Friday, 30 May 2014

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோம்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,
ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகளை உயிர்
எழுத்துக்கள்.
க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய்,
ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போத
ு காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள்
என்று பெயர் சூட்டப்பட்டது.
உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்:
247
நம்மொழிக்கு தமிழ்
என்று எப்படி பொருள்
வந்தது என்பதைக் காண்போம்.
க, ச, ட, த, ப, ற - ஆறும்
வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்
மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்
இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில்
பயன்படுத்திய உயிர் ஒலிகள்
அ(படர்க்கை), இ(தன்னிலை),
உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில் ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை
த் தேர்ந்தெடுத்தனர். அவை த்,
ம், ழ் என்பவை. இந்த
மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்கள
ை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்
ல உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய
மொழியே எனதுயிரே!!

Tuesday, 27 May 2014

,விடுதலை புலிகளின் உள்நாட்டு தயாரிப்பு

விடுதலைப் புலிகளின்
உள்நாட்டு ஆயுத
தாயாரிப்பின் தொடக்கம்
மற்றும் வளர்ச்சி ...!
நமது விடுதலைப்போராட்
டத்தின் ஆரம்ப கால
கட்டத்திலேயே புலிகள்
ஆயுதங்களை சொந்தமாக
தாயாரிக்க
தொடங்கி விட்டனர்.
இந்திய இராணுவம் ஈழத்தில்
காலடி எடுத்து வைத்த
போது, இந்திய இராணுவம்
புலிகளுக்கு எதிராக
பயன்படுத்திய ஆயுதங்கள்
எல்லாம் அதிநவீன
ரகத்தை சேர்ந்தவை.
அப்போதைய காலகட்டத்தில்
காட்டுக்குள்
கெரில்லா போராட்ட
அமைப்பாக இருந்த
புலிகளிடம் இதுபோன்ற
நவீன ரக ஆயுதங்கள்
இருக்கவில்லை.
எனவே ஆயுத பலத்தின் முன்
புலிகள்
சற்று பின்தள்ளியே இருந்தனர்.
இதன் காரணமாக , இந்திய
இராணுவம் ஈழத்தில் வந்த
ஆரம்ப காலகட்டத்தில் போரில்
இந்திய
இலங்கை கூட்டு படையின்
பலமே மேலோங்கி இருந்தது.
ஆனால் இந்த நிலைமை அதிக
நாட்கள் நீடிக்கவில்லை.
"எந்த ஒருபலத்திலும்
ஒரு பலவீனம் இருக்கும்
அதை கண்டறிந்து தாக்குவதுதான்
எமது போராட்டத்தின்
வெற்றியின் ரகசியம்" என்ற
தலைவர் அவர்களின்
சிந்தனைக்கு அமைவாக
புலிகள்
அப்போது உள்நாட்டு தயாரிப்பான
கண்ணிவெடிகளை தாயரிக்க
தொடங்கினர். உள்நாட்டில்
கிடைக்கும்
மூலப்பொருள்களைக்
கொண்டு புலிகள்
தயாரித்த :ஜொனி வெடி"
எனும் கன்னி வெடிதான்
அன்று இந்திய &
இலங்கை இராணுவத்தினருக்
கு எமனாக இருந்தது.
காடுகளில்
புலிகளை தேடி வரும்
இராணுவத்தினரின்
கால்களையும்,
உயிர்களையும் புலிகளின்
துல்லியமான
கண்ணிவெடி தாக்குதல்கள்
காவு வாங்கின.
என்னதான் நவீனரக
ஆயுதங்களை பகைவன்
வைத்து இருந்தாலும்
நிலத்தில்
மண்ணோடு மண்ணாக
இருக்கும் புலிகளின்
கண்ணிவெடிகள் முன்
அவற்றால்
எதுவுமே செய்யமுடியவில்ல
ை என்பதே நிதர்சனமாகும்.
அன்று ஜொனி வெடி தாயரிப்பில்
முக்கிய பங்காற்றிய
பொன்னம்மான் அவர்கள்
நினைவாக தலைவர் அவர்கள்
பின்னாளில் தோற்றுவித்த
பொன்னமான் கண்ணிவெடிப்
பிரிவு போர்களங்களில்
கண்ணிவெடி தாக்குதல்கள்
மூலம் எதிரிக்கு பாரிய
இழப்புகளை ஏற்படுத்தி சமர்கலங்களை புலிகளுக்கு சாதகமாக
மாற்றியது.
ஜொனி 95,
ஜொனி 99 (ரங்கன்),
ஜொனி மின்சார மிதிவெடி
மேஜர் இளவழுதி
விஎஸ் 50
ரைப் 72
எம் 969
கிளைமோர்
குயிலன் எறிகணை
சமாதானம் ICRC போன்றன
ஈழத்தில் புலிகளால்
தாயரிக்கபட்ட
சிலவகை ஆயுதங்களாகும்
அன்று தொடங்கிய
புலிகளின் ஆயுத
தாயாரிப்பானது அடுத்து வந்த
காலகட்டங்களில் மேலும்
மேலும்
வளர்ச்சி அடிந்து தனது அடுத்த
அடுத்த
கட்டங்களை அடைந்து புலிகளின்
உள்நாட்டு தாயரிப்பான
விமானம், புலிகளின்
உள்நாட்டு தயாரிப்பான
நீர்மூழ்கி கப்பல்கள், இலகு ரக
விமான எதிர்ப்பு பீரங்கிகள்
என மேலும் மேலும்
வளர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்க
து.

Friday, 23 May 2014

இலங்கையில் தலை கீழாக


posted from Bloggeroid

மாவீரன் எல்லாளன்


தமிழனின்
வீரத்திற்கு சான்றாக
ஒரு தமிழ் மன்னன் எல்லாளன்.
● எல்லாளன்:-
எல்லாளன் என்ற தமிழ் மன்னன்
இலங்கையை 44 ஆண்டுகள்
ஆண்டதாக ஆதாரபூர்வமான
வரலாறு கூறுகிறது.
சிங்களர்கள்தான் இலங்கையின்
பூர்வக்குடிகள்
என்று நிரூபிப்பதற்காக
எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.''
சிங்கள
வம்சத்தை தோற்றுவித்தவன்
விஜயன்தான் என்று அந்நூல்
கூறுகிறது. ஆனால், அவன்
இலங்கையில்
காலடி வைக்கும்போதே,
அங்கே குவேனி என்ற தமிழ்
அரசி இருந்திருக்கிறாள்
என்று அதே மகாவம்சம்
குறிப்பிடுகிறது.
அப்படியானால்,
விஜயனுக்கு முன்பே தமிழர்கள்
அங்கு வாழ்ந்திருக்கிறார்கள்
என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறத
ு.
அனுராதபுரம்:-
இலங்கையின் மற்ற பகுதிகள்
காடுகளாக இருந்தபோது,
அனுராதபுரத்தை பெரிய
நகரமாக தமிழர்கள்
உருவாக்கி,
அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிற
ார்கள்
என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள்.
விஜயன்
தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு
முன்பே, அனுராதபுரத்தில்
தமிழ் மன்னர்களின்
ஆட்சி நடந்திருக்கிறது.
விஜயனின்
வருகைக்கு சுமார் 500
ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம்
பெரிய நகரமாக
இருந்திருக்கிறது என்பது,
தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடிப்பு. அந்தக்
காலத்தில் இந்தியாவில்
உஜ்ஜயினி பெரிய நகரமாக
இருந்தது. அதற்கு சமமாக
அனுராதபுரம் இருந்ததாக
ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள்.
புகழ் பெற்ற தமிழ் மன்னன்:-
இலங்கைக்கு இந்தியப் பேரரசர்
அசோகர் அனுப்பிய புத்த மதக்
குழுவினர்,
அனுராதபுரத்தில் திசையன்
என்ற தமிழ்
மன்னனை சந்தித்தது பற்றி,
பாலி மொழி வரலாற்று நூலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
திசையன் இறந்த பிறகு,
சேனன், குத்தன் என்ற
இரு தமிழ் மன்னர்கள் 22
ஆண்டுகள் அனுராதபுரத்தில்
நல்லாட்சி நடத்தினர்.
இவர்களுக்குப்
பிறகு ஆட்சிக்கு வந்தவர்
எல்லாளன்.
சிங்களர்களைப்
புகழ்வதற்காகவே எழுதப்பட்ட
"மகாவம்சம்'' நூலில்,
எல்லாளனின் வீரம்
பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது
. அவனுடைய குணநலன்கள்,
மனுநீதிச் சோழனின்
இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்
டுள்ளன.
மகாவம்சம் கூறுவதாவது:-
"எல்லாளன்,
இயேசு கிறிஸ்துவுக்கு 235
ஆண்டுகளுக்கு முன்னதாகப்
பிறந் தவன். அவன்
அனுராதபுரத்தைத்
தலைநகரமாகக் கொண்டு, 44
ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.
அவன் சோழ
வம்சத்தை சேர்ந்தவன்.
நீதி தவறாதவன்.
அவன் தன்
படுக்கை அறையில்
ஒரு மணியை தொங்கவிட்டிருந்
தான். அது,
அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டி
ருந்த ஒரு கயிற்றுடன்
இணைக்கப்பட்டு இருந்தது.
தங்களுடைய
குறைகளை மன்னருக்குத்
தெரிவிக்க, யார்
வேண்டுமானாலும்,
எப்போது வேண்டுமானாலும்
மணியை அடிக்கலாம்.
ஒருமுறை, ஒரு பெண் அந்த
மணியை அடித்தாள்.
எல்லாளன் அந்தப்
பெண்ணை அழைத்து, "உன்
குறை என்ன?''
என்று கேட்டான்.
"உன் மகன் ரதத்தில்
செல்லும்போது, என்
கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக்
கொன்றுவிட்டான்''
என்று கூறினாள்.
அதைக்கேட்ட எல்லாளன், தன்
மகனையும்
ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான்.
அக்கட்டளைப்படி இளவரசன்
கொல்லப்பட்டான்.
(மனுநீதி சோழன்
வரலாற்றிலும் இதே போன்ற
சம்பவம் வருகிறது)
புத்தர் கோவில்
ஒருமுறை எல்லாளன்
ரதத்தில் செல்லும்போது,
ரதம் மோதி புத்தர் கோவில்
சேதம் அடைந்தது. ரதத்தில்
இருந்து கீழே இறங்கிய
எல்லாளன், கோவில்
இடிந்ததற்காக மிகவும்
வருந்தினான்.
உடனே மந்திரிகளை அழைத்து,
"புத்தர்
கோவிலை சேதப்படுத்திய
நான் படுபாவி; பெரிய
குற்றவாளி. என்னைக்
கொன்றுவிடுங்கள்''
என்றான்.
அதற்கு மந்திரிகள்
மறுத்துவிட்டனர். "நீங்கள்
உங்களுக்கே மரண
தண்டனை விதித்துக்
கொள்வதை, புத்த
பகவானே ஏற்கமாட்டார்''
என்று கூறினர். "நீங்கள் உங்கள்
உயிரைப் போக்கிக்
கொள்வதற்கு பதிலாக,
கோவிலை புதிதாகக்
கட்டிக்
கொடுத்து விடலாம்''
என்று தெரிவித்தார்கள்.
மந்திரிகளின் இந்த
யோசனையை ஏற்றுக்கொண்ட
எல்லாளன்,புத்தர்
கோவிலை முன்பைவிட
அழகாகக் கட்டிக்
கொடுத்தான்.
துட்ட காமினி
இந்தக் காலக்கட்டத்தில் தென்
இலங்கையை கவந்திசா என்ற
சிங்கள மன்னன்
ஆண்டு வந்தான். அவனுடைய
மகன் பெயர் துட்டகாமினி.
(இவனுடைய இயற்பெயர்
கெமுனு என்றும்,
துஷ்டத்தனம்
செய்து வந்ததால், துட்ட
காமினி என்று அழைக்கப்பட்டான்
என்றும் மகாவம்சம்
கூறுகிறது.)
ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த
விரும்பிய துட்டகாமினி,
பல
சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு,
வடக்கு நோக்கி முன்னேறினான்.
தமிழ் மன்னன்
எல்லாளனை முறியடித்து,
அனுராதபுரத்தை கைப்பற்ற
வேண்டும் என்பது அவன்
எண்ணம்.
தன் விருப்பத்தை தன்
தந்தைக்குத்
தெரிவித்தான்.அதை மன்னர்
ஏற்கவில்லை. "எல்லாளனிடம்
ஒரு லட்சம் போர் வீரர்கள்
இருக்கிறார்கள். மேலும்
அவர் நல்லவர். மக்களின்
ஆதரவைப் பெற்றவர். அவர்
மீது படையெடுக்க
வேண்டாம்'' என்று தகவல்
அனுப்பினார்.
தந்தைக்கு அனுப்பிய
"பரிசு''
இதனால் சீற்றம் அடைந்த துட்ட
காமினி,பெண்கள் அணியும்
வளையல்களையும்,
சேலைகளையும்
தந்தைக்கு அனுப்பி வைத்து,
தந்தையை அவமானப்படுத்தின
ான்.
இதனால் கோபம் அடைந்த
மன்னர், துட்ட
காமினியை கைது செய்து,
தன் முன்
கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக்
கட்டளையிட்டார்.
இதை அறிந்து கொண்ட
துட்ட காமினி, காட்டில்
போய் ஒளிந்து கொண்டான்.
சில நாட்களில் மன்னர் மரணம்
அடைந்தார். துட்ட காமினி,
நாட்டுக்குத்
திரும்பி ஆட்சியைக்
கைப்பற்றிக் கொண்டான்.
பின்னர், அனுராதபுரத்தின்
மீது படையெடுத்தான்.
பயங்கர போர்
பெரும் படையுடன் துட்ட
காமினி வருவது பற்றி அறிந்த
எல்லாளன்,
மந்திரிகளை அழைத்து அவசர
ஆலோசனை நடத்தினார்.
துட்டகாமினியை கோட்
டைக்குள்
வரவிடக்கூடாது என்றும்,
கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும்
முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அனுராதபுரம்
கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும்
மோதின. போர் பயங்கரமாக
நடந்தது. ரத்த ஆறு ஓடியது.
பட்டத்து யானை
இந்நிலையில்,
எல்லாளனுக்கு துட்டகாமினி சவால்
விட்டான்.
"நாம் இருவரும்
நேருக்கு நேர் நின்று போர்
புரிவோம்.
யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப்
போர் தீர்மானிக்கட்டும்''
என்றான். போர்
நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74.
துட்ட
காமினி இளைஞன்.என்றாலும்
அவன் விட்ட சவாலை,
எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.
இருவரும்
பட்டத்து யானைகள்
மீது அமர்ந்து போரிட்டனர்.
எல்லாளன் வயோதிகராக
இருந்தாலும் தீரத்துடன்
போரிட்டார். என்றாலும்,
துட்டகாமினியின் யானை,
தன்னுடைய தந்தத்தால்
எல்லாளன் அமர்ந்திருந்த
யானையின் முகத்தில்
குத்தி கிழித்தது.
யானை கீழே சாய்ந்தது.
அதே நேரத்தில் துட்ட
காமினி எறிந்த ஈட்டி,
எல்லாளன் உயிரைக்
குடித்தது.
கோவில்
எல்லாளன் இறந்த
இடத்திலேயே அவர்
உடலை தக்க
மரியாதையுடன் துட்ட
காமினி தகனம் செய்தான்.
அதே இடத்தில் கோவில்
ஒன்றை கட்டவும்
ஏற்பாடு செய்தான்.
"இந்த வழியே செல்பவர்கள்
யாராக இருந்தாலும்,
அவர்கள் அரசர்களே ஆனாலும்
கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்''
என்று உத்தரவிட்டான்.
எல்லாளனின் வீரத்துக்கு,
துட்ட காமினி அளித்த
மரியாதை இது.
அனுராதபுரத்தைக்
கைப்பற்றிக்கொண்ட
துட்டகாமினி,அதை
மேலும் விரிவுபடுத்த
எண்ணமிட்டான்.
ஆனால், அவன் திட்டங்கள்
நிறைவேறுவதற்கு முன்,
பாம்பு கடித்து இறந்து போனான்.''
இவ்வாறு மகாவம்சம்
கூறுகிறது....

posted from Bloggeroid

Wednesday, 21 May 2014

The art of war

சமதளநாயகன் என்றுஅழைக்கப்பட்ட பால்ராஜ்

சமதளங்களின் சமரன்
என்று அழைக்கப்பட்ட
ப்ரிகடியர் பால்ராஜ்...
# போர் உச்சத்திலிருந்த
காலத்தில், இலங்கைத்
ராணுவத் தளபதி ராணுவ
மந்திரியிடம் பால்ராஜைப்
பற்றி இப்படியாய்க்
கூறுகிறார்...
"நீங்கள் கொடுத்த 45000
ராணுவத்தினரை வைத்து பிரபாகரன்
வந்து இருந்தால் கூட
எதிர்கொண்டு விடுவோம்...
ஆனால்
அங்கே நிற்பது பால்ராஜ்...
நம் ஒட்டுமொத்த
ராணுவத்தையே கொண்டு வந்து நிறுத்தினாலும்
அவனை வெல்ல
முடியாது..."
வெறும் 1200
புலிகளை வைத்துக்
கொண்டு உள்ளும்
வெளியுமாய் 45000 சிங்கள
ராணுவ
வீரர்களை எதிர்கொண்டான்...
அதுவும் ஒரு நாள்,
இரண்டு நாள் அல்ல 34
நாட்கள்... ஆம் புலிகள்
ஆனையிறவை மீட்பதற்காய்
களமாடிக்
கொண்டிருக்கையில்,
பால்ராஜ் தலைமையில் 1200
புலிகள் காடுகளும்,
மரங்களும் அற்ற
சமவெளியில், கடல் வழியாய்
களமிறக்கப் பட்டனர்... எந்த வித
உதவியும் இல்லை. உணவு,
குடிநீர், மருத்துவம் என
எதற்கும், எங்கும் செல்ல
முடியாது...
அவர்களை தரைப்படை,
கடற்படை, வான்படை என
45000 ராணுவத்தினர்
சுற்றிவளைத்து தாக்கியும்
'வதிரையன் பாக்ஸ்' என்ற
தாக்குதல்
உத்தியை கையாண்டு அத்துனை ராணுவத்தினரையும்
தலைதெறிக்க
ஓடவைத்தவன்...
# இவன் கையாண்ட
'வதிரையன் பாக்ஸ்' மற்றும்
அவன் இருந்த ராணுவச்
சூழல்கள் இன்றும்
உலகெங்கிலும் உள்ள
ராணுவக் கல்லூரிகளில்
முக்கியப் பாடமாய் உள்ளது...
# புலிகளின் பிரதிநிதி,
அமெரிக்க ராணுவக்
கல்லூரிக்குச்
ஒரு முறை சென்றிருக்கையில
், அங்கு பயின்ற மாணவர்கள்
வியந்துப்
பாரட்டியது பால்ராஜையும்,
அவன் கையாண்ட வதிரையன்
பாக்ஸ் யுக்தியையும்
தான்...
# யுத்த நிறுத்த காலத்தில்
ஒரு முறை, பால்ராஜ்
கொழும்பு விமான
நிலையம்
சென்றிருக்கையில்
அவனை சூழ்ந்த ராணுவத்
தளபதிகள் ராணுவ
உடையுடன்
வந்து அவனுக்கு மரியாதை செலுத்தி,
அவனிடம் கூறியது,
"நாங்கள் நூற்றுக் கணக்கான
தளபதிகள்
போரை வழிநடத்திக்
கொண்டிருக்கையில்,
எங்களுக்கு எதிராய்
ஒரே ஒருவன்
களமிறக்கப்பட்டு நாங்கள்
தோற்கடிக்கப்பட்டோம்.
அவனை எங்கள் வாழ்நாளில்
ஒரு முறையேனும்
காணவேண்டும்
என்று விரும்பினோம்...
எங்கள் அனைவரின்
கனவு நாயகன் நீங்கள்..."
இப்படியாய் இவன் விட்டுச்
சென்ற சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த
அடையாளங்கள் ஏராளம்...
எதிரிகளின்
சிம்மசொப்பனமாய் திகழ்ந்த
இந்த மாவீரன், மாரடைப்பால்
2008 ஆம் ஆண்டு இதே நாளில்
இயற்கையால்
நம்மிடமிருந்து பறிக்கபட்டான்..
.
இந்த நாளில் உலகம்
கொண்டாட மறந்த இந்த
மாவீரனை நாம்
மறவாது நினைப்போம்... நம்
பிள்ளைகளுக்கும் இவன்
போன்ற மாவீரர்களின்
வாழ்கையை எடுத்துக்
கூறுவோம்...
'தமிழர்களின் தாகம்
தமிழ்தேசத் தாயகம்'

சமர் கள நாயகன் பால்ராஜ்


பிரிகேடியர் பால்ராஜ்
கந்தையா பாலசேகரன்
தமிழீழம்
(கொக்குத்தொடுவாய்,
முல்லைத்தீவு)
வீரப்பிறப்பு:27/11/1965
வீர மரணம்:20/05/2008)
முல்லைத்தீவு மாவட்டத்தின்
கடற்கரை பிரதேசமான
கொக்குத்தொடுவாயில்
கந்தையா கண்ணகி
தம்பதிகளின்
ஐந்து பிள்ளைகளில்
நான்காமவராக 1965ல்
அவதரித்தார்
பாலசேகரன்.வன்னியின்
மைந்தனாக காலடி வைத்த
பாலசேகரனது பூர்வீகம்
யாழ்ப்பாணமாகும்.
இவரது கொள்ளுத்
தாத்தா ஏறத்தாழ
நூற்றாண்டுகளுக்கு முன்னர்
யாழ் மாவட்டம்
வடமராட்சி கரவெட்டி
பிரதேசத்திலிருந்து
இடம்பெயர்ந்து
கொக்குத்தொடுவாய்
சென்றிருந்தார்
மீன்பிடியையும்
காலநிலைக்கேற்ற
விவசாயத்தையும்
தொழிலாகக் கொண்ட
கந்தையாவுக்கு நான்கு
ஆண்பிள்ளைகள்
ஒரு பெண்பிள்ளை. இவர்களில்
நான்காவது பிள்ளையான
பாலசேகரனே குடும்பத்தில்
கெட்டிக்காரப் பிள்ளை.
இவர் தனது ஆரம்பக் கல்வியை
கொக்குத்தொடுவாயிலும்
பின்னர் உயர் கல்வியை
புல்மோட்டையிலும்
பயின்றார்.
கொக்குத்தொடுவாயும்
புல்மோட்டையும்
கடற்கரை பிரதேசங்கள்
என்பதால் அங்கே வரும் சிங்கள
மீனவர்களுடன் உரையாடிய
காரணத்தால் பாலசேகரன்
சிறு பராயத்திலேயே
சிங்களம் பயின்றார். அத்துடன்
ஆங்கிலத்திலும்
ஓரளவு நன்றாகவே
உரையாடக் கூடியவர்.
கல்விப் பொதுத் தராத
சாதாரன பரீட்சையில்
பாலசேகரன் மிகச் சிறந்த
பெறுபேறுகள் பெற்றதால்
அவரை பல்கலைக்கழகம்
அனுப்பும் எண்ணத்துடன்
இருந்தார்கள் அவரின்
பெற்றோர்.
பெற்றோரின்
கனவு இவ்வாறாக இருந்த
போதும் இளைய
பாலசேகரனது கனவு
வேறாக இருந்தது.
தாய்நாட்டைக் காக்கும்
பணிக்கு எவ்விதத்திலாவது
பங்காற்ற வேண்டும் என்ற
எண்ணம் அவரிடம் வேரூன்றத்
தொடங்கியது.
‌1982 காலப்பகுதியில்
அப்பகுதியில் புளொட்
இயக்கத்துக்காக
வேலை பார்த்த சுந்தரம்,
மாணவனாக இருந்த
பாலசேகரனை புளொட்
இயக்கத்தில் சேர்த்துக்
கொண்டாலும்
ஒரு வருடமாக எந்த வித
நடவடிக்கைகளிலும்
புளொட் ஈடுபடாததினால்
பொறுமையிழந்தார்
பாலசேகரன். குடும்பத்தில்
வேறு அவருக்கு அழுத்தம்
கொடுக்கப்பட்டதால்
சிறிது காலம்
ஒதுங்கியிருந்தார்
பாலசேகரன்.
ஆனால் 1983ல் நடைபெற்ற
இனக்கலவரம் எல்லாவற்றையும்
மாற்றியது. இளைஞர்கள்
சாரை சாரையாக
பல்வேறு இயக்கங்களிலும்
சேரத் தொடங்கினார்கள்.
துடிப்புமிக்க இளைஞனான
பாலசேகரனுக்கு வேகமாக
செயல்படக் கூடிய
ஒரு இயக்கம் தேவைப்பட்டது.
ஆகவே இம்முறை அவர்
தேர்ந்தெடுத்தது
விடுதலைப் புலிகள்
இயக்கத்தை. அக்காலத்தில்
அப்பகுதியில் தமிழீழ
விடுதலை புலிகளின்
உறுப்பினர் சேர்க்கைக்கு
பொறுப்பாகவிருந்த
பள்ளிக்கூட வாத்தியாரான
`தாஸ்`
பாலசேகரனது புளொட்
பின்னணி தெரிந்திருந்தும்
கூட
அவரை சேர்த்து யாழ்ப்பாணம்
அனுப்பி வைத்தார்.
யாழ்ப்பாணம் சென்ற
பாலசேகரன் அங்கே `புரூஸ்`
என்று இனங்காணப்பட்ட
புலிகள் இயக்க
முக்கியஸ்தரை சந்தித்தார்.
பாலசேகரனது புளொட்
பின்னணி புரூஸிடம்
ஒருவித
நெருடலை ஏற்படுத்தியது.
இயக்கத்தில் சேர்த்துக்
கொள்ளத்தயங்கிய புரூஸ்
பாலசேகரனுக்கு உள்ளூர்
பயிற்சி மட்டும்
வழங்கி அவரை உதவியாளராக
மட்டும் வைத்துக் கொண்டார்.
பகுதி நேர
உறுப்பினராகவிருந்த
பாலசேகரனது கடமை
தவறாத துடிப்பு மிக்க
உழைப்பு புரூஸைக்
கவர்ந்தது என்றாலும்
முழு நேர இயக்க
உறுப்பினராக்கப் படவில்லை.
ஆனால்
விதி வேறு விதமாக
விளையாடியது.
இராணுவத்துடனான மோதல்
ஒன்றில்
எதிர்பாராதவிதமாகக்
காயம்பட்ட பாலசேகரன்
சிகிச்சைக்காக தமிழகம்
அனுப்பப்பட்டார். காண்டீபன்
என்ற புலிகள் இயக்க
முக்கியஸ்தருடனும்
பயிற்சிக்கெனச் சேர்க்கப்பட்ட
வேறு பலருடனும்
பாலசேகரன்
பயணித்தபோது இலங்கப்
படையினருடன் ஏற்பட்ட
மோதலில் காண்டீபனும்
வேறு சிலரும்
வீரச்சாவடைந்தனர். மீண்டும்
காயப்பட்ட பாலசேகரன்
சிகிச்சை பெறுவதற்காக
தமிழகத்தில்
அனுமதிக்கப்பட்டிருந்த
மருத்துவமனையில் தான்
சத்திர
சிகிச்சை பெற்றிருந்தார்
புலிகளின் பிரதித் தலைவர்
மாத்தையா. அவர்
இளைஞனான பாலசேகரனுடன்
உரையாடியபோதுதான்
மணலாறுப் பகுதியின் மீதான
அவரின் பரிச்சயம் தெரிய
வந்தது மாத்தயாவிற்கு.
இளம் பாலசேகரனில்
இயற்கையாகவே குடி
கொண்டிருந்த அபூர்வமான
யுத்தக் கலையும் யுத்தக்
குணாம்சங்களும்
மாத்தையாவைக்
கவர்ந்து விடவே தலைவருடன்
கதைத்து அவருக்கு
முறையான
பயிற்சிக்கு ஏற்பாடு
செய்தார் மாத்தையா.
காயத்திலிருந்து மீண்ட
பாலசேகரன் புலிகளின்
ஒன்பதாவது பயிற்சிப்
பாசறையில்
இணைந்து பயிற்சி பெற்றார்.
இவருடன் ஒன்றாக
பயிற்சி பெற்றவர்
இன்னொரு வன்னி மைந்தனான
கிளிநொச்சி மாவட்டம்
கண்டாவளையை
பிறப்பிடமாக கொண்ட
பிரிகேடியர்
தீபன்.இது நடந்தது 1984ல்.
பாலசேகரனுக்கு வழங்கப்பட்ட
இயக்கப் பெயர் பால்ராஜ்.
பயிற்சியின் பின்னர்
இருவரும் மாத்தையாவின்
மெய்ப்பாதுகாப்பாளர்
அணியில் இணைத்துக்
கொள்ளப்பட்டார்கள்.
சிறிது காலத்தின் பின்னர்
போர் முனையிலும்
சண்டையிட்டார்கள்.
பால்ராஜ் தனது முதல்
முத்திரையை 1986ல்
கிளிநொச்சி கரடிப்
போக்குச்சந்தியில்
அமைந்திருந்த
இலங்கை இராணுவ
மினி முகாம் மீதான
தாக்குதலில் காட்டினார்.
கிளிநொச்சி முகாமை
சுற்றி வளைக்கும்
மாத்தையாவின் திட்டம்
முழுமை பெறாவிட்டாலும்
கரடிப்
போக்குச்சந்தியிலிருந்த
மினி முகாமைக்
கைப்பற்றினர் பால்ராஜ்
உள்ளடங்கிய போராளிகள்.
மாத்தையா புலிகள் இயக்கத்
துணைத் தளபதியாக
நியமிக்கப் பட்டபின்னர்
ஒட்டு மொத்த
வன்னிப்பிரதேசத்தின்
தளபதியாகவும் ஆனார்.
அவரது த்லைமையில் ஜெயம்,
சுசீலன், பசீலன் ஆகியோர்
முறையே வவுனியா,
கிளிநொச்சி, முல்லைதீவு
மாவட்டங்களுக்குப்
பொறுப்பாக
நியமிக்கப்பட்டனர்.
பசீலனின் உதவியாளராக
நியமிக்கப்பட்ட பால்ராஜ்
மணலாற்றுப்
பகுதி மீது அவருக்கிருந்த
பரிச்சயம் காரணமாக
அங்கு நிலை கொள்ள
வைக்கப்பட்டார்.
இந்தியப் படைகளுடனான
யுத்தம் மூண்ட பின்னர்
தலைவரும் முக்கிய
தளபதிகளும் வன்னியில்
முகாமிட்டனர். அப்போது
முல்லைத்தீவினதும்
குறிப்பாக தலைவரினது
பாதுகாப்புக்குப்
பொறுப்பாக நியமிக்கப்
பட்டவர் லெப்.கேணல் நவம்
என்கின்ற டடி.
அவரது உதவியாளரானார்
பால்ராஜ்.
இந்திய அமைதிப்படை 1990ம்
ஆண்டு மார்ச் மாதத்தில்
ஈழத்தை விட்டு அகன்றது.
தலைவர் மீண்டும் யாழ்ப்பாணம்
திரும்பினார்.
வன்னி மைந்தனான பால்ராஜ்
வன்னிபிரதேசத்தின்
தளபதியாக நியமிக்கப்பட்டார்.
பிரேமதாஸா அரசுடனான
சமரச முயற்சியின் பின்னர்
மீண்டும் ஜூன் மாதமளவில்
இலங்கைப் படைகளுடனான 2ம்
ஈழப்போர் ஆரம்பமானது.
பால்ராஜின் தலைமையின் கீழ்
புலிகள் பல வெற்றிகரமான
தாக்குதல்களை
மேற்கொண்டார்கள், அவற்றில்
பிரதானமானவை மாங்குளம்
மற்றும் கொக்காவில் முகாம்
தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல்
மேற்கொள்ளப்பட்ட
ஆனையிறவு முகாம் மீதான
ஆகாய கடல் வெளிச்சமரில்
பங்கு பற்றினர்.
அத்தாக்குதலில்
நான்கு முனைகளில்
ஒன்றிற்கு பொறுப்பாக
நியமிக்கப்பட்ட பால்ராஜ்
சுற்றுலா விடுதி
முகாமைக் கைப்பற்றிய
போதும் மற்ற
மூன்று முனைகளிலும்
ஏற்பட்ட
பின்னடைவு காரணமாக
முகாம் தகர்ப்பு என்ற
இலக்கு எட்டப்படவில்லை.
1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993
ஆம் ஆண்டு வரையும் பின்னர்
1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997
ஆம் ஆண்டு வரையும்
விடுதலைப் புலிகளின்
முதலாவது மரபுவழிப்
படையணியான சார்ள்ஸ்
அன்ரனி சிறப்புப்
படையணியின்
முதலாவது கட்டளைத்
தளபதியாக அப்படையணியை
வழிநடத்தியவர் பால்ராஜ் . தீபன்
வன்னிப்பகுதியின்
தளபதியானார். இவர்களின்
இணை மண்கின்டிமலை மீதான
இதயபூமி நடவடிக்கையில்
பங்கு பற்றி புலிகளுக்கு
மகத்தான
வெற்றியை தேடித்தந்தது.
பால்ராஜ் தனது முழுத்
திறமையையும்
வெளிப்படுத்திய சமர்களாக
யாழ்தேவி மற்றும்
தவளைப்பாச்சல்
நடவடிக்கைகளாகும்.
அப்போது இராணுவத்தில்
கேணலாகவிருந்த சரத்
பொன்சேகா தலைமையில்
ஆனையிறவிலிருந்து
வடக்காக யாழ்ப்பாணம்
நோக்கிப் நடத்தப்பட்ட
யாழ்தேவி இராணுவ
நடவடிக்கையை வெறும்
ஆறே நாட்களில் முறியடித்த
பெருமை பால்ராஜையே
சாரும். 1993 செப்டெம்பரில்
இடம்பெற்ற இந்த இராணுவ
நடவடிக்கையில் காலில்
கடும்
காயங்களுக்குள்ளானார்
பால்ராஜ். அதன் பின்னர்
ஊண்டு கோளின்
உதவியுடனேயே நடக்க
வேண்டிய
கட்டாயத்துக்குள்ளானார்
பால்ராஜ். சரத்
பொன்சேகாவும்
இந்நடவடிக்கையில்
காயமடைந்தது இங்கு
குறிப்பிடத்தக்கது.
யாழ்தேவி நடவடிக்கையில்
நூற்றுக்கணக்கான படையினர்
கொல்லப்பட்டதோடு இரண்டு
ரி 55 டாங்கிகளையும்
புலிகள் கைப்பற்றினர்.
1993 நவம்பரில் நடைபெற்ற
ஈருடகச் சமரான
தவளைப்பாய்ச்சல்
நடவடிக்கையின்
ஒட்டுமொத்த
நடவடிக்கையின்
பொறுப்பாளராக
நியமிக்கப்பட்டார். பால்ராஜ்
தலைமையில்
பூநகரி முகாமை தீபன்
உள்ளிட்ட போராளிகளும்
நாகதேவன்துறை
கடற்படைத்தளத்தை பானு
உள்ளிட்ட போராளிகளும்
தகர்த்தனர்.
1995ல் யாழ்ப்பாணத்தில்
இடம்பெற்ற
இராணுவத்தினரின்
முன்னேறிப்
பாய்தலுக்கெதிரான
புலிப்பாய்ச்சலிலும்
இடிமுழக்கம்
நடவடிக்கைக்கெதிரான
சண்டையிலும் பின்னர்
இடம்பெற்ற சூரியக்கதிர்
இராணுவ
நடவடிக்கைக்கு எதிரான
தாக்குதல்களையும்
த்லைமை தாங்கினார்
பால்ராஜ்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996
ஏப்ரல் மே காலப்பகுதியில்
வெளியேறிய புலிகள்
வன்னியை தளமாக்க
முடிவு செய்தபோது
அதற்குப் பெருந்தடையாக
இருந்தது முல்லைத்தீவு
இராணுவ முகாம் ஆகும்.
அம்முகாமை அகற்ற
வேண்டிய கட்டாயத்தில்
இருந்தனர் புலிகள்.
பால்ராஜ் தலைமையில்
ஓயாத அலைகள் 1 என்ற
பெயரில் 1996 ஜூலை 18ல்
முல்லைத்தீவு இராணுவ
முகாம்
தகர்க்கப்பட்டபோது 1000க்கும்
மேற்பட்ட இலங்கை இராணுவ
வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நடவடிக்கையில்
இரண்டு 122mm
ஆட்லறி பீரங்கிகளை
கைப்பற்றினார்கள் புலிகள்.
ஜெயசிக்குரு இராணுவ
நடவடிக்கை 1997ல்
ஆரம்பிக்கப்பட்டபோது
அதற்கெதிரான புலிகளது
எதிர்த்தாக்குதலுக்கு
பால்ராஜ்
தலைமை தாங்கினார்.
1998ல்
ஜெயசிக்குரு கைவிடப்பட
முக்கிய காரணமாக
இருந்தது, சத்ஜெய
நடவடிக்கையின் மூலம்
படையினர்
கைப்பற்றி வைத்திருந்த
கிளிநொச்சியை ஓயாத
அலைகள் 2ன் மூலம் புலிகள்
மீளக்கைப்பற்றிக்கொண்டதேய
ாகும். இத்தாக்குதலுக்கும்
பால்ராஜே தலைமை
தாங்கினார்.
1999ல் புலிகள் ஓயாத
அலைகள் 3ஐ
ஆரம்பித்து படையினர்
ஜெயசிக்குரு இராணுவ
நடவடிக்கையின் மூலம் 18
மாதங்கள்
கஷ்டப்பட்டு பிடித்து
வைத்திருந்த
பகுதிகளை வெறும்
மூன்றே வாரங்களில்
மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
ஓயாத அலைகள் 3ன்
முத்தாய்ப்பாக
அமைந்தது ஆனையிறவு
முகாம் கைப்பற்றலாகும். 1991
ல் ஆகாய கடல் வெளிச் சமரில்
பெற்ற பின்னடைவும்
படிப்பினைகளும்
பின்னாளில்
உலகமே வியக்கும் வண்ணம்
இடம்பெற்ற குடாரப்புத்
தரையிறக்கத்துக்கு வழி
சமைத்தது எனலாம்.
1,500 போராளிகளுடன் மார்ச்
18 2000ல் குடாரப்பில்
தரையிறக்கிவிடப்பட்ட
பால்ராஜ் தலைமையிலான
போராளிகள் கிட்டத்தட்ட 34
நாட்கள் தாக்குப்பிடித்து
ஆனையிறவுக்கான
விநியோகப்
பாதையை துண்டித்ததன்
மூலமே ஆனையிறவு
கைப்பற்றப்பட்டது. இடையில்
`வத்திராயன் பொக்ஸ்`
சண்டை வேறு. பால்ராஜ்
தலைமையிலான
போராளிகளை வெளியேற்ற
படையினர்
எவ்வளவோ முயன்றும்
அது முடியாமல் போய்
விட்டது. இந்தச்
சமரே சமர்களுக்கெல்லாம்
தாய்ச் சமர்
என்று கருதப்படுகிறது.
யுத்த மேதையான
தலைவரே பால்ராஜை
தன்னை மிஞ்சிய
போராளி என்று பாராட்ட
வைத்த சமர் அது.
2001 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற
ஆனையிறவை மீளக்
கைப்பற்றும் நோக்கிலான
படையினரின்
தீச்சுவாலை(அக்னிகீல)
நடவடிக்கையை பால்ராஜ்
தலைமையில்
சின்னாபின்னமாக்கினர்
புலிகள்.
பின்னர் சமாதான காலப்
பகுதியில் 2003ல் சிங்கப்பூர்
சென்று தனது இருதய
நோய்க்கு சிகிச்சை பெற்றுக்
கொண்டார் பால்ராஜ். அதன்
பின்னர் அவருடைய உடல்நலக்
குறைவால் உச்ச
சண்டைகளை தலைமை தாங்க
முடியாமல் போனாலும்
தனது காத்திரமான
பங்களிப்பை வழங்கியதோடு
நில்லாமல் புலிகளின்
பயிற்சிப் பாசறைகளின்
ஆசானானார். தனது யுத்த
தந்திரோபாயங்களை
மற்றவர்களுடன் பங்கிட்டார்.
ஈழப் போர் நான்கில்
அவரது உடல்நிலை மேலும்
பாதிக்கப்பட்டது. 2008ம்
ஆண்டில் மூன்று மாதங்களை
மருத்தவமனையில் செலவிட்ட
அவர் மே 20 ல் தனது சொந்த
மண்ணிலேயே மாரடைப்பால்
வித்தாகிப் போனார்.
சில களங்களில்
புலிகளுக்கு தோல்வி என்ற
நிலை வரும் போதும்
சண்டைக்களத்தில் திடீரெனப்
பிரவேசித்து புதிய
வியூகங்களை அமைத்து
முன்னின்று வழிநடத்தி
சண்டையை வெற்றிப்
பாதையில் திருப்பிய
சமர்க்களங்களின் சரித்திர
நாயகன் இந்தப் போர்க்களங்களே
வாழ்வாகிப்போன பால்ராஜ்.
அவருக்கு எமது வீர
வணக்கங்கள்.
எங்களுக்காக தங்கள்
வாழ்வை அர்ப்பணித்த இந்த
வீரர்களுக்கெல்லாம் நாம் என்ன
கைமாறு
செய்யப்போகிறோம் என்ற
எண்ணத்துடன

posted from Bloggeroid

மலேசியா தமிழர் வரலாறு

7, 8ஆம் நூற்றாண்டுகள்
முதற்கொண்டே
பழந்தமிழருக்கு
மலாயாவுடன்
தொடர்பு இருந்துள்ளதாக
தெரியவருகிறது. தமிழ்
மன்னன் இராசேந்திர சோழன்
கடல்வழிப் பயணம்
மேற்கொண்டு மலாயாவில்
கடாரம் எனும் பெயரில்
நிலப்பரப்பை உருவாக்கி
ஆட்சி செய்துள்ள
வரலாறு உண்டு.
தொடக்க காலத்தில் வணிகத்
தொடர்புகளின்
பொருட்டுதான் தமிழர்கள்
தென்னிந்தியாவிலிருந்து
இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்
(Kedah) பூசாங் நதிக்கரையில்
(Sungai Bujang)
குடியிருப்புகளை
அமைத்தனர். வந்தவர்கள்
சைவர்கள் என்பதால்
பூசாங்கில்
சிவாலயங்களையும் கட்டினர்.
அவ்வாலயங்களின் எச்சங்கள்
இன்றும் இருக்கின்றன.
அவை தமிழன் வரலாற்றைப்
பறைசாற்றிக்
கொண்டிருக்கின்றன.
வரலாற்று நூல்கள்,
கல்வெட்டுகள்,
புதைபொருள்கள்
ஆகியவை தவிர
மலாயா நாட்டின்
மக்களுடைய
மொழியோடும்,
பண்பாட்டோடும், பழக்க
வழக்கத்தோடும் தமிழரின்
அடையாளங்கள் இரண்டறக்
கலந்துள்ளன.
குறிப்பாக மலாய்மொழியில்
தமிழ்ச்சொற்களும் தமிழ்
மூலத்தைக் கொண்ட
வடமொழிச் சொற்களும்
நிறைய கலந்திருக்கின்றன.
காட்டாக, அம்மா(Emak),
ஐயா(Ayah), நகரம்(Negara),
கடை(Kedai), கப்பல்(Kapal),
கட்டில்(Katil), பெட்டி(Peti),
கெண்டி(Kendi), அரசன்
(இராஜா – Raja), மாணிக்கம்
(Manikam), ஆகமம்(Agama),
பத்தி(பக்தி – Bakti), மந்திரம்
(Mantera) இப்படியான
பல்லாயிரம் சொற்கள்
இருக்கின்றன.
தமிழர்களுடன் ஏற்பட்ட
தொடர்பின் காரணமாக
மலாயா நாட்டு மக்கள்
பெற்றுள்ள பயன்கள்
பலவுண்டு. உழவு,
பயிர்த்தொழில், ஏர் உழுதல், நீர்
பாசனம் செய்தல் ஆகிய
தொழில்களைக்
கற்றுக்கொண்டனர். வணிக
முறைகள், நாணயத்தைப்
பயன்படுத்துதல்,
இரும்பு ஆயுதங்கள் செய்தல்,
பொன்,
வெள்ளி ஆகியவற்றைக்
கொண்டு அணிகலன்கள்
உருவாக்குதல், மருத்துவம்
ஆகிய கலைகளை
அறிந்துகொண்டனர்.
தமிழரைப் போல பருத்தி,
பட்டு ஆகிய
ஆடைகளை நெசவு செய்து
அணிந்தனர். சமையல்
செய்வதில் தமிழரைப்
போலவே தானிய வகை, மணப்
பொருள்களைப் பயன்படுத்தத்
தொடங்கினர். தமிழ்க் இசை,
நடனம்,
பாவைக்கூத்து போன்ற
கலைகளை தங்கள்
கலைகளோடு
பிணைத்துக்கொண்டனர்.
வெற்றிலைப்
பாக்கு மாற்றி திருமணம்
செய்வது போன்ற திருமண
சடங்கில் வெற்றிலைப்
பாக்கை ஏற்றுக்கொண்டனர்.
கையில்
மருதாணி வைத்து அழகு
பார்த்தனர். பல்லா
ங்குழி போன்ற பாரம்பரிய
விளையாட்டுகளை தங்கள்
வயப்படுத்திக்கொண்டனர்.
இரண்டாம் கட்டமாக, 1400களில்
மலாக்கா எனும் நகரம் மன்னன்
பரமேசுவரனால் மலாயாவில்
உருவாக்கப்பட்டது.
இவருடைய அரச
தலைமுறை 110 ஆண்டுகள்
மலாக்காவை ஆட்சி செய்தது
. தென்கிழக்கு ஆசியாவில்
மலாக்கா தலைசிறந்த வணிக
நகரமாக
இருந்தபோது மீண்டும் வணிக
நோக்கத்திற்காகத் தமிழர்கள்
மலாயாவுக்கு
வந்திருக்கின்றனர். இவர்களில்
பெரும்பாலோர்
உள்நாட்டு பெண்களை
மணந்துகொண்டு இங்கேயே
தங்கிவிட்டனர்.
இவர்களின்
தலைமுறை இன்று தங்களின்
மொழி, இன, சமய,
பண்பாட்டு அடையாளங்களைத்
தொலைத்துவிட்டு
இருக்கின்றனர்.
உள்நாட்டு மலாய் மொழியின
பண்பாட்டோடு ஏற்பட்ட
கலப்பின் காரணமாக
இப்போது புதிய இனம்போல
மாறி இருக்கின்றனர். இவர்கள்
‘மலாக்கா செட்டிகள்’
என்று இன்றைய
மலேசியாவில்
அடையாளப்படுத்தப்
பட்டுள்ளனர். இவர்கள் தமிழர்
பரம்பரையில் வந்தவர்களாக
இருந்தாலும் மலேசியத்
தமிழர்களிடமிருந்து
தனித்தே இருக்கின்றனர்.
தமிழரே அல்லாதவர்
போலாகிவிட்டனர்.
வரலாற்றுக் காலத்தைக்
கடந்து மலாயாவை
ஆங்கிலேயர் கைப்பற்றிய
பிறகு பெருவாரியான
எண்ணிக்கையில்
தென்னிந்தியத் தமிழர்கள்
மலாயாவுக்குக்
கொண்டுவரப்பட்டனர். இரப்பர்
தோட்டங்களில்
வேலை செய்வதற்கும்,
கரும்புக் காடுகளில்
பணியாற்றவும்,
காடுகளை அழித்து
நாடாக்கவும்
சஞ்சிக்கூலிகளாக வந்த
தமிழர்களை ஆங்கிலேயர்
பயன்படுத்தினர். (சஞ்சி –
மலாய்மொழியில் Janji
அதாவது ஒப்பந்தம்)
இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள்
பட்ட இன்னல்களும்
கொடுமைகளும்
அவலங்களும் சொற்களால்
விவரிக்க முடியாதவை.
காடுகளை அழிக்கும்
போது கொடிய
விலங்குகளால்
தக்கப்பட்டு இறந்தவர்கள், இரப்பர்
காடுகளில் நஞ்சுயிரிகளால்
தாக்கப்பட்டவர்கள்,
மலேரியா காய்ச்சல், கொடிய
நோய்கள், மருத்துவ
வசதியின்மை முதலிய
காரணங்களால்
மரணத்தை தழுவியவர்கள்
என்று கணக்கெடுத்துப்
பார்த்தால் 12 இலக்கம்(இலட்சம்)
தமிழர்கள் மலாயாவில்
மாண்டுபோயிருக்கின்றனர்.
இரண்டாம் உலகப் போரில்
ஆங்கிலேயரைத்
தோற்கடித்து மலாயாவை
சப்பானியர்
கைப்பற்றியபோது தமிழர்கள்
பட்ட துன்பங்களும் கொஞ்ச
நஞ்சமல்ல. சயாம்
தொடர்வண்டி திட்டத்திற்கு (
சயாம் ரயில்வே)
வேலை செய்ய
ஆயிரக்கணக்கில் நம்மவர்கள்
இரவோடு இரவாகக்
கொண்டுசெல்லப் பட்டுள்ளனர்.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள்
இருக்கிறார்களா இல்லையா?
என்றுகூட தெரியாமல்
தவித்திருந்தனர் நம் மக்கள்.
இப்படி தண்டவாளம் அமைக்க
சென்றவர்கள் கொத்துக்
கொத்தாக மடிந்துபோய்
கும்பல் கும்பலாகப்
புதைக்கபட்டுள்ளனர்.
இத்தனைக்கும் இடையில்
மலாயாவையும், 1957க்குப்
பிறகு மலேசியாவையும்
ஒரு வளமிக்க நாடாக
உருவாக்குவதில்
தமிழர்களி பங்கு
மிகப்பெரியது என்றால்
மிகையல்ல.
மலேசியா விவசாய நாடாக
இருந்த காலத்தில் அதனுடைய
பொருளாதார
வளர்ச்சிக்கு உறுதிணையாக
இருந்த இரப்பர்,
செம்பனை உற்பத்தி, கரும்பு,
கொக்கோ முதலான
தோட்டத்துறைகளில் இரத்தம்
சிந்தி தமிழ் மக்கள்
உழைத்தார்கள்.
இன்றைய நிலையில்
மலேசியத் தமிழர்கள்
(இந்தியர்கள்)
பல்வேறு நிலைகளில்
முன்னேற்றம் கண்டுள்ளனர்.
உயரிய கல்விக் கற்றோராக,
தொழிலதிபர்களாக,
நிபுணர்களாக,
செல்வந்தர்களாக, பெரும்
கோடிசுவரர்களாக
உருவாகி இருக்கின்றனர்.
ஏழைகளாக இந்த நாட்டில்
குடியேறியவர்கள்
இன்று வளமான
வாழ்க்கை வாழ்கின்றனர்.
இவர்களுக்கு இடையில்
இன்னும்
நூறாண்டுகளுக்கு முன்பு
மலாயா வந்து தோட்டங்களில்
வாழ்ந்த அதே இக்கட்டான
சூழலில் வாழ்பவர்களும்
இருக்கவே செய்கின்றனர்.
பல்வேறு சமுதாயத்தில்
சிக்கல்களிலும்
சீர்கேடுகளிலும்
மாட்டிக்கொண்டு
தவிப்பவர்களும் ஏராளமாக
உள்ளனர்.
எது எப்படி இருப்பினும்
தமிழர்கள் இன்று நாட்டின்
குடியுரிமை பெற்ற
இனமாக இந்தியர்கள் என்ற
முத்திரையோடு வாழ்த்து
வருகின்றனர். நாட்டின்
அரசியலமைப்புச் சட்டத்தில்
இருக்கின்ற உரிமைகளுக்காக
இன்றளவும்
போராடி போராடி தங்கள்
வாழ்க்கையை
ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இருக்கின்ற உலக நடப்பையும்
மலேசிய சூழலையும்
கூர்ந்து கவனித்துப்
பார்க்கையில்,
அடுத்து வருகின்ற
ஐம்பது ஆண்டுகளில்
மலேசியத் தமிழர்கள் தங்களின்
மரபியல் அடையாளங்களான
மொழி, இனம், சமயம், கலை,
பண்பாடு, இலக்கியம்,
வரலாறு, வாழ்வியல் ஆகிய
அனைத்தையும் படிப்படியாக
இழந்துவிட்டு புதிய
மலேசிய சமுதாயமாக
உருமாறி போகக்கூடிய
நிலைமை வந்தாலும்
வியப்பதற்கு ஒன்றுமில்லை.
காரணம்,
மேலே சொன்னதுபோல
மலாக்காவில் இதே தமிழ்
இனம்தான் கண்முன்னாலேயே
வாழ்ந்துகொண்டிருக்கிறது
வேறொரு தோற்றத்தில்..

மலேசிய தமிழர் வரலாறு

7, 8ஆம் நூற்றாண்டுகள்
முதற்கொண்டே
பழந்தமிழருக்கு
மலாயாவுடன்
தொடர்பு இருந்துள்ளதாக
தெரியவருகிறது. தமிழ்
மன்னன் இராசேந்திர சோழன்
கடல்வழிப் பயணம்
மேற்கொண்டு மலாயாவில்
கடாரம் எனும் பெயரில்
நிலப்பரப்பை உருவாக்கி
ஆட்சி செய்துள்ள
வரலாறு உண்டு.
தொடக்க காலத்தில் வணிகத்
தொடர்புகளின்
பொருட்டுதான் தமிழர்கள்
தென்னிந்தியாவிலிருந்து
இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்
(Kedah) பூசாங் நதிக்கரையில்
(Sungai Bujang)
குடியிருப்புகளை
அமைத்தனர். வந்தவர்கள்
சைவர்கள் என்பதால்
பூசாங்கில்
சிவாலயங்களையும் கட்டினர்.
அவ்வாலயங்களின் எச்சங்கள்
இன்றும் இருக்கின்றன.
அவை தமிழன் வரலாற்றைப்
பறைசாற்றிக்
கொண்டிருக்கின்றன.
வரலாற்று நூல்கள்,
கல்வெட்டுகள்,
புதைபொருள்கள்
ஆகியவை தவிர
மலாயா நாட்டின்
மக்களுடைய
மொழியோடும்,
பண்பாட்டோடும், பழக்க
வழக்கத்தோடும் தமிழரின்
அடையாளங்கள் இரண்டறக்
கலந்துள்ளன.
குறிப்பாக மலாய்மொழியில்
தமிழ்ச்சொற்களும் தமிழ்
மூலத்தைக் கொண்ட
வடமொழிச் சொற்களும்
நிறைய கலந்திருக்கின்றன.
காட்டாக, அம்மா(Emak),
ஐயா(Ayah), நகரம்(Negara),
கடை(Kedai), கப்பல்(Kapal),
கட்டில்(Katil), பெட்டி(Peti),
கெண்டி(Kendi), அரசன்
(இராஜா – Raja), மாணிக்கம்
(Manikam), ஆகமம்(Agama),
பத்தி(பக்தி – Bakti), மந்திரம்
(Mantera) இப்படியான
பல்லாயிரம் சொற்கள்
இருக்கின்றன.
தமிழர்களுடன் ஏற்பட்ட
தொடர்பின் காரணமாக
மலாயா நாட்டு மக்கள்
பெற்றுள்ள பயன்கள்
பலவுண்டு. உழவு,
பயிர்த்தொழில், ஏர் உழுதல், நீர்
பாசனம் செய்தல் ஆகிய
தொழில்களைக்
கற்றுக்கொண்டனர். வணிக
முறைகள், நாணயத்தைப்
பயன்படுத்துதல்,
இரும்பு ஆயுதங்கள் செய்தல்,
பொன்,
வெள்ளி ஆகியவற்றைக்
கொண்டு அணிகலன்கள்
உருவாக்குதல், மருத்துவம்
ஆகிய கலைகளை
அறிந்துகொண்டனர்.
தமிழரைப் போல பருத்தி,
பட்டு ஆகிய
ஆடைகளை நெசவு செய்து
அணிந்தனர். சமையல்
செய்வதில் தமிழரைப்
போலவே தானிய வகை, மணப்
பொருள்களைப் பயன்படுத்தத்
தொடங்கினர். தமிழ்க் இசை,
நடனம்,
பாவைக்கூத்து போன்ற
கலைகளை தங்கள்
கலைகளோடு
பிணைத்துக்கொண்டனர்.
வெற்றிலைப்
பாக்கு மாற்றி திருமணம்
செய்வது போன்ற திருமண
சடங்கில் வெற்றிலைப்
பாக்கை ஏற்றுக்கொண்டனர்.
கையில்
மருதாணி வைத்து அழகு
பார்த்தனர். பல்லா
ங்குழி போன்ற பாரம்பரிய
விளையாட்டுகளை தங்கள்
வயப்படுத்திக்கொண்டனர்.
இரண்டாம் கட்டமாக, 1400களில்
மலாக்கா எனும் நகரம் மன்னன்
பரமேசுவரனால் மலாயாவில்
உருவாக்கப்பட்டது.
இவருடைய அரச
தலைமுறை 110 ஆண்டுகள்
மலாக்காவை ஆட்சி செய்தது
. தென்கிழக்கு ஆசியாவில்
மலாக்கா தலைசிறந்த வணிக
நகரமாக
இருந்தபோது மீண்டும் வணிக
நோக்கத்திற்காகத் தமிழர்கள்
மலாயாவுக்கு
வந்திருக்கின்றனர். இவர்களில்
பெரும்பாலோர்
உள்நாட்டு பெண்களை
மணந்துகொண்டு இங்கேயே
தங்கிவிட்டனர்.
இவர்களின்
தலைமுறை இன்று தங்களின்
மொழி, இன, சமய,
பண்பாட்டு அடையாளங்களைத்
தொலைத்துவிட்டு
இருக்கின்றனர்.
உள்நாட்டு மலாய் மொழியின
பண்பாட்டோடு ஏற்பட்ட
கலப்பின் காரணமாக
இப்போது புதிய இனம்போல
மாறி இருக்கின்றனர். இவர்கள்
‘மலாக்கா செட்டிகள்’
என்று இன்றைய
மலேசியாவில்
அடையாளப்படுத்தப்
பட்டுள்ளனர். இவர்கள் தமிழர்
பரம்பரையில் வந்தவர்களாக
இருந்தாலும் மலேசியத்
தமிழர்களிடமிருந்து
தனித்தே இருக்கின்றனர்.
தமிழரே அல்லாதவர்
போலாகிவிட்டனர்.
வரலாற்றுக் காலத்தைக்
கடந்து மலாயாவை
ஆங்கிலேயர் கைப்பற்றிய
பிறகு பெருவாரியான
எண்ணிக்கையில்
தென்னிந்தியத் தமிழர்கள்
மலாயாவுக்குக்
கொண்டுவரப்பட்டனர். இரப்பர்
தோட்டங்களில்
வேலை செய்வதற்கும்,
கரும்புக் காடுகளில்
பணியாற்றவும்,
காடுகளை அழித்து
நாடாக்கவும்
சஞ்சிக்கூலிகளாக வந்த
தமிழர்களை ஆங்கிலேயர்
பயன்படுத்தினர். (சஞ்சி –
மலாய்மொழியில் Janji
அதாவது ஒப்பந்தம்)
இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள்
பட்ட இன்னல்களும்
கொடுமைகளும்
அவலங்களும் சொற்களால்
விவரிக்க முடியாதவை.
காடுகளை அழிக்கும்
போது கொடிய
விலங்குகளால்
தக்கப்பட்டு இறந்தவர்கள், இரப்பர்
காடுகளில் நஞ்சுயிரிகளால்
தாக்கப்பட்டவர்கள்,
மலேரியா காய்ச்சல், கொடிய
நோய்கள், மருத்துவ
வசதியின்மை முதலிய
காரணங்களால்
மரணத்தை தழுவியவர்கள்
என்று கணக்கெடுத்துப்
பார்த்தால் 12 இலக்கம்(இலட்சம்)
தமிழர்கள் மலாயாவில்
மாண்டுபோயிருக்கின்றனர்.
இரண்டாம் உலகப் போரில்
ஆங்கிலேயரைத்
தோற்கடித்து மலாயாவை
சப்பானியர்
கைப்பற்றியபோது தமிழர்கள்
பட்ட துன்பங்களும் கொஞ்ச
நஞ்சமல்ல. சயாம்
தொடர்வண்டி திட்டத்திற்கு (
சயாம் ரயில்வே)
வேலை செய்ய
ஆயிரக்கணக்கில் நம்மவர்கள்
இரவோடு இரவாகக்
கொண்டுசெல்லப் பட்டுள்ளனர்.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள்
இருக்கிறார்களா இல்லையா?
என்றுகூட தெரியாமல்
தவித்திருந்தனர் நம் மக்கள்.
இப்படி தண்டவாளம் அமைக்க
சென்றவர்கள் கொத்துக்
கொத்தாக மடிந்துபோய்
கும்பல் கும்பலாகப்
புதைக்கபட்டுள்ளனர்.
இத்தனைக்கும் இடையில்
மலாயாவையும், 1957க்குப்
பிறகு மலேசியாவையும்
ஒரு வளமிக்க நாடாக
உருவாக்குவதில்
தமிழர்களி பங்கு
மிகப்பெரியது என்றால்
மிகையல்ல.
மலேசியா விவசாய நாடாக
இருந்த காலத்தில் அதனுடைய
பொருளாதார
வளர்ச்சிக்கு உறுதிணையாக
இருந்த இரப்பர்,
செம்பனை உற்பத்தி, கரும்பு,
கொக்கோ முதலான
தோட்டத்துறைகளில் இரத்தம்
சிந்தி தமிழ் மக்கள்
உழைத்தார்கள்.
இன்றைய நிலையில்
மலேசியத் தமிழர்கள்
(இந்தியர்கள்)
பல்வேறு நிலைகளில்
முன்னேற்றம் கண்டுள்ளனர்.
உயரிய கல்விக் கற்றோராக,
தொழிலதிபர்களாக,
நிபுணர்களாக,
செல்வந்தர்களாக, பெரும்
கோடிசுவரர்களாக
உருவாகி இருக்கின்றனர்.
ஏழைகளாக இந்த நாட்டில்
குடியேறியவர்கள்
இன்று வளமான
வாழ்க்கை வாழ்கின்றனர்.
இவர்களுக்கு இடையில்
இன்னும்
நூறாண்டுகளுக்கு முன்பு
மலாயா வந்து தோட்டங்களில்
வாழ்ந்த அதே இக்கட்டான
சூழலில் வாழ்பவர்களும்
இருக்கவே செய்கின்றனர்.
பல்வேறு சமுதாயத்தில்
சிக்கல்களிலும்
சீர்கேடுகளிலும்
மாட்டிக்கொண்டு
தவிப்பவர்களும் ஏராளமாக
உள்ளனர்.
எது எப்படி இருப்பினும்
தமிழர்கள் இன்று நாட்டின்
குடியுரிமை பெற்ற
இனமாக இந்தியர்கள் என்ற
முத்திரையோடு வாழ்த்து
வருகின்றனர். நாட்டின்
அரசியலமைப்புச் சட்டத்தில்
இருக்கின்ற உரிமைகளுக்காக
இன்றளவும்
போராடி போராடி தங்கள்
வாழ்க்கையை
ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இருக்கின்ற உலக நடப்பையும்
மலேசிய சூழலையும்
கூர்ந்து கவனித்துப்
பார்க்கையில்,
அடுத்து வருகின்ற
ஐம்பது ஆண்டுகளில்
மலேசியத் தமிழர்கள் தங்களின்
மரபியல் அடையாளங்களான
மொழி, இனம், சமயம், கலை,
பண்பாடு, இலக்கியம்,
வரலாறு, வாழ்வியல் ஆகிய
அனைத்தையும் படிப்படியாக
இழந்துவிட்டு புதிய
மலேசிய சமுதாயமாக
உருமாறி போகக்கூடிய
நிலைமை வந்தாலும்
வியப்பதற்கு ஒன்றுமில்லை.
காரணம்,
மேலே சொன்னதுபோல
மலாக்காவில் இதே தமிழ்
இனம்தான் கண்முன்னாலேயே
வாழ்ந்துகொண்டிருக்கிறது
வேறொரு தோற்றத்தில்..