Sunday, 8 June 2014

How you are in chaos theory

You Are," I suggest a way of thinking
mathematically about such a style of
being, a style of styles, or, simply, an
identity.
As long ago as the 1980s, people had
begun to see the flaws in
pharmacological approaches to mental
disorders. They were based on a linear
model of mental illness. That model
says that something goes wrong
somewhere in the linear sequence
from gene to receptor to dysfunction.
Instead, as more recent work shows,
we need to recognize that the brain is
a chaotic system. Reality is
continuously changing, and its
changes perturb our mental
functioning which is also continuously
changing. A small perturbation of our
brains produces waves and waves of
neuronal response. The initial
conditions of the neurons that we
bring to any given change in reality
will be varying wildly. Small changes in
reality can result in very large
changes in our experience, because
our reaction depends on the initial
conditions our brains bring to those
changes in reality, and those initial
conditions are constantly changing.
Behaviorally, we are here or there,
happy or unhappy, worried or secure,
alert or soporific, and so on. Each of
us responds differently even to
medications, to say nothing of novels,
movies, politicians, or any of the
myriad things that our culture and
environment bring us. Our brains
respond differently because they not
only differ from person to person but
their states vary from moment to
moment.
Grigsby and Stevens propose chaos
theory for mathematicizing our
characteristic defenses (and I would
extend the idea to identity, the
pervasive quality in all an individual's
particular behaviors). (Grigsby and his
colleagues were the first to suggest
this idea publicly, but my colleague
Murray Schwartz and I had speculated
along these lines before we knew of
Grigsby's work.)
According to chaos theory, one can
describe a chaotic system (like the
weather or our everyday behaviors) as
a myriad of energy states, some
requiring high energy, some low. If
you graph these on a plane, they
appear as a surface with high points,
hills, and low points, valleys between
the hills. The system will tend to
gravitate to the valleys. Hence they
are called "attractors" and sometimes
"strange attractors." (That doesn't
mean the people are strange, just the
attractors.)
We can think of our character,
including our defenses, as a
configuration of such attractors.
That is, we will tend to respond to the
ever-changing and random demands of
reality (chaos) in ways that involve
the least expenditure of energy. Our
mental state will roll down, as it
were, into the valleys. We will,
therefore, tend to repeat the valley
patterns of behavior.
Notice that this theory has much in
common with Freud's concept of a
repetition compulsion (Grigsby and
Stevens 2000, 317). Basically, if a
solution to a problem from reality
worked before (and even if it didn't),
try that solution first. That uses the
least brain energy.
We can think through, then, how you
are who you are in two ways. One, how
you are who you are consists of a
series of procedural memories widely
distributed in your brain. Together
they constitute the style of your
various styles, the style of your
being, your pervasive identity. Two ,
we can imagine your style of being
mathematically, as a configuration of
strange attractors in a three-
dimensional graph of your mental
states. How you are who you are
equals the way your momentary mental
states will gravitate to the valleys in
the configuration of mental states by
which a mathematician would
representquite simplyyou.
Items I've referred to:
Freud, Sigmund, Beyond the Pleasure
Principle, (1920g). Std. Edn. 8: 7-64.

posted from Bloggeroid

Saturday, 7 June 2014

தமிழீழ தேசியதலைவர் பிரபாகரன் அவர்களின் போரட்டபாதை


---------
மன்னிக்கவேண்டும். நீங்கள் சாக
அனுமதிப்பதற்கில்லை என்றார்’
பிரபாகரன்.
நான்கு பெண்களும்
ஆளுக்கொரு பக்கம்
திரும்பி நின்றிருந்தனர்.
நான்கு முகங்களிலும்
நான்கு கோபங்கள்.
இதே உண்ணாவிரதம்
கூடாது என்று அரசாங்கக்
காவல் துறையினர்
வந்து இழுத்துச் செல்வார்கள்
என்றுதான் அவர்கள்
எதிர்பார்த்திருந்தார்கள்.
போகிற வழியில்
தர்ணா செய்யலாம். லாக்கப்பில்
கலாட்டா செய்யலாம்.
கோர்ட்டில் கோஷம் போடலாம்,
சிறைச்சாலையில் மீண்டும்
உண்ணாவிரதம் இருக்கலாம்,
செய்தி வெளியே வரும்,
விஷயம் பெரிதாகும், மக்கள்
திரண்டு ஊர்வலம் போவார்கள்,
கல்லூரி காலவரையறையற்று மூடப்படும்
என்று அடுத்தடுத்த திட்டங்கள்
தயார்.
எதிர்பார்க்கவில்லை.
இப்படி இழுத்து வந்து வலுக்கட்டாயமாகச்
சாப்பிடவைத்து போதனை செய்யும்
இந்த மனிதர் யார்?
என் பெயர் பிரபாகரன் என்றார்
பிரபாகரன்.
கேள்விப்பட்டிருந்தார்கள்.
பார்த்ததில்லை.
இவரா? சே.
ஒரு புரட்சி இயக்கத்தின்
தலைவர் இத்தனை குள்ளமாக,
கட்டை குட்டையாக, மெல்லிய
குரலில் பேசிக்கொண்டு…
பார்த்தால்
குண்டு வைக்கக்கூடிய
ஆசாமிபோல்
தெரியவில்லையே? குரலில்
என்ன ஒரு மிருது!
சுற்றி இருந்தவர்களும்
அப்படித்தான் இருந்தார்கள்.
அன்பான பேச்சு. கனிவான
பார்வை. துடிப்பான
கண்காணிப்பு.
உயிர் விலைமதிப்பற்றது.
வீணாக
அதனை இழக்கக்கூடாது.
உங்களை நான்
தமிழகத்துக்கு அனுப்புகிறேன்.
தேசத்துக்கு ஏதாவது செய்ய
நினைத்தால் உருப்படியாகச்
செய்யுங்கள். சம்மதமா?
சம்மதித்தார்கள்.
தோணி ஏறினார்கள்.
மதிவதனி, வினோஜா, லலிதா,
ஜெயா என்கிற அந்த
நான்கு பெண்களும்
கோடியக்கரை வரைக்கும்
தோணியில்
வந்து அங்கிருந்து பஸ்
பிடித்துச்
சென்னைக்கு வந்து சேர்ந்தபோது,
அழைத்துச்சென்று
தங்கவைக்கும்
பொறுப்பு திருமதி அடேல்
பாலசிங்கத்துக்க
ு வழங்கப்பட்டிருந்தது.
திருவான்மியூர் வீட்டில்
நான்கு பெண்களுக்கும்
அறை ஒதுக்கப்பட்டது.
பாலசிங்கம் தன் மனைவியைத்
தனியே கூப்பிட்டுச்
சொன்னார். கவனம்.
யாழ்ப்பாணத்து ஒழுக்க விதிகள்
ரொம்பக் கடுமையானவை.
திருமணமாகாத
பெண்களை நாம் ஆயுதங்களைப்
பாதுகாப்பதுபோல் கவனமாகப்
பாதுகாக்க வேண்டும்.
ஆண்களுடன் பேசுவது,
பழகுவது, அவர்கள் புழங்கும்
இடத்தில் சகஜமாக
வந்து போவதற்குக் கூட கண்,
காது,
மூக்கு வைத்துவிடுவார்கள்.
தம்பி, உன்
பொறுப்பு என்று சொன்னது அவர்களது நிகழ்காலத்துக்க
ு மட்டுமல்ல. எதிர்காலத்துக்க
ும் சேர்த்து.
அடேலும் பெண் தான். ஆனால்
ஆஸ்திரேலியப் பெண்.
லண்டனில் வசித்த பெண்.
காதலித்துத் திருமணம்
செய்துகொண்ட பெண். அவர்
யாழ்ப்பாணத்து மக்களை அப்போதுதான்
படித்துக்கொண்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின்
முகாமில் முதல் முதலில் அவர்
வந்து சேர்ந்தபோதே நிறைய
சங்கடங்களைச்
சமாளிக்கவேண்டியிருந்தது.
ஒருவழியாகப் பிரபாகரன்
அவரை `அன்ரி’ (ஆண்ட்டி)
என்று அழைத்து ஆரம்பித்துவைக்க
, அதுவே அவரது நிரந்தர
உறவு முறையாயிற்று.
ஆனால் இந்தப் பெண்கள்?
பிரபாகரன் வந்தார்.
அனைவருக்கும் அந்த
நான்கு பேரையும் அறிமுகம்
செய்துவைத்தார்.
இனி இவர்களும் நம்மைச்
சேர்ந்தவர்கள். சமையலில், பிற
வேலைகளில் சேர்த்துக்கொள்ள
ுங்கள். ஆயுதம் பழக
விரும்பினால் ரொம்ப
சந்தோஷம். கற்றுக்கொடுங்கள்.
இன்னும் சில பெண்கள்
விரைவில் வந்து சேர
வாய்ப்பு இருக்கிறது.
வந்தார்கள். ஒருவர் இருவரல்லர்.
நிறையவே வந்தார்கள்.
தமிழகத்தில் பயிற்சி, ஈழத்தில்
யுத்தம், வாருங்கள் என்று.
`டெலோ’ கூப்பிட்டு நிறையப்
பெண்கள்
தோணி ஏறியிருந்தார்கள்.
கல்லூரிப் பெண்கள்.
படிப்பை விட்ட,
படித்து முடித்த பெண்கள்.
துரதிருஷ்டவசமாக அவர்களைத்
தமிழகத்தில் தங்க வைக்கவோ,
முறையான
பயிற்சியளிக்கவோ
டெலோ ஏற்பாடு செய்யத்
தவறியிருந்தது. என்ன
செய்வது,
எங்கே போவது என்று தெரியாமல்
தத்தளித்துக் கொண்டிருந்த
அந்தப் பெண்களுக்குப் பிரபாகரன்
ஒரு மூத்த சகோதரன் போல
நின்று அழைத்தது,
மிகப்பெரிய ஆறுதலாக
இருந்தது.
அத்தனைபேரும் விடுதலைப்
புலிகளின்
பயிற்சி முகாம்களில்
அடைக்கலமானார்கள்.
திருவான்மியூரில்
தங்குமிடம்.
சென்னைக்கு வெளியே பல
இடங்களில் பயிற்சி. போவார்கள்,
வருவார்கள், சமைப்பார்கள்,
சாப்பிடுவார்கள். பேசித்
தீர்த்துவிட்டுப் படுத்துத்
தூங்கினால் மறுநாள் மீண்டும்
பயிற்சி.
பிரபாகரன் வருவார்.
அனைவருடனும் பேசுவார்.
உற்சாகமான, நம்பிக்கையூட்டக
்கூடிய அற்புதமான பேச்சுகள்.
அனைவரையும்
கூப்பிட்டு உட்காரவைத்து கோழியடித்துக்
குழம்பு வைப்பார்.
பாலசிங்கம் மீன் சமைப்பதில்
கில்லாடி.
வேறு பல தோழர்கள் கறிகாய்
நறுக்குவார்கள். கடைக்குப்
போவார்கள்.
துணி துவைப்பார்கள்.
வீடு பெருக்கி, சுத்தம்
செய்வார்கள். ஹாஸ்டல் வார்டன்
மாதிரி அடேல் பாலசிங்கம்
அத்தனை பேரையும்
கட்டி மேய்ப்பார்.
`அன்ரி, நீங்களும் ஏன் பிஸ்டல்
சுடக் கற்கக்கூடாது?’
பிரபாகரன் ஒருநாள் கேட்டார்.
அவருக்கும் பயிற்சியளிக்கப்
பட்டது. பயிற்சி முடித்துத்
திரும்பிய ஒருநாள்
தற்செயலாகப் பிரபாகரன்
சொன்னார். `நான்
மதிவதனியை விரும்புகிறேன்.

ஒரு கண்ணிவெடிகூட
அத்தனை அதிரச் செய்திருக்க
முடியாது. இயற்கை என்ன
இலங்கை அரசா?
எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க?
ஆனால் ஆரம்பத்தில் யாருக்கும்
புரியவில்லை.
அல்லது புரிந்துகொள்ள
யாரும் விரும்பவில்லை.
அன்றைக்கு உமா மகேஸ்வரனை அத்தனை கேள்வி கேட்டாயே,
இன்றைக்கு உன் காதல்
அத்தனை முக்கியமாகிப்
போய்விட்டதா என்றுதான்
பெரும்பாலானோர்
கேட்டார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கம்
காதலுக்கு எதிரியல்ல.
காதலித்துக்கொண்டே காலம்
கழிப்பதற்கோ,
கழட்டிவிட்டுவிட்டுப்
போய்விடுவதற்கோதான்
எதிரி. ஒரு பெண்ணைப்
பிடிக்கிறதா? கூப்பிட்டுப்
பேசு. பெண்ணிடமல்ல.
பெற்றோரிடம். புரியவை.
மணந்துகொள். தீர்ந்தது விஷயம்.
ஆனால், உமா மகேஸ்வரன்
பாதித்திருந்தார். மிகவும்
பாதித்திருந்தார்.
இயக்கத்திலிருந்
து அவரை வெளியேற்றியது,
அவர் ப்ளாட் இயக்கம் கண்டது,
ஒரு பெரும் படை அவருடன்
போனது, பல வெளிநாட்டுத்
தொடர்புகள் அவருடன்
சென்றது எல்லாம்,
எல்லாமே எல்லோரையும்
பாதித்திருந்தன. அதனால்,
பிரபாகரனுக்குக் காதல்
என்றபோது சுற்றி நின்று கேள்வி கேட்டார்கள்.
சொற்களில் கோபம் சேர்த்து,
சுற்றிச் சுற்றி அடித்தார்கள்.
பிரபாகரன் அனைவருக்கும்
பொறுமையாக பதில்
சொன்னார். ஆமாம்,
காதலிக்கிறேன். திருமணம்
செய்துகொள்ளப்போகிறேன்.
நீங்களும் காதலிக்கலாம்.
திருமணம் செய்துகொள்ளலாம்.
திருமணத்தை நாம்
தடுப்பதே இல்லை.
பாலசிங்கம் இயக்கத்தில்
ஒவ்வொருவரிடமும்
தனியே பேசினார்.
பேசிப்பேசிப் புரியவைத்தார்.
காதல் இயற்கையானது.
திருமண
உறவு ஆரோக்கியமானது.
அதற்குத்
தடைபோடுவதன்மூலம்
எதையும் பெரிதாகச்
சாதித்துவிட முடியாது.
முறையற்ற உறவைத்தான்
கூடாது என்று சொல்கிறோம்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங
்கள்.
பலர் புரிந்துகொண்டார்கள்.
சிலர் புரிந்துகொள்ள
மறுத்தார்கள். பெரிய
களேபரத்துக்குப் பிறகுதான்
பிரபாகரன் மதிவதனி திருமணம்
நடந்தது.
மதிவதனியின் பெற்றோர்
புங்குடுத்
தீவிலிருந்து புறப்பட்டு வந்திருந்தனர்.
பாலசிங்கம் அவர்களுடன்
உட்கார்ந்து பேசிப்
புரியவைத்திருந்தார். 1984-ம்
வருடம் அக்டோபர் முதல் தேதி.
திருப்போரூர் முருகன்
கோயிலில் மிக எளிமையாக
நடந்த திருமணம் அது.
குறைந்தபட்ச உறவினர்கள்,
குறைந்தபட்ச நண்பர்கள்.
திருமணம் முடிந்தபிறகும்க
ூட இயக்கத்தில் பலரால்
அதை நம்பமுடியாமலேயே
இருந்தது. விடுதலைப்
புலிகள் அமைப்பு உலகெங்கும்
பரவத் தொடங்கியிருந்த காலம்
அது. லண்டனில் புலிகள்
இருந்தார்கள். பிரான்ஸில்
இருந்தார்கள். ஸ்விட்சர்லாந்தில்
இருந்தார்கள்.
ஆஸ்திரேலியாவில்
பரவியிருந்தார்கள். தகவல்
ஒவ்வொரு இடமாகப் போகப்
போக, அத்தனை பேரும் நிஜமா,
நிஜமா என்று நம்பமுடியாமல்தா
ன் கேட்டார்கள்.
இந்தக் கட்டத்தில் பாலசிங்கம்
செய்த உதவி மகத்தானது.
அவர்தான் பேசினார். அவர்
மட்டும்தான் பேசினார்.
பேசிப்பேசிப் புரியவைத்தார்.
தனி மனித
உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப்
பழகுங்கள். அப்படிக்
கொடுக்காத சந்தர்ப்பங்கள்
அனைத்தும்
விரிசலை உண்டாக்கியிருக்
கின்றன.
தனி வாழ்க்கை ஒழுங்காக
இருந்தால்தான் இயக்கமாகச்
செயல்படும்போது முழுக்கவனம்
செலுத்த முடியும்.
ஒன்று சொல்லவேண்டும்.
பிரபாகரன்
மாதிரி ஒரு செயல்வெறி கொண்ட
வீரரைத் திருமணம்
செய்துகொள்ள ஒரு துணிச்சல்
வேண்டும்.
தன்னைத்தானே நாட்டுக்கு நேர்ந்து விட்டுக்கொண்டவர
ின்
வீட்டை ஆள்வதென்பது சாதாரண
செயலல்ல. விவசாய
விஞ்ஞானம் படித்துக்கொண்டி
ருந்த மதிவதனி அதன்பின்
வீட்டு நிர்வாக விஞ்ஞானம்
பயில ஆரம்பித்தார்.
மூன்று குழந்தைகள்
அவர்களுக்குப் பிறந்தன. சார்ல்ஸ்
ஆண்டனி, துவாரகா,
பாலச்சந்திரன்.
மூன்றுமே மாவீரர்களின்
பெயர்கள். (பாலச்சந்திரன் என்பவர்
மதிவதனியின் சகோதரர். அவரும்
புலிகள் இயக்கத்தில்
இருந்து வீரமரணம்
அடைந்தவர்தான்.)
வாழ்நாளில்
பெரும்பகுதி கானகத்தில்.
இன்று உறங்கும் இடத்தில்
நாளை இருப்போமா என்று தெரியாது.
இன்று கிடைத்த
உணவு நாளை கிடைக்குமா தெரியாது.
இன்றிருக்கும் உயிர்
நாளை இருக்குமா என்றும்
தெரியாது.
அதனாலென்ன? இந்த
வாழ்க்கையும் இனிக்கத்தான்
செய்கிறது. ஓய்வான
சமயங்களில் பிரபாகரன்
வீட்டு வேலைகளும் பார்த்தார்.
கோழியடித்துக்
குழம்பு வைக்க இப்போதும்
தயங்குவதில்லை. வாருங்கள்,
ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளல
ாம் என்றால், இரு என்று ஓடிச்
சென்று ஒரு பூந்தொட்டியை எடுத்துவந்து அருகே வைத்துக்கொண்டு,
ம், எடு என்னும் குழந்தைத்தனம்
அப்படியேதான் இருக்கிறது,
தன்னால் ஒழுங்காக இங்கிலீஷ்
பேசமுடியவில்லையே என்கிற
வருத்தத்தைப் போலவே.
ஆ, அது ஒரு தீராத வருத்தம்.
அடிக்கடி சொல்லி ஏங்குவார்.
மதிவதனி கமுக்கமாகச்
சிரிப்பார். சர்வதேசத்
தலைவர்களுடன், அமைதிப்
பேச்சுவார்த்தைகளில்
சகஜமாகப் பேசமுடியாமல் என்ன
ஒரு சிக்கல்!
யாராவது இங்கிலீஷ்
தெரிந்தவர்கள் உடன்
இருந்தே தீரவேண்டியிருக்
கிறது. சே. படித்திருக்கலாம்.
டே தம்பி,
நீயாவது படி என்று மகனை முழு மூச்சில்
படிக்க வைத்தார். சார்ல்ஸ்
ஆண்டனி யாழ்ப்பாணத்தில்
பள்ளியிறுதித்
தேர்வு எழுதியபோது,
அவரது தனிப்பாடம்,
விருப்பப்பாடம் ஆங்கிலம். அந்த
வருடம் யாழ்ப்பாணத்தில்
ஆங்கிலப் பரீட்சை எழுதிய
ஒரே மாணவன் சார்ல்ஸ்
ஆண்டனிதான்.
அவருக்காக
ஒரே ஒரு கேள்வித்தாள்
தனியாக வந்தது!.
(தொடரும்)

posted from Bloggeroid

தமிழீழ தேசியதலைவர் பிரபாகரன் போரட்டப்பாதை


--------------------------
------------------------------
-----------

ஆயிரத்தித்
தொள்ளாயிரத்தி எண்பத்தி மூன்று என்பது ஈழத்
தமிழர்களைப் பொறுத்த
வரை தேவதைகளாலும்
சாத்தான்களாலும்
ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக
இருந்தது. எத்தனை அவலங்கள்!
திரும்பிய பக்கமெல்லாம்
கொலைகள், கொள்ளைகள்,
கலவரம். ஒதுங்க ஓர்
இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக
ஓடிக்கொண்டிருந்தார்கள்.
வாழ்விடங்கள் இல்லாமல்
போயின. பிள்ளைகளின்
படிப்பு போனது. தொழில்
போனது. உறவுகள்,
தொடர்புகள், சொத்து சுகங்கள்,
மேலான நிம்மதி அனைத்தும்
இல்லாமல் போன வருடம் அது.
தறிகெட்டு நிகழ்த்தப்பட்ட
தாக்குதல் இல்லை அது.
உட்கார்ந்து யோசித்து திட்டமிட்டுச்
செய்யப்பட்ட கலவரம்.
பீடாதிபதி ஜெயவர்த்தனா ஆசீர்வாதமளித்தி
ருந்தார். அவர் அதிபர்.
கண்ணசைத்தால் போதும்.
கலவரதாரிகள்
சிலிர்த்துக்கொண
்டு எழுந்துவிடுவார்கள்.
ஒரு கையில் வாக்காளர்
பட்டியல். மறுகையில் ஆயுதம்.
வீடு வீடாகத் தேடிச்
சென்று கொல்வது ஒரு சுகம்.
இழுத்துப்
போட்டு எரிப்பது ஒரு சுகம்.
குழந்தைகள் கதறுகின்றனவா?
தூக்கிப்
போட்டு கீழே விழும்போது சுட்டுத்தள்ளு.
பார்க்கும் மக்கள்
வாயடைத்து நிற்பார்கள்.
கொத்தாகச் சுட்டுத்தள்ள
அதுவே தருணம். வீணாக்காதே.
ஓடுகிறார்களா?
பிடித்து நிறுத்திக் கத்தியைச்
சொருகு. கடைகளுக்குள்
புகுந்துகொண்டு ஷட்டரை இறக்கிவிடுகிறார
்களா? விட்டுவிடு.
அவர்களுக்கு உள்ளேயே ஜீவ
சமாதியளித்துவிடலாம்.
ஒரு கடைக்கு ஒரு கேன்
பெட்ரோல் போதும். நீ
புகைக்காதவனாயினும்
பரவாயில்லை. பாக்கெட்டில்
எப்போதும்
தீப்பெட்டி இருக்கட்டும்.
இதெல்லாம் காவியத்துக்குப்
பாயிரம் போல. மேல்
பேச்சுக்கு `விடுதலைப்
புலிகளைத் தேடுகிறோம்’
என்று சொல்வார்கள். ஏய்,
பார்த்தாயா? இங்கே புலிகள்
இருக்கிறார்களா?
மரியாதையாகச்
சொல்லிவிடு. பிரபாகரன்
இங்கேதான் பதுங்கியிருக்கி
றார் என்று கேள்விப்பட்டோம்.
எங்கே?
ஊர் ஊராக ராணுவ டிரக்குகள்
போகும். இறங்கி,
எதிர்ப்படுபவர்களைப்
பிடித்து விசாரிப்பார்கள்.
அடித்துத் துவைத்துத்
தூக்கிப் போடுவார்கள்.
அப்படித்தான் ஜூலை 15-ம்
தேதி மீசாலை கிராமத்துக்கு ராணுவம்
போனது. இரண்டு ஜீப்புகள்,
ஒரு மினி பஸ், பின் தொடரும்
ஒரு பெரிய ராணுவ டிரக்.
நிறைய வீரர்கள். அனைவரிடமும்
ஆயுதங்கள்.
சுற்றி வளைத்து நின்றவர்கள்
மத்தியில் நான்கு விடுதலைப்
புலிகள் மாட்டிக்கொண்டார
்கள். அதுவும் பதுங்க
வழியில்லாத வெட்ட வெளிப்
பிரதேசம்.
சரி, தாக்கத் தொடங்கலாம்
என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு சுட
ஆரம்பித்தார்கள். உக்கிரமான
சண்டை. வீரம் செறிந்த சண்டை.
நான்கு பேருக்கும்
நூறு பேருக்கும்
இடையிலான சண்டை. ஆனால்
பதுங்கியிருந்து
தாக்குவதற்கும்
வெட்டவெளியில்
நின்று பதிலடி தருவதற்கும்
வித்தியாசங்கள் உண்டு.
எதிரியின் குறி சரியாக
அமையும்
வரை மட்டுமே உயிர்
பிழைத்திருக்க முடியும்.
பல நிமிடங்கள் நீடித்த அந்த
யுத்தம் இரண்டு விஷயங்களைத்
தெளிவாக்கியது.
இலங்கை வீரர்களுக்குக்
குறி பார்த்துச் சுடத்
தெரியாது என்பது ஒன்று.
வெட்டவெளியில்
சுற்றி வளைக்கப்பட்டு சிக்கிக்கொண்டால
ும் விடுதலைப்
புலிகளுக்குத் தப்பிக்கத்
தெரியும் என்பது இரண்டாவது.
இரண்டு பேர் அன்றைக்குத்
தப்பித்தார்கள்.இரண்டு பேர்
இறந்தார்கள். அதுவும் சிங்கள
வீரர்களால்
கொல்லப்பட்டு அவர்கள் உயிர்
துறக்கவில்லை.
குண்டடி பட்டிருந்தது. ஓட
முடியாது என்று தெரிந்து,
எதிரியிடம் நான்
மாட்டிக்கொள்ளக்கூடாது,
என்னைச்
சுட்டுவிடு என்று கேட்டு சக
போராளியால்
சுடப்பட்டு இறந்து போனார்கள்.
சுட்டவர்களின் முகமெங்கும்
கண்ணீர். சுடப்பட்டவர்களின்
முகங்களில் புன்னகை.
சீலன், ஆனந்த் என்கிற அந்த
இரு போராளிகளுள் சீலன்
பிரபாகரனுக்கு மிக
நெருக்கமான தோழன்.
பின்னாளில் தனக்குத்
திருமணமாகி, முதல்
குழந்தை பிறந்தபோது அந்தச்
சீலனின் இயற்பெயரான சார்லஸ்
ஆண்டனி என்பதையே அதற்கு வைக்குமளவுக்கு நெருக்கமான
தோழன்.
எனவே பிரபாகரன்
துடித்து எழுந்தார்.
விட்டுவிடுவதற்கில்லை.
சீலன், ஆனந்தின் உயிர்
இயற்கையில் கரைவதற்குள்ளாக
ஒரு பதிலளித்தாகவேண்டும்.
செல்லக்கிளி என்று கூப்பிட்டார்.
கிளி பறந்து வந்தது.
கூடவே அவரது படைப்பிரிவினர்.
மறுபுறம் புலனாய்வுப்
பிரிவினர் தட்டி எழுப்பப்பட்டு,
யாழ்ப்பாணம் முழுதும்
இரவு நேரங்களில் ராணுவ
வாகனங்கள் ரோந்து போகும்
பாதைகள் பற்றிய விவரம்
உடனே,
உடனே வேண்டுமென்று உத்தரவிடப்பட்டத
ு.
பரபரவென்று திட்டம்
தீட்டப்பட்டது.
திருநெல்வேலியைத்
தேர்ந்தெடுத்தார்கள்.
யாழ்ப்பாணத்துத்
திருநெல்வேலி. ராணுவக்
கவச வாகனங்கள் இரவுப்
பொழுதில் அணி வகுத்துப்
போகும் பாதை.
வைத்துவிடலாம்
என்று முடிவு செய்தார்கள்.
புறப்பட உத்தரவு கேட்டார்
செல்லக்கிளி.
இரு, நானும் வருகிறேன்
என்றார் பிரபாகரன். கோபம்
குறையவில்லை. சற்றும்
அணையாத தீ. உள்ளுக்குள்
கனன்ற பெருநெருப்பு.
புறப்பட்டார். பிரபாகரன்,
செல்லக்கிளி, விக்டர்,
சந்தோஷம், புலேந்திரன்,
கிட்டு. பதினான்கு பேர்
கொண்ட குழுவில்
ஆறு கமாண்டர்கள்.
பிரபாகரனே களமிறங்கினாலும்
இந்தத்
திட்டத்துக்கு செல்லக்கிளிதான்
கமாண்டர்
என்று முடிவு செய்யப்பட்டது.
இருள் மூடிய வானம்.
செல்லக்கிளி பலாலியாழ்ப்பாணம்
சாலைப் போக்குவரத்தைக்
கட்டுப்படுத்தியிருந்தார்.
பொது மக்களிடம்
சாங்கோபாங்கமாக விஷயம்
சொல்லப்பட்டிருந்தது. யாரும்
வெளியே வரவேண்டாம்.
கடைகளைத் திறக்கவேண்டாம்.
வாகனங்களை வெளியே எடுக்க
வேண்டாம். இன்றொருநாள்
வீட்டில் நிம்மதியாகத்
தூங்குங்கள். இனி தூங்க
அவகாசம்
கிடைக்குமா என்று சொல்லமுடியாது.
சாலையில் கண்ணிவெடிகள்
பொருத்தப் பட்டன. எல்லாம்
சரியாக
இருக்கிறதா என்று செல்லக்கிளி ஒருதரம்
போய்ப் பார்த்தார்.
பதினான்கு பேரும்
நிலையெடுத்து சாலையின்
இரு புறமும் அணி வகுத்துப்
பதுங்கி நின்றார்கள். பிரபாகரன்
காத்திருந்தார்.
மாதகல் என்னும் இடத்தில்
ராணுவ முகாம் ஒன்று உண்டு.
அங்கிருந்துதான்
புறப்படுவார்கள்.
புறப்பட்டார்கள். முன்னால்
ஒரு ஜீப். பின்னால் ஒரு கவச
வாகனம். மொத்தம்
பதினைந்து வீரர்கள்.
வருகிறார்கள் என்றார்
செல்லக்கிளி. அலர்ட் ஆனார்கள்.
ஜீப் நெருங்கியது.
கண்ணிவெடி பொருத்தப்பட்ட
இடத்தை அது தொட்டபோது பிரபாகரன்
விசையை அழுத்தினார்.
வெடித்தது. வெடித்தார்கள்.
அதுதான்
ஜெயவர்த்தனாவை அதிரச்
செய்தது. எண்பத்தி மூன்றாம்
வருடம்
ஜனவரியிலேயே ஆரம்பித்த
அரசாங்கக் கலவரத்
திருவிழா தன் அடுத்த
பரிமாணத்தை எட்டுவதற்கும்
அதுவே காரணமாயிற்று.
அன்றைக்கு ராணுவ டிரக்கில்
சென்றுகொண்டிருந்த
அத்தனை பேரும் இல்லாமல்
போனார்கள்.
விவரிக்க முடியாத
கொடூரங்கள். எங்கும் மரண
ஓலம், காணுமிடமெல்லாம்
ரத்தம். யாழ்ப்பாணம்
ஒரு மாபெரும்
திறந்தவெளி மயானமாகிக்கொண்ட
ிருந்தது. அவலம் ஒரு பக்கம்.
சீற்றம் ஒரு பக்கம். பிரபாகரன்
விடாமல் பதில்
தாக்குதல்களை நடத்திக்கொண்டிர
ுந்த சமயம் அது. மக்களின்
முழு ஆதரவும் புலிகளின்
பக்கம் இருந்தது. இளைஞர்களும்
பெண்களும் கூட்டம் கூட்டமாக
விடுதலைப் புலிகள்
இயக்கத்தை நோக்கிப்
படையெடுத்து வந்து சேரத்
தொடங்கிய தருணம் அது.
ஒரு மாறுதலுக்கு அந்தச் சமயம்
நான்கு பெண்கள்
ஒரு உண்ணாவிரதப்
போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
கல்லூரி மாணவிகள். பல்கலைக்
கழகத்தில் தமிழ்
மாணவர்களுக்கு அநியாயம்
நடந்துகொண்டிருந்த சமயம்
அது. யாழ்ப்பாணம் பல்கலைக்
கழகத்திலிருந்த கடைசித் தமிழ்
மாணவர் வரை நீக்கிவிட்டு,
முற்றிலும் சிங்கள மயமாக்க
அரசு மேற்கொண்ட முயற்சி.
எனவே `நாம் உண்ணாவிரதம்
இருப்போம்’
என்று அறிவித்துவிட்டு
உட்கார்ந்த அந்த மாணவிகள்
நான்கு பேரும் ஒப்புக்குச்
சொல்லவிலை.
உண்மையிலேயே சாகும்
வரை உண்ணாவிரதத் திட்டம்
அவர்களிடம் இருந்தது. யார்
சொல்லியும் கேட்கவில்லை.
விஷயம், பிரபாகரனுக்குப்
போனது. நான்கு பெண்கள். யார்
அவர்கள்? விவரம் திரட்டப்பட்டது.
எதற்கு உயிர் விட வேண்டும்?
இந்த மன உறுதியை இவர்கள்
வேறு உருப்படியான
விதங்களில் வெளிப்படுத்தலாம்
அல்லவா? ம்ஹும். வேண்டாம்.
அவர்கள் உண்ணாவிரதம்
இருந்து செத்துப் போக
அனுமதிக்காதீர்கள்.
தூக்கி வந்துவிடுங்கள்
என்று சொன்னார்.
ஒரு ஜீப். நான்கு போராளிகள்.
மின்னல் வேகம். அந்த
நான்கு பெண்களும்
பிரபாகரனின்
எதிரே நின்றுகொண்டிருந
்தார்கள். பெயரென்ன
என்று கேட்டார்.
நான்கு பேரும் பேரைச்
சொன்னார்கள்.
அதிலொரு பெயர் மதிவதனி..
(தொடரும்)

posted from Bloggeroid

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் போரட்டப்பாதை


-------------------
----------

1984-ம்
ஆண்டு இரண்டு கோடி ரூபாய்
என்பது மிகப்பெரிய விஷயம்.
சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர்.
அந்தத் தொகையைத் தன் சொந்த
சேமிப்பிலிருந்து எடுத்துக்
கொடுத்ததில் மலைத்துப்
போனார் பிரபாகரன்.
இரவெல்லாம் கண்
விழித்து உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள்.
அத்தனையும் நூறு ரூபாய்
நோட்டுக் கட்டுகள்.
எண்ணி முடித்து எடுத்து வைத்தபோது விடிந்தே போயிருந்தது.
`தம்பி நேரில் வராததில்
முதல்வருக்கு வருத்தம்தான்’ –
பாலசிங்கம்
சொன்னார்.
`அவசியம் நேரில்
பார்த்து நன்றி சொல்லத்தான்
வேண்டும்’ என்றார் பிரபாகரன்.
அந்த வாரமே ஒரு நாள்
குறிக்கப்பட்டது. ராமாவரம்
வீட்டுக்குப் பிரபாகரனும்
பாலசிங்கமும் நேரில்
சென்று எம்.ஜி.ஆரைச்
சந்தித்தார்கள். வரவேற்றார்.
உட்காரச் சொல்லிப் பேச
ஆரம்பித்தார்.
தமிழகத்தில்
இன்றைக்கு இலங்கை குறித்துப்
பேசாத தலைவர்கள்
யாருமில்லை. முதன்முதலில்
அவர்களுக்கு உதவலாம், உதவ
வேண்டும்,
உதவுவது நமது கடமை என்று கருதிச்
செயல்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர்
ஆரம்பித்து வைத்ததைத்தான்
மற்றவர்கள் பின்பற்றத்
தொடங்கினார்கள்.
எம்.ஜி.ஆர். செய்தது வெறும்
பண உதவி மட்டுமல்ல.
விடுதலைப் புலிகள்
அமைப்பு மிகவும் சிக்கலான
ஒரு சூழலில் என்ன
செய்வதென்று புரியாமல்
தடுமாறிக்கொண்டிருந்த சமயம்
அது. அப்போது எம்.ஜி.ஆர்.
நீட்டிய நேசக்கரம், அவர்கள்
தன்னம்பிக்கை இழக்காதிருக்கப்
பேருதவி புரிந்தது.
இந்திய உளவு அமைப்பான RAW
அப்போது போராளிக்
குழுக்களுக்குப்
பயிற்சியளித்துக
்கொண்டிருந்தது.
டெலோ இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இருந்தது.
ப்ளாட் இருந்தது.
நூற்றுக்கணக்கான,
ஆயிரக்கணக்கான இலங்கைப்
போராளி இயக்க இளைஞர்கள் வட
இந்தியாவில் சில ரகசியப்
பயிற்சி முகாம்களில்
மும்முரமாகப்
பயின்றுகொண்டிருந்தார்கள்.
என்ன காரணத்தினாலோ இந்தப்
பயிற்சி முகாமில் பங்குபெற
முதலில்
புலிகளை அழைக்கவில்லை.
பிறகு கடுமையாக
முயற்சி செய்து,
வாதாடித்தான் இடம்பெற
முடிந்தது. ஆனால்,
சொற்பமான
போராளிகளுக்கு மட்டுமே பயிற்சி தர
முடியும்
என்று சொல்லப்பட்டது.
இந்த ஓர வஞ்சனையில் மிகவும்
மனம் நொறுங்கிப்
போயிருந்தார் பிரபாகரன்.
என்னவாவது செய்து தமது போராளிகளுக்கு நல்ல
பயிற்சியளிக்க வேண்டும்,
தரமான
ஆயுதங்களை வாங்கவேண்டும்
என்று எண்ணிக்கொண்டிரு
ந்தவருக்கு எம்.ஜி.ஆர். அளித்த
பணம்
ஒரு வரமாகவே தெரிந்தது.
உடனடியாக
சென்னைக்கு வெளியே புறநகர்ப்
பகுதிகளில் சில
பயிற்சி முகாம்கள்
நிறுவப்பட்டன.
இலங்கையிலிருந்து பல
விடுதலைப் புலிகள்
தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு
இந்த
முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்
கள். மறுபுறம் நவீன
ஆயுதங்களை வாங்குவதற்கான
ஆலோசனைகள் பலமாக
நடைபெற்றன.
பிரபாகரன், `கே.பி.யைக்
கூப்பிடுங்கள்’
என்று சொன்னார்.
கே.பி. என்கிற குட்டி என்கிற
குமரன் பத்மநாதன் என்கிற
செல்வராஜா குமரனைப் பற்றிப்
பொதுவாக
வெளியே யாருக்கும் அதிகம்
தெரியாது. விடுதலைப்
புலிகள் அமைப்பின் ஆயுதக்
கொள்முதல் பிரிவின் தலைவர்
அவர். இலங்கையில்
மயிலிட்டி என்னும் ஊரில்
பிறந்தவர். எளிய மீனவக்
குடும்பம். இளமையில்
வறுமை. கஷ்டப்பட்டுப்
படித்து முன்னேறி,
இயக்கத்துக்காகப் பாதியில்
விட்டவர். தொடக்கத்தில்
`டெலோ’வில் உறுப்பினராக
இருந்தார் கே.பி. குட்டிமணி,
தங்கதுரை காலத்து டெலோ.
உமா மகேஸ்வரன் விவகாரம்
வெடித்து, விடுதலைப்
புலிகள் அமைப்பில்
பிளவு ஏற்பட்டபோது, மனம்
வெறுத்துப் போன பிரபாகரன்,
டெலோவுடன்
இணைந்து செயலாற்ற
முடிவு செய்து அங்கே போனபோது அறிமுகமானவர்.
பிரபாகரன் டெலோவில்
அதிககாலம் இல்லை. ஆனால்,
சில நல்ல நட்புகள்
அவருக்கு அங்கே ஏற்பட்டன.
கே.பி. அதிலொருவர்.
ஒரு சம்பவம் நடந்தது.
வெகு முக்கிய சம்பவம். 1981-ம்
ஆண்டு மார்ச் 25-ம்
தேதி ஒரு பெரும்
கொள்ளைக்குத்
திட்டமிட்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகளும்
டெலோவும்
இணைந்து திட்டமிட்ட
கொள்ளை. நீர்வேலிக்
கொள்ளை என்று சரித்திரம்
அதனைச் சொல்லும்.
வடமராச்சி பகுதியில் உள்ள பல
வங்கிக் கிளைகளிலிருந்து
அன்றைக்குப் பணத்தைத்
திரட்டிக்கொண்டு ஒரு வேன்
யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருந்
தது. அரசாங்கத்துக்குச்
சொந்தமான வேன்.
உள்ளே இருந்த பணத்தின் மொத்த
மதிப்பு எண்பது லட்சம். நல்ல
செக்யூரிடி.
ஆயுததாரிகளின் பாதுகாப்பு.
கொண்டுபோய்த்
தலைமையகத்தில்
சேர்த்துவிட்டால்
தீர்ந்தது விஷயம்.
அப்படியா? நாம் அந்தப்
பணத்தை எடுக்கிறோம்
என்று பிரபாகரன் சொன்னார்.
ஒரு கைத்துப்பாக்கி வாங்கக்கூடப்
பணமில்லாமல் இயக்கங்கள்
அவஸ்தைப் பட்டுக்கொண்டிரு
ந்த தொடக்ககாலத்தில்
வங்கிக்கொள்ளைகள்தான்
அன்றைக்கு அவர்களுக்கு ஒரே வழியாக
இருந்தது.
டெலோவுடன்
இணைந்து செயல்படலாம்
என்று முடிவு செய்து பிரபாகரன்
குழுவினர் வந்து சேர்ந்திருந்த
புதிது. ஒரு கம்பீரமான
தொடக்கமாக
அது அமைவதற்கு இந்தக்
கொள்ளை பெரிதும் உதவும்
என்று இரு தரப்புமே நினைத்திருந்தது
. திட்டமிட்டார்கள். யாழ்ப்பாணம்
பாயிண்ட்
பெட்ரோ நெடுஞ்சாலையெங்க
ும் போராளிகள்
அணி வகுத்து மறைந்து நின்றார்கள்.
வேன் புறப்பட்ட இடத்துக்குச்
சற்றுத்தள்ளி ஒரு மோட்டார்
சைக்கிளில் இளம்
போராளி ஒருவர் தயாராகக்
காத்திருந்தார்.
அவருக்கு இடப்பட்டிருந்த
உத்தரவு, வேனை விடாமல்
பின் தொடர்ந்து வா என்பது.
வேனின் முன்னும் பின்னும்
செக்யூரிடி போலீஸார்
மோட்டார் சைக்கிளில்
வந்துகொண்டிருப்பார்கள்.
அவர்களிடம் ஆயுதம் இருக்கும்.
போலீஸாருக்குப் பின்னால்
இந்த மோட்டார் சைக்கிள்
வரவேண்டும்.
இடையே யாருக்கும் சந்தேகம்
வந்துவிடக் கூடாது.
தாக்குதல் நடத்தத்
திட்டமிடப்பட்டிருந்த
நீர்வேலியை அடைவதற்குச்
சற்றுமுன்னால்
வேகமெடுத்து செக்யூரிடி பைக்குகளைத்
தாண்டி இந்த வண்டி முன்னால்
வரவேண்டும். வேன்
வந்துவிட்டது என்பதை அறிவிக்கும்
எச்சரிக்கை சிக்னல் கொடுக்க
வேண்டும். மிச்ச
வேலையை மறைந்திருக்கும்
விடுதலைப் புலி,
டெலோ போராளிகள்
பார்த்துக்கொள்வார்கள்.
வாக்கி டாக்கிகளோ,
மொபைல்
போன்களோ புழக்கத்தில்
இல்லாத காலம். நேரடித் தகவல்
ஒன்றுதான் வழி.
பாதுகாப்பு பந்தோபஸ்துடன்
வரும் பண வண்டியைப் பின்
தொடர்ந்து வந்து,
ஒரு கட்டத்தில்
முன்னேறி நண்பர்களுக்குத்
தகவல் தந்து காரியத்தைக்
கச்சிதமாக முடிக்கப்
பேருதவி புரியும்
மிகப்பெரிய பொறுப்பு.
செய்து முடித்தவர் கே.பி.,
அன்றைக்குத்தான்பிரபாகரன்
அவரை நெருக்கமாகப்
பார்த்தது. புன்னகை செய்தார்.
கையைப் பற்றி அழுத்தினார்.
நண்பா, நாம் இன்னொரு நாளும்
சந்திப்போம்.
அப்போது நினைத்திருக்க
முடியாது, அந்த
இன்னொரு நாள் சந்திப்பு,
நிரந்தர
உறவாகப்போகிறது என்று.
அப்படித்தான் ஆனது.
நீர்வேலி சம்பவத்துக்குப்
பிறகு கே.பி. தமிழகத்துக்குத்
தப்பி வந்து இருந்தார்.
போராளி இயக்கங்களுக்கு இங்கே ஆயுதங்கள்
வாங்கி அனுப்ப
முயற்சி செய்துகொண்டிருந்த
வக்கீல் கந்தசாமி என்பவரிடம்
அசிஸ்டெண்டாகச் சேர்ந்தார்
கே.பி. மும்பையில் வாசம்.
இந்திய – பாகிஸ்தான்
எல்லையிலும் இந்திய – நேபாள
எல்லையிலும் வேலை.
நிறைய வெளிநாட்டுப்
பயணங்கள். ஒவ்வொரு பயணமும்
புதிய புதிய
பாஸ்போர்ட்களில். கே.பி.
ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.
இன்றைக்குவரை அப்படித்தான்.
அவரிடம்
தாய்லாந்து குடியுரிமை இருப்பதாகச்
சொல்லுவார்கள்.
அவரது தாய்நாட்டுக்
குடியுரிமை எண் 550971231.
எம்.ஜி.ஆர். கொடுத்த பணத்தில்
ஒரு பகுதியை ஆயுதக்
கொள்முதலுக்காகச்
செலவிடுவது என்று முடிவு செய்து கே.பி.யைக்
கூப்பிட்டு விஷயத்தைச்
சொன்னார் பிரபாகரன்.
அநேகமாக புலிகள்
இயக்கத்துக்கென கே.பி. செய்த
முதல் அசைன்மெண்ட்
அதுவாகத்தான்
இருக்கவேண்டும்.
குறுகிய காலத்தில் பல
நாடுகளில்
தனக்கு உருவாகியிருந்த
தொடர்புகளை வைத்து ஏராளமான
நவீனரகத் துப்பாக்கிகள்,
தோட்டாக்கள், கண்ணி வெடிகள்,
தகவல் தொடர்புக்
கருவிகளை வாங்கி பத்திரமாகக்
கப்பலேற்றி அனுப்பிவிட்டார்
கே.பி.
சென்னை துறைமுகத்துக்கு
சரக்கு வந்து சேர்ந்தபோது பிரபாகரனுக்கு இன்னொரு சிக்கல்
வந்தது. ஆயுதங்கள்
வந்துவிட்டன. ஆனால்
எப்படி எடுப்பது? முன்னதாக
உமா மகேஸ்வரன்
இதே மாதிரி ஓர் ஆயுதக்
கொள்முதல் செய்திருந்தார்,
அவருடைய ப்ளாட்
இயக்கத்துக்காக. அதுவும்
இதே மாதிரி சென்னை துறைமுகத்துக்கு
வந்தபோது புலனாய்வு அதிகாரிகள்
மோப்பம் பிடித்துவிட்டார்கள்.
கோடிக்கணக்கான பணம். அசுர
முயற்சி. ஒரு தவம்
மாதிரி செய்து வரவழைத்த
ஆயுதங்கள் அனைத்தும்
கைப்பற்றப்பட்டு, காணாமல்
போயின.
உமா இடிந்தே போய்விட்டார்.
பிரபாகரன் யோசித்தார்.
முயற்சி செய்வது பெரிய
விஷயமில்லை. அது சரியான
பலனைத் தரவேண்டும்.
வேண்டியது கொஞ்சம்
புத்திசாலித்தனம்.
உடனே பாலசிங்கத்தைக்
கூப்பிட்டார். அண்ண, நீங்கள்
முதலமைச்சரிடம் விஷயத்தைச்
சொல்லுங்கள். எதையும்
மறைக்கவேண்டாம்.
நமது ஆயுதக் கப்பல்
வந்திருக்கிறது.
சேதாரமில்லாமல் நமக்குச்
சரக்கு கிடைத்தாக வேண்டும்.
அவர்தான் உதவ வேண்டும்.
அவரால் மட்டும்தான் உதவ
முடியும்.
எம்.ஜி.ஆருடனான அடுத்த
சந்திப்பு அப்போது நடந்தது.
இப்போதும் எம்.ஜி.ஆர்.தான்
உதவினார். சற்றும்
சலனமில்லை. பரபரப்பில்லை.
ஒரு ஈ எறும்புக்கும் விஷயம்
தெரியாது.
ஒரே ஒரு போன்கால்.
யாருக்குச் செய்தார்
என்று யாருக்கும் தெரியாது.
ஆயுதங்கள் அனைத்தும்
அலுங்காமல் குலுங்காமல்
திருவான்மியூர்
வீட்டுக்கு வந்து சேர்ந்தன..
(தொடரும்)

posted from Bloggeroid

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் போரட்டம்


--------
என்ன நடக்கிறது இலங்கையில்?
யார் இந்த இளைஞர்கள்?
தமிழகத்தில் என்ன
செய்கிறார்கள்? இந்திய
அரசு ரகசியமாக இவர்களுக்குப்
பயிற்சியளிக்கிறதாமே? பண
உதவி செய்கிறதாமே?
உண்மையா? எப்படிச்
செய்கிறார்கள்? ரா (RAW)
மூலமாகவா? யார்
பொறுப்பு?
எம்.ஜி.ஆருக்கு அப்போது பல
சந்தேகங்கள் இருந்தன. அந்தக்
காலகட்டத்தில் இலங்கைப்
போராளிக் குழுக்கள்
இந்தியாவில்
பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த
விவரம் கூட மாநில அரசுக்கு
சரியாகத் தெரியாது. `ஆமாம்,
பயிற்சி நடக்கிறது’
என்று தெரியவந்தபோது எங்கே,
எந்த இடத்தில் என்கிற
விவரமில்லாமல்தான் வந்தது.
வடக்கே ஏதோ ஓரிடத்தில்
என்று சொல்லப்பட்டது. என்ன
பயிற்சி, யார் அளிக்கிறார்கள்
என்பதெல்லாம் ரகசியமாக
இருந்தது. இந்திய அரசு,
இலங்கைப்
போராளி அமைப்புகளை ஆதரிக்கிறதா என்ன?
பிரதமர்
இந்திராகாந்தி இதுபற்றியெல்லாம்
வாய் திறப்பதே இல்லை. எல்லாம்
ரகசியம். பரம ரகசியம்.
பாண்டிபஜார் சம்பவத்துக்குப்
பிறகுதான் தமிழக மக்கள் பேச
ஆரம்பித்தார்கள். ஆஹா! சொந்தச்
சகோதரர்கள் துன்பத்தில்
சாகிறார்கள் என்று உருக
ஆரம்பித்தார்கள்.
பத்திரிகைகளில் இங்கொன்றும்
அங்கொன்றுமாகக் கட்டுரைகள்
வர ஆரம்பித்தன.
ஒரு தமாஷ். இலங்கையில்
எத்தனை இயக்கங்கள்
செயல்படுகின்றன, யார் யார்
முக்கியஸ்தர்கள் என்பதெல்லாம்
அப்போது இங்கே தெரியாது.
இலங்கைப்
போராளி என்றாலே புலிதான்.
தெரிந்த ஒரே பெயர்.
வெலிக்கடைச் சிறைப்
படுகொலை விவரங்கள்
தெரியவந்தபோது குட்டிமணி,
தங்கதுரை, ஜெகன் போன்ற
பெயர்கள் தெரிந்தன.
பெயர்கள்தான். முகம்
தெரியாது. 1983
ஜூலை மாதம்
அங்கே இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட
்ட மாபெரும்
இனப்படுகொலை வைபவத்துக்குப்
பிறகு இந்த விவரங்கள்
படிப்படியாகப் பரிமாணம் பெறத்
தொடங்கி, இலங்கையில்
என்னவோ விபரீதம்
என்று இங்கே விழித்துக்கொள்ள
ஆரம்பித்தார்கள். அரசியல்
கட்சிகள் கூர்ந்து நோக்கத்
தொடங்கின. என்ன செய்யலாம்,
எப்படி உதவலாம், யாரைத்
தேடிப் பேசலாம்
என்று எல்லோரும் தவிக்கத்
தொடங்கினார்கள்.
எண்பத்தி நாலாம் வருடம் ஏப்ரல்
மாதம் தமிழக முதல்வர்
எம்.ஜி.ஆர். ஓர்
அழைப்பு விடுத்தார்.
வாருங்கள் பேசுவோம்.
எத்தனை பேர் இருக்கிறீர்கள்
தமிழகத்தில்?
ஐந்து போராளி இயக்கங்களா?
சரி, பரவாயில்லை.
அனைவரும் வாருங்கள். நான்
உங்களுக்கு உதவக்
காத்திருக்கிறேன். ஆனால்
ஒன்று.
உங்களிடையே ஒற்றுமை வேண்டும்.
ஒரே நாடு, ஒரே பிரச்னை,
ஒரே மக்கள், ஒரே இனம்.
ஒரே இலக்குக்காகத்தா
னே போராடுகிறீர்கள்? ஏன்
தனித்தனிக் குழுக்கள்?
அனைவரும்
ஒன்று சேர்ந்து போராடினால்
என்ன? சம்மதமென்றால் நான்
உதவுகிறேன். வாருங்கள்,
பேசுவோம். உண்மையில்
அது எம்.ஜி.ஆரின் விருப்பம்
மட்டுமல்ல. கிட்டத்தட்ட தமிழக
மக்கள் அத்தனை பேரின்
விருப்பமாகவும்
அன்றைக்கு அதுதான்
இருந்தது.
உலக அரசியலில் பனிப்போரும்
தமிழக அரசியலில்
வெப்பப்போரும் மிகுந்திருந்த
காலகட்டம் அது. இலங்கைப்
போராளிக்
குழுக்களை எம்.ஜி.ஆர்.
அழைத்துப் பேசவிருக்கிறார்
என்கிற தகவல்
தெரிந்ததுமே அப்போது எதிர்க்கட்சித்
தலைவராக இருந்த கலைஞர்
ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.
எல்லோரும் வாருங்கள். இங்கும்
இளைப்பாறலாம். ஆனால்
ஒரு விஷயம். எம்.ஜி.ஆர்.
சந்திப்புக்கு அழைத்திருக்கும்
தினத்துக்கு ஒருநாள்
முன்னதாக!
பிரபாகரன்
அப்போது திருவான்மியூரில்
தங்கியிருந்தார். ஆண்ரன்
பாலசிங்கம், இராகவன்,
பேபி சுப்பிரமணியம், பண்டிதர்,
சங்கர், ரகு என்று அவருடன்
ஒரு சிறு குழு (இதில்
சங்கரும் ரகுவும்
மெய்க்காப்பாளர்கள்.) அவர்
தங்கியிருந்த
இடத்திலேயே இருந்தது.
சற்றுத்தள்ளி இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வேறு பல
போராளிகள் தங்கியிருந்தார்
கள்.
இது பிரச்னை. பெரிய
பிரச்னை. எம்.ஜி.ஆர்.
சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும்
நிலையில், அதற்கு ஒருநாள்
முன்னதாக கலைஞர்
கூட்டியிருக்கும்
கூட்டத்துக்குப்
போவது மிகுந்த
தர்மசங்கடத்தை விளைவிக்கக்கூடி
யது. போகாமல்
இருப்பது அவமதிப்பது போல்
ஆகிவிடும். என்ன செய்யலாம்?
பிரபாகரன் சிந்தித்தார்.
பிரச்னை, அவர்கள்
அழைப்புக்குச் சம்மதிப்பதா?
இல்லையா? என்பது மட்டுமல்ல.
தமிழகத்தில் அப்போது முகாம்
அமைத்து இயங்கிக்
கொண்டிருந்த ஐந்து பெரும்
போராளி அமைப்புகளின்
தலைவர்களையும்
இரண்டு தலைவர்களும்
அழைத்திருந்தார்கள். என்றால்
கண்டிப்பாக உமாமகேஸ்வரனும்
வருவார். புலிகள்
அமைப்பிலிருந்து பிரிந்த
நாளாக, நாங்கள்தான்
உண்மையான விடுதலைப்
புலிகள் என்று கொஞ்சநாள்
சொல்லிக்கொண்டிருந்தவர்,
பிறகு PLOTE என்னும்
அமைப்பைத்
தொடங்கி அப்போது நடத்திக்கொண்டிர
ுந்தார். அவரும் தமிழகத்தில்
தான் இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃ
ப்.பின் பத்மநாபா, ஈரோஸின்
பாலகுமார், டெலோவின் சிறீ
சபாரத்தினம் அத்தனை பேரும்
தமிழகத்தில்தான் இருந்தார்கள்.
முதல்வர் முன்னிலையில்
அல்லது எதிர்க்கட்சித் தலைவர்
முன்னிலையில் இந்த எதிர்
துருவங்கள் மோதிக்கொள்ளும்ப
டி ஏதாவது அசம்பாவிதம்
ஆகிவிட்டால்?
தமிழகம் மதிக்காது.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
பிறகு ஏறெடுத்துப்
பார்க்கமாட்டார்கள். உன்னதமான
நோக்கத்துடன்
தேசப்பணி புரிபவர்களைப்
பிறகு வெறும்
கிரிமினல்களாகத் தமிழகம்
பார்க்கத் தொடங்கிவிடும்.
எதற்கு இந்த அபாயம்
என்று பிரபாகரன் நினைத்தார்.
ஆனால் தமிழகத்தின்
இரண்டு பெரும் அரசியல்
சக்திகள் அழைத்திருக்கும்
போது, அதனை மதித்து நாம்
போகாமல் இருந்தால் தவறாக
எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும்
இருக்கிறதே?
என்ன ஆனாலும் எம்.ஜி.ஆர்.
ஏற்பாடு செய்த கூட்டத்துக்குப்
போட்டியாக, முதல் நாள்
கலைஞர் ஏற்பாடு செய்திருந்த
கூட்டத்தைத்
தவிர்த்தே தீருவது என்று இறுதியில்
முடிவு செய்தார்கள்.
எம்.ஜி.ஆர். கூட்டத்துக்குப்
போவதா? இல்லையா? என்பதைப்
பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
அதற்கு இருபத்தி நான்கு மணிநேர
அவகாசம் இருக்கிறது.
ஒரு விசித்திரம்.
இதே மாதிரிதான்
அன்றைக்கு உமாமகேஸ்வரனும்
நினைத்திருக்கிறார்!
கலைஞரின் அழைப்பை அவரும்
ஏற்கவில்லை. கூட்டத்துக்குச்
செல்லவில்லை. மற்ற
மூன்று போராளி இயக்கத்
தலைவர்களும் கலைஞரைச்
சென்று சந்தித்த விவரம்
மறுநாள் பேப்பர்களில்
வந்திருந்தன. எம்.ஜி.ஆர்.
கடுப்பானார். உடனே அன்றைய
டி.ஐ.ஜி.
அலெக்சாண்டரை அழைத்து பிரபாகரனை நேரில்
சந்தித்து, தன்னை வந்து பார்க்கச்
சொல்லி அனுப்பினார்.
திருவான்மியூர்
வீட்டுக்கு அலெக்சாண்டர்
வந்தபோது பிரபாகரன்
அங்கே இல்லை. பாலசிங்கம்
இருந்தார். அலெக்சாண்டர்
அவரிடம் விவரம் சொன்னார்.
முதல்வர் கோபமாக
இருக்கிறார். கலைஞரின்
போட்டிக் கூட்டத்துக்குப்
போராளித் தலைவர்கள்
போனது அவருக்குப்
பிடிக்கவில்லை. நீங்கள்
போகவில்லை என்று கேள்விப்பட்டிரு
க்கிறார். உடனடியாக
பிரபாகரனைச் சந்திக்க
விரும்புகிறார்.
இன்று மாலையே.
தர்மசங்கடம்தான். ஆனால்
சமாளித்தாகவேண்டும். நான்
வரவில்லை, நீங்கள் மட்டும்
போய்வந்துவிடுங்கள்
என்று பாலசிங்கத்தை அனுப்பிவைத்தார்
பிரபாகரன்.
பாலசிங்கம், மு.
நித்தியானந்தம், கேணல் சங்கர்
ஆகியோர்
அன்றைக்கு எம்.ஜி.ஆரைச்
சந்திக்க ராமாவரத்துக்குப்
போனார்கள். வரவேற்றார்.
உட்காரச் சொல்லி அன்புடன்
விசாரித்தார்.
`எங்கே பிரபாகரன்’
என்று கேட்டார். `அவர்
ஒரு பயிற்சி முகாமுக்கு அவசரமாகப்
போயிருக்கிறார், அதனால்
வரமுடியவில்லை’
என்று பாலசிங்கம் சொல்லிச்
சமாளித்தார்.
எம்.ஜி.ஆருக்கு ஏமாற்றம்தான்.
ஆனாலும் சமாளித்துக்கொண்
டு பேசினார். என்ன
நடக்கிறது இலங்கையில்?
போராளிக் குழுக்கள்
எத்தனை இயங்குகின்றன?
இந்தியா என்ன
உதவி செய்கிறது?
பயிற்சி அளிக்கிறதா? பண
உதவி செய்கிறதா?
இது தொடர்பான மத்திய அரசின்
நடவடிக்கைகள் எதுவும்
சரிவரத் தெரிவதில்லை.
பாலசிங்கம் அனைத்தையும்
பொறுமையுடன் விளக்கினார்.
இலங்கை அரசின்
இனப்படுகொலைகள்.
`கறுப்பு ஜூலை’யில்
நடைபெற்ற களேபரங்கள்.
போராளி இயக்கங்களுக்கு இந்திய
உளவுத்துறை அளிக்கும்
பயிற்சிகள்.
இருநூறு விடுதலைப்புலிகள
ுக்கு மட்டும் பயிற்சியில்
கலந்துகொள்ள
அனுமதி கிடைத்த விவரம்.
சொற்பமான பண உதவி. இந்திய
அரசு எங்களை மட்டும் ஏன் ஓர
வஞ்சனை செய்ய
நினைக்கிறது என்று புரியவில்லை ஐயா.
ஓஹோ! என்றார் எம்.ஜி.ஆர்.
`உங்களுக்கு நான்
உதவி செய்கிறேன். என்ன
வேண்டும் சொல்லுங்கள்’
என்று கேட்டார்.
ஒரு கணம் பாலசிங்கம்
விழித்தார். அருகிலிருந்த
கேணல் சங்கர் சட்டென்று,
`நாங்கள் தமிழகத்தில்
பயிற்சி முகாம் நடத்த
விரும்புகிறோம். ஆயிரம்
பேருக்காவது பயிற்சியளிக்க
நினைக்கிறோம்.
அதற்கு ஒரு கோடி செலவாகும்.
ஆயிரம் பேருக்குப்
பிறகு ஆயுதங்கள் வாங்க
இன்னும் ஒரு கோடி. உங்களால்
இரண்டு கோடி ரூபாய்
தந்து உதவ முடியுமா?’
எம்.ஜி.ஆர். சிரித்தார்.
நாளைக்கு மாலை வாருங்கள்
என்று மட்டும்
சொல்லி அனுப்பிவைத்தார்.
பெரிய எதிர்பார்ப்பில்
லாமல்தான் மறுநாள்
மாலை பாலசிங்கம்
எம்.ஜி.ஆரைச் சந்திக்க மீண்டும்
வந்தார். வந்ததும் எம்.ஜி.ஆர்.
அவர்களை லிஃப்டில்
ஏற்றி பொத்தானை அழுத்தினார்.
மேல் மாடிக்குப்
போகப்போகிறோம்
என்று நினைத்தவர்களுக்
கு வியப்பு. லிஃப்ட் கீழே,
தரைத்தளத்துக்குக்
கீழே போனது. நின்றதும்
இறங்கி, கதவைத் திறந்தால்
விசாலமான ஓர் அறை.
அறையெங்கும் பெட்டிகள்.
இரண்டு காவலாளிகள்
அங்கே நின்றுகொண்டிருந
்தார்கள்.
எம்.ஜி.ஆர். அவர்களிடம்
இரண்டு விரல்களைக்
காட்டி சைகை செய்தார்.
இரண்டு பெட்டிகள்
வெளியே எடுத்து வரப்பட்டன.
இரண்டு பெட்டிகளில்
இரண்டு கோடி..
(தொடரும்)

posted from Bloggeroid

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் போரட்ட பாதை


------
உடனே சென்னைக்குச்
செல்லவும்..
யாழ்ப்பாணத்திலிருந்து அந்த
ஒரு வரி உத்தரவு லண்டனில்
இருந்த பாலசிங்கத்துக்குச்
சென்றபோது,
அவருக்கு ஒன்றும்
புரியவில்லை. அவர்
பிரபாகரனுக்கு அறிமுகமாகி வெகுகாலம்
ஆகியிருக்கவில்லை.
படித்தவர், யோசிக்கத்
தெரிந்தவர், அரசியல் தெரிந்த
அளவுக்குத் தத்துவம் அறிந்தவர்,
மார்க்ஸியம் புரிந்த
அளவுக்கு மனித மன
ஆழங்களையும்
புரிந்துகொள்ளக்கூடியவர்,
இயக்கத்துக்கு சித்தாந்த
ரீதியில்
ஒரு வலுவான
அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுக்
க வல்லவர், அதே சமயம் அரசியல்
ரீதியில் இயக்கம்
முன்னெடுக்கக்கூடிய
நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த
வல்லவர் என்று பிரபாகரன்
அவரைப் பற்றி மதிப்பிட்டிருந்
தார்.
மதிப்பீடுகளில் தவறேதும்
இல்லை. ஆனால்,
பாலசிங்கத்திடம் பிரபாகரன்
தீர்க்கச் சொல்லி அளித்த முதல்
பிரச்னை ஒரு காதல்
விவகாரமாக அமைய
நேர்ந்ததுதான் விசித்திரம்.
தன் மனைவி அடேலுடன்
பாலசிங்கம்
சென்னை வந்து சேர்ந்ததும்
பிரச்னையின் முழுப்பரிமாணம்
அவருக்குப் புரியவைக்கப்பட்
டது.
`என்னால் நம்ப முடியவில்லை.
இயக்கமே பிளவுபடும்
அளவுக்கா இது முற்றிவிட்டது?’
என்றார் பாலசிங்கம்.
சந்தேகமில்லாமல். ஏனென்றால்,
அந்தக் காதல் வலையில்
சிக்கியிருந்த உமாமகேஸ்வரன்,
புலிகள் அமைப்பின் மத்தியக்
குழு சேர்மன்! சர்வ
வல்லமை படைத்த பதவி. தேச
விடுதலை என்னும் மிக உயர்ந்த
நோக்கத்துடன் போராடத்
தொடங்கியிருந்த வீரர்கள்
அத்தனை பேரையும் நேரடிக்
கட்டுப்பாட்டுக்குள்
வைத்துக்கொண்டிருந்தவர்
அவர்.
பிரபாகரனுக்கு அடுத்தபடி அவர்தான்
எல்லாம். இயக்கத்தின்
செயல்பாடுகளைப்
பரவலாக்குவது,
வெளிநாடுகளில்
ஆதரவு திரட்டுவது என்று அடுத்தடுத்த
ஏராளமான பொறுப்புகள்
அவரிடம் விடப்பட்டிருந்தன.
வெளிநாட்டுத் தொடர்புகள்
அனைத்தையும்
உமா மகேஸ்வரனே வைத்திருந்தார்.
அதுதான் பிரச்னையாகிப்
போனது. அத்தனை சுலபத்தில்
எந்த நடவடிக்கையும் எடுக்க
முடியாதபடிக்குத்
தடுத்து நிறுத்தியது.
`உமா, ஏன் இப்படி? நீங்களும்
ஊர்மிளாவும் ஒருவரை ஒருவர்
விரும்புகிறீர்கள் என்றால்,
அதனை வெளிப்படையாகத்
தெரிவித்துவிடலாமே?
திருமணம் தவறல்ல.
முறை தவறிய உறவுதான்
பிரச்னை.
தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்
கள்.
ஏதாவது ஒரு முடிவுக்கு நீங்கள்
வந்தே ஆகவேண்டும். ஒன்று,
ஊர்மிளாவைத் திருமணம்
செய்துகொள்ளுங்கள்.
அல்லது மத்தியக் குழுத்
தலைமைப் பொறுப்பிலிருந்த
ு நீங்களாக விலகிவிடுங்கள்’
என்றார் பாலசிங்கம்.
உமாமகேஸ்வரனும்
ஊர்மிளாவும்
பாலுறவு கொண்ட
காட்சியை நேரில் சிலர்
பார்த்திருந்தார்கள். அவர்கள்தாம்
தலைமைக்குத் தகவல்
கொடுத்தவர்கள். முன் விரோதம்
கொண்ட யாரோ ஒருவர்
என்றெல்லாம் எளிதில்
தள்ளிவிட முடியாதது அது.
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள்
பார்த்திருக்கிறார்கள்.
நம்பகமானவர்கள். இயக்கத்தின்
விசுவாசம் மிக்க போராளிகள்.
இல்லவே இல்லை என்றார்
உமா மகேஸ்வரன். ஆமாம்,
இல்லவே இல்லை என்றார்
ஊர்மிளா.
சரி, முறை தவறிய
உறவு இல்லை என்றே வைத்துக்
கொண் டாலும் காதல்
உண்டல்லவா? திருமணம்
செய்துகொள்வதில் என்ன
பிரச்னை என்று பாலசிங்கம்
கேட்டார்.
உமா பேசாதி ருந்தார். காரணம்
இருந்தது.
தெல்லிப்பளை கணபதி பிள்ளை என்பவரது மகளை உமா மகேஸ்வரன்
தனது கல்லூரிக் காலம்
முதலே காதலித்து வந்தார்.
(பிறகு அவரைத்தான்
திருமணமும்
செய்து கொண்டார்.
ஊர்மிளா மஞ்சள்
காமாலை வந்து இறந்தார்.)
இப்போது ஊர்மிளாவைத்
திருமணம் செய்து கொண்டால்
அந்தக் காதல் என்னாகும்?
சென்னை தண்டையார்
பேட்டையில் தங்கியிருந்தபடி
க்கு, அமைப்பு சார்பில்
கடிதங்கள் எழுதுவது,
ஆவணங்கள் தயாரிப்பது போன்ற
பணி களில் ஈடுபட்டிருந்த
உமாமகேஸ்
வரனுக்கு உதவி செய்யத்தான்
ஊர்மிளாவும்
சென்னை வந்திருந்தார்.
இருவருக்கும் ஆங்கிலம்
நன்றாகத் தெரியும் என்பதால்,
எழுத்து சார்ந்த பணிகள்
அனைத்தும் அவர்கள் வசம்
விடப்பட்டிருந்தன.
வெகு விரைவில் இயக்கத்தைப்
பரவலாக்க பிரிட்டனுக்குச்
சுற்றுப்பயணம்
மேற்கொள்ளவும் உமா தயாராக
இருந்தார்.
அப்போதுதான் இந்தப்
பிரச்னை வெடித்தது.
பிரபாகரன்
கண்மூடி யோசித்தார்.
வேறு வழியில்லை.
உயிர்த்தோழனானாலும்
இனி உனக்கு இயக்கத்தில்
இடமில்லை என்று சொன்னார்.
உமாமகேஸ்வரனும்
ஊர்மிளாவும் புறப்பட்டுப்
போனார்கள். மனத்துக் குள்
வன்மம் வளரத் தொடங்
கியிருந்தது. ஏதாவது செய்ய
வேண்டும்,
ஏதாவது செய்யவேண்டும் என்ற
வேகம் மேலோங்கி நின்றது.
அவருக்கு இயக்கத்தில்
கணிசமான ஆதரவாளர்கள்
இருந்தார்கள். பிரபாகரன் யார்
நம்மை வெளியேற்றுவதற்கு?
நாம்
அவரை வெளியேற்றுவோம்.
நாம் தான் நிஜமான
விடுதலைப்புலிகள்.
அறிவித்துவிடுங்கள்
என்று ஏகமனதாகச் சொன்னார்கள்.
இயக்கம் இரண்டு பட்டு நின்ற
காலம் (1981) அது. அரசியல்
தளத்திலும் பரபரவென்று பல
மாறுதல்கள்
நடந்து கொண்டிருந்தன.
`டெலோ’வை நிறுவி,
வளர்த்துக்கொண்டிருந்த
குட்டிமணியும்,
தங்கத்துரையும்
கைதாகி சிறையில் இருந்த
நிலையில், சிறீ சபாரத்தினம்
டெலோவின் தாற்காலிகத்
தலைவராகச் செயல்பட்டுக்
கொண்டிருந்தார்.
பிரபாகரனுக்கு மிக இளம்
வயதிலிருந்தே குட்டி மணியையும்
தங்கதுரையையும் தெரியும்.
அப்பழுக்கில்லாத நேசமும்
நட்பும் கொண்டவர்கள் அவர்கள்.
ஆட்சியாளர்களின்
அடக்குமுறைகளும் அட்ட
காசங்களும் நாளுக்குநாள்
அதிகரித்துக்கொண்டிருந்த
நிலையில், டெலோவும்
விடுதலைப்புலிகள்
அமைப்பும்
இணைந்து பணியாற்றினால்
இன்னும் சிறப்பாகச் செயல்பட
முடியும் என்று இரு தரப்புத்
தலைவர்களுமே நினைத்தார்கள்.
நட்பு அடிப்படையில்
இரு இயக்கங்களும்
இணைந்து பணியாற்ற
முடிவு செய்தது அன்றைய
சூழலில் சாத்தியமாகவும்
இருந்தது.
ஆனால், அதையே காரண மாகச்
சுட்டிக்காட்டி, விடுதலைப்
புலிகள் என்னும்
அமைப்பு தன்னுடையதுதான்
என்று உமா மகேஸ்வரன்
பிரசாரம் செய்யத்
தொடங்கிவிடும் அபாயம்
பலமாக இருந்தது.
டெலோவுடன்
இணைந்து வேலை செய்வது பிரபாகரன்
தான்; விடுதலைப்புலிகள்
அல்ல என்று சொல்லிவிடலாம்
அல்லவா?
ஒன்று, உமாமகேஸ்வரன்
விவகாரம் தீரவேண்டும்.
அல்லது அவர் இயக்கத்
திலிருந்து முற்றிலுமாக
வெளி யேற வேண்டும்.
இரண்டு மில்லாமல்
டெலோவுடன்
கூட்டணி வைப்பது மிகப்பெரிய
பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்
என்று பிரபாகரன் நினைத்தார்.
சிறீ சபாரத்தினத்தைச் சந்தித்துப்
பேசினார். அவருக்கும்
புரியாமல் இல்லை. ஆனால்
தனி நபர் ஒருவருடைய
பிரச்னை யினால்
ஒரு போராட்டத்தின் வேகம்
மட்டுப்படுகிறதே என்கிற
கவலையும் கோபமும்
அவருக்கு இருந்தது.
பிரபாகரனுக்கு இல்லாத
கோபமா?
அந்தக் கோபம்தான்
பாண்டி பஜாரில் வெடித்தது.
கண்ணன் என்கிற நண்பருடன் டிபன்
சாப்பிட வந்திருந்த
உமா மகேஸ்வரனை பிரபாகரன்
தற்செயலாகக் கண்டார்.
மோட்டார் சைக்கிளில்
வந்திருந்தார். உடன், இராகவன்.
(புலிகள் இயக்கத்தில் தொடக்க
காலத்தில் மிக முக்கியமான
உறுப்பினராக இருந்தவர்.
பிறகு அபிப்பிராய
விரோதங்கள் காரணமாக
வெளியேற்றப்பட்டு, இயக்கங்கள்,
அரசியல் அனைத்திலிருந்தும்
ஒதுங்கி, கனடாவில்
வசித்து வருகிறார்.)
`உமா, பிரபா!’ என்று முதலில்
பார்த்து எச்சரித்தது கண்ணன்
தான்.
சட்டென்று உமாமகேஸ்வரன் தன்
பிஸ்டலில் கைவைக்க, அதற்குள்
பிரபாகரன் முந்திக் கொண்டார்.
காலில் குண்டடி பட்டு கண்ணன்
விழ, உமா மகேஸ்வரன் உயிர்
பிழைக்கத் தப்பியோட
ஆரம்பித்தார். துரத்திய
பிரபாகரனையும்
இராகவனையும் பாண்டி பஜார்
போலீஸ்காரர்கள்
கைது செய்தார்கள். உமாவும்
பிறகு பிடிபட்டார். பெயரென்ன
என்று இன்ஸ்பெக்டர்
கேட்டபோது உமா மகேஸ்வரன்,
முகுந்தன் என்று சொன்னார்.
பிரபாகரன், கரிகாலன்
என்று சொன்னார்.
அங்கே, நிமிர்ந்து உட்கார்ந்தார்
ஜெயவர்த்தனே.
இங்கே குலுங்கிச் சிரித்தார்
எம்.ஜி.ஆர்.

posted from Bloggeroid

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் போரட்ட பாதை


---------
சரியான இருட்டுக் காடு.
யாரும் அத்தனை சுலபத்தில்
பொடிநடை யாக
உள்ளே வந்துவிட முடியாத
அளவுக்கு அடர்த்தியும்
அபாயங்களும் நிறைந்த காடு.
அபாயத்தில் பெரிய அபாயம்,
கால் வைக்கும் இடங்கள்.
அடடே காய்ந்து கிடக்கிறதே என்று அடியெடுத்து வைத்தால்
அப்படியே உள்ளே போய்விட
வேண்டியதுதான்.
புரையோடிய சதுப்பு நிலம்.
மேலே தரை போலவும்,
கீழே பல அடி ஆழத்துக்குச்
சேறுமாகப் பல இடங்களில்
இருக்கும். சுற்றிலும் கனத்த
மரங்கள், முட்புதர்கள்,
என்னவென்று
பெயர் தெரியாத காட்டுச்
செடிகள். பகலில் கூடப் பல
இடங்களில்
இருட்டாகவே இருக்குமளவுக்கு
அப்படியொரு அடர்த்தி.
கஷ்டப்பட்டு அந்தப் பிரதேசத்தைக்
கடந்துவிட்டால் சுமார்
ஐம்பது ஏக்கர் பரப்பளவில் நல்ல
தரை உண்டு. அருமையான
விவசாய நிலம். பயிர்
செய்யலாம்.
குடிசை போட்டு சுகமாக
வாழலாம். மனித
வாசனையே கிடையாது.
யானை வாசனை மட்டும்தான்.
`பிரமாதம், இங்கேயே நாம்
கூடாரம் அமைக்கலாம்’
என்று பிரபாகரன் சொன்னார்.
அது புகழ்பெற்ற
வவுனியா கானகத்தின்
ஒரு பகுதி. எந்தப்
பக்கத்து மெயின்
ரோடிலிருந்து வந்தாலும்
ஏழு கிலோ மீட்டர்
தூரத்துக்கு நடந்தாக
வேண்டும். அதிர்ஷ்டம்
இருந்தால் உயிருடன் அந்த
ஐம்பது ஏக்கர்
நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்துவிடலாம்
. `பூந்தோட்டம்’ என்று பெயர்.
பிரபாகரன் தான் வைத்தார்.
தோழர்கள்
பரபரவென்று நிலத்தைச்
சீராக்கி விவசாயம் செய்ய
ஆரம்பித்தார்கள்.
தக்காளி விதைக்கலாமா?
வெண்டைக்காய்? கத்திரி கூட
நன்றாக விளையும்.
ஆளுக்கொன்று ஆசைப்பட்டார்கள்
. கொஞ்சம் அரிசி கூட
முயற்சி செய்து பார்க்கலாமே?
சத்தியமாகத் தங்களைத்
தேடிக்கொண்டு காவல்
துறையினர் வந்துவிட
முடியாத இடம்
என்பது உறுதியான
சந்தோஷத்தில் அவர்கள்
உற்சாகமாக விவசாயம்
செய்தார்கள். உத்வேகத்துடன்
துப்பாக்கி சுடப் பழகினார்கள்.
மணிக்கணக்கில் ஓடவும் எகிறிக்
குதிக்கவும்
சரேலென்று பதுங்கவும்
பாயவும் ஓடியபடி சுடவும்
சுட்டுவிட்டுத் தப்பிக்கவும்
அக்கறையுடன்
பயிற்சியெடுத்தார்கள்.
யானைகள் நிறைந்த அந்தக்
கானகத்தின் நடுவே சுமார்
இருபது புலிகள்
பிறந்து வளர்கின்றன
என்று சொன்னால்கூட
அப்போது யாரும் நம்பியிருக்க
மாட்டார்கள். யாழ்ப்பாணம்
முழுதும் இளைஞர்கள்
பல்வேறு குழுக்களாகவும்
உதிரிகளாகவும் ஆயுதப்
புரட்சி குறித்து கனவு கண்டுகொண்டிருந்
த சமயத்தில் முறையான
பயிற்சி, அதன்பிறகு செயல்
என்று தீர்மானமாகக்
களமிறங்கிய முதல் நபர்
பிரபாகரன்.
`நண்பர்களே, ஒரு விஷயம். ஓர்
இயக்கம் ஒழுங்காக வளர்வதும்
வாழ்வதும் சாதிப்பதும்
அத்தனை எளிதான செயலல்ல.
நம்மிடையே மிகச் சிறந்த
கட்டுப்பாடுகள்
இருந்தாலொழிய
நமது போராட்டம் வெல்லாது.
உங்களில் எத்தனை பேர் வீடு,
குடும்பம், காதல், திருமணம்
போன்ற
சிந்தனைகளை முற்றுமுழுதாகத்
துறக்கத் தயாராக
இருக்கிறீர்கள்?’
பிரபாகரன் கேட்டார்.
அத்தனை பேரும்
கைதூக்கினார்கள்.
`சரி. நம்மில் யாரும்
புகை பிடிக்கக்கூடாது.
மது அருந்தக்கூடாது. எந்த
விதமான
லாகிரி வஸ்துக்களுக்கும்
இயக்கத்தில் இடமில்லை.
இது கட்டாயம்.
யாராவது விதி மீறினால்
உடனே வெளியேற்றப்படுவீர்கள்.
முற்று முழுதான
விழிப்புணர்வுடன்
அத்தனை பேரும்
இருந்தாகவேண்டும். சம்மதமா?’
`சரி’ என்றார்கள்.
`இயக்கத்தில் யாரும் வீட்டுக்குப்
போகக்கூடாது. வீட்டாருடன்
ரகசியமாகக் கூடத்
தொடர்பு வைத்துக்கொள்ளக்
கூடாது. அப்பா, அம்மா,
அண்ணன், தம்பி,
அக்கா எல்லோரும்
முக்கியம்தான். லட்சியம்
அனைத்தைக் காட்டிலும்
முக்கியம். நாம் அவர்களைத்
தொடர்பு கொள்வதன் மூலம்
அவர்களுக்கும்
அது பிரச்னையாகிப் போகும்.
புரிகிறதா?’
முன்பொரு நாள்
அதிகாலை ஐந்து மணி சுமாருக்கு வல்வெட்டித்துறை
யில் பிரபாகரன்
வீட்டுக்கு போலீஸ்
வந்து கதவு தட்டியதே?
அப்போது எழுந்து வெளியே போனதுடன்
சரி. இன்றுவரை அவர் தன்
வீட்டுப்பக்கம்
சென்று பார்த்ததில்லை. அந்த
மன உறுதியைத்தான் அவர்
தமது தோழர்களிடம்
அன்றைக்கு வாக்குறுதியாகக்
கேட்டார்.
`எந்தக்
காரணத்தாலாவது இயக்கத்திலிருந்
து யாராவது வெளியேற
நேர்ந்தால் அவர்கள்
வேறொரு இயக்கத்தில் போய்ச்
சேரவோ, புதிய இயக்கம்
தொடங்கவோ கூடாது.
புலிகள் அமைப்புக்குள்
நிகழும் எந்த ஒரு விஷயமும்
வெளியே குறிப்பாக
எதிரிகளுக்குத்
தெரியக்கூடாது. நாம்
நட்புணர்வுடன் இருப்போம்.
ஆனால் ஒழுக்கமும்
கட்டுப்பாடும் மிக முக்கியம்.
எந்த விதியையும் யாரும்
மீறுவதற்கில்லை.
மீறுவது என்று யார்
முடிவு செய்தாலும்
அது இயக்கத்துக்கு துரோகம்
செய்வதாகும். சம்மதமா?’
அவர் கவலைப்பட்டதில் நியாயம்
இல்லாமல் இல்லை.
யாழ்ப்பாணத்தில்
அன்றைக்கு இம்மாதிரி புரட்சிகரக்
கனவுடன் களமிறங்கிய பல
இளைஞர் குழுக்கள்
வெகு சீக்கிரத்தில் காணாமல்
போய்க்கொண்டிருந்தன.
மாணவர் பேரவை இருந்தது,
சிதைந்து விட்டது.
பிறகு இளைஞர்
பேரவை வந்தது. அதுவும்
சிதறிவிட்டது. டி.எல்.ஓ.
என்று ஒரு குழு தொடங்கப்பட்டது.
ஒரே ஒரு வங்கிக்கொள்ளையு
டன் காணாமல் போய்விட்டது.
பெயர் வெளியே தெரியும்
முன்பே இயக்கம் சிதைந்த
கதைகள் அநேகம்.
அம்மாதிரியான அனர்த்தங்கள்
ஏதும் விடுதலைப் புலிகள்
இயக்கத்துக்குள்
அறவே கூடாது என்று அவர்
நினைத்தார். அதனால்தான்
யாரும் எண்ணிப்
பார்க்கமுடியாத கடும்
நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டன.
இயக்கத்தின் உறுப்பினர்களுக்
குப் பிரபாகரன் அளித்த
போர்ப்பயிற்சி களுக்குக் கூட
முன்மாதிரிகள் கிடையாது.
கெரில்லாப் போர் முறைதான்.
திடீரென்று தோன்றித்
தாக்கிவிட்டுக் காணாமல்
போய்விடும் முறை. உலகின்
பல பாகங்களில் பல இயக்கங்கள்
கடைப்பிடிக்கும் வழக்கம்தான்.
ஆனாலும் யார் எப்படிச்
செய்கிறார்கள், எப்படித்
தாக்குகிறார்கள், எப்படித்
தப்புகிறார்கள் என்றெல்லாம்
பிரபாகரன் ஆராயவில்லை.
விசாரிக்கவில்லை.
தெரிந்துகொள்ள ஆர்வம்
காட்டவும் இல்லை.
இதோ பாருங்கள். இது நம் மண்.
நமது பிரச்னை.
நமது எதிரிக்கு எது சரி என்று நாம்தான்
தீர்மானிக்க வேண்டும்.
இன்னொரு இடத்தில்
கையாளப்படும்
போர்க்கலை உத்திகள்
இங்கே எடுபடும்
என்று சொல்வதற்கில்லை.
தெற்கே ஜனதா விமுக்தி பெரமுனா ஒரு புரட்சி செய்தார்களே,
என்ன ஆயிற்று பார்த்தீர்கள்
அல்லவா? அதுவும் ஆயுதப்
புரட்சிதான்.
அரசுக்கு எதிரான
புரட்சிதான். சீனப் புரட்சி,
ரஷ்யப் புரட்சி முன்
மாதிரிகளை வைத்துக்கொண்டு வியூகம்
வகுத்தார்கள். என்ன ஆனது?
பதினைந்தாயிரம்
பேரை பலி கொண்டது தவிர
வேறென்ன லாபம்?
வேண்டாம். யாரையும்
பார்க்காதீர்கள்.
நமக்கு முன்மாதிரிகளைத்
தேடிக்கொண்டிருக்க
வேண்டாம். நமக்கு நாம்தான்
ஆசிரியர்கள்.
நமது பாதையை நாம்
தீர்மானிப்போம். இந்தக்
காட்டுக்குள்
இப்படியொரு வசதியான
பயிற்சியிடத்தை நமக்கு நாமே கண்டெடுக்கவில்ல
ை? அதே மாதிரி, நமக்கேற்ற
போர்ப்பயிற்சிகள
ை நாமே உருவாக்கிக்கொள்
வோம்.
அப்படித்தான் அவர் ஆரம்பித்தார்.
தமிழர்களை புழு பூச்சி அளவுக்குக்
கூட மதிக்காத இலங்கை அரசின்
புதிய அரசியல் அமைப்புச்
சட்டம் 1978 செப்டம்பர் 7-ம்
தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜெயவர்த்தனே அரசுக்கு எந்த
வகையில் சவால் விடுக்கலாம்
என்று அரசியல் கட்சியினர்,
போராளி இளைஞர்கள்
எல்லோரும் ஆளுக்கொரு பக்கம்
உட்கார்ந்து பேசிக்கொண்டிருந
்தார்கள்.
பிரபாகரன் அதற்குள்
காரியத்தைச்
செய்தே முடித்துவிட்டார். ஏர்
லங்காவுக்குச் சொந்தமான
ஒரு ஆவ்ரோ விமானம்.
பயணிகள் இறங்கும்
வரை பொறுத்திருந்துவ
ிட்டு வெடிக்கும் விதத்தில்
ஏற்பாடு செய்து தேசத்தையே திரும்பிப்
பார்க்கச் செய்தார்.
இது பேசும் இயக்கமல்ல;
செய்யும் இயக்கம்
என்று அத்தனை பேருக்கும்
புரிந்தது அப்போதுதான்.
எல்லாம் சரியாக இருந்தது.
எல்லோரும்
சரியாகவே இருந்தார்கள்.
சற்றும் எதிர்பாராத
விதத்தில்தான் அந்தப்
பிரச்னை வந்தது.
பிரச்னை என்பது பூத
மாகத்தான் வரவேண்டுமா என்ன?
ஒரு காதலாக அது வந்தது.
(தொடரும்)

posted from Bloggeroid