனையிறவை மீட்பதற்காய்
களமாடிக்
கொண்டிருக்கையில்,
பால்ராஜ் தலைமையில் 1200
புலிகள் காடுகளும்,
மரங்களும் அற்ற
சமவெளியில், கடல் வழியாய்
களமிறக்கப் பட்டனர்... எந்த வித
உதவியும் இல்லை. உணவு,
குடிநீர், மருத்துவம் என
எதற்கும், எங்கும் செல்ல
முடியாது...
அவர்களை தரைப்படை,
கடற்படை, வான்படை என
45000 ராணுவத்தினர்
சுற்றிவளைத்து தாக்கியும்
'வதிரையன் பாக்ஸ்' என்ற
தாக்குதல்
உத்தியை கையாண்டு அத்துனை ராணுவத்தினரையும்
தலைதெறிக்க
ஓடவைத்தவன்...
# இவன் கையாண்ட
'வதிரையன் பாக்ஸ்' மற்றும்
அவன் இருந்த ராணுவச்
சூழல்கள் இன்றும்
உலகெங்கிலும் உள்ள
ராணுவக் கல்லூரிகளில்
முக்கியப் பாடமாய் உள்ளது...
# புலிகளின் பிரதிநிதி,
அமெரிக்க ராணுவக்
கல்லூரிக்குச்
ஒரு முறை சென்றிருக்கையில
், அங்கு பயின்ற மாணவர்கள்
வியந்துப்
பாரட்டியது பால்ராஜையும்,
அவன் கையாண்ட வதிரையன்
பாக்ஸ் யுக்தியையும்
தான்...
# யுத்த நிறுத்த காலத்தில்
ஒரு முறை, பால்ராஜ்
கொழும்பு விமான
நிலையம்
சென்றிருக்கையில்
அவனை சூழ்ந்த ராணுவத்
தளபதிகள் ராணுவ
உடையுடன்
வந்து அவனுக்கு மரியாதை செலுத்தி,
அவனிடம் கூறியது,
"நாங்கள் நூற்றுக் கணக்கான
தளபதிகள்
போரை வழிநடத்திக்
கொண்டிருக்கையில்,
எங்களுக்கு எதிராய்
ஒரே ஒருவன்
களமிறக்கப்பட்டு நாங்கள்
தோற்கடிக்கப்பட்டோம்.
அவனை எங்கள் வாழ்நாளில்
ஒரு முறையேனும்
காணவேண்டும்
என்று விரும்பினோம்...
எங்கள் அனைவரின்
கனவு நாயகன் நீங்கள்..."
இப்படியாய் இவன் விட்டுச்
சென்ற சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த
அடையாளங்கள் ஏராளம்...
எதிரிகளின்
சிம்மசொப்பனமாய் திகழ்ந்த
இந்த மாவீரன், மாரடைப்பால்
2008 ஆம் ஆண்டு இதே நாளில்
இயற்கையால்
நம்மிடமிருந்து பறிக்கபட்டான்..
.
இந்த நாளில் உலகம்
கொண்டாட மறந்த இந்த
மாவீரனை நாம்
மறவாது நினைப்போம்... நம்
பிள்ளைகளுக்கும் இவன்
போன்ற மாவீரர்களின்
வாழ்கையை எடுத்துக்
கூறுவோம்...
'தமிழர்களின் தாகம்
தமிழ்தேசத் தாயகம்'

No comments:

Post a Comment