Thursday, 5 June 2014

திருமணத்தில் கூறும் மந்திர விளக்கம்

''சோமஹ ப்ரதமோவிவேத
கந்தர்வவிவிதே
உத்ரஹத்ருதியோ
அக்னிஸடேபதிஸ
துரியஸதேமனுஷ்ய ஜாஹ''''
இந்த மந்திரம்
மணமகளை நோக்கி
சொல்லப்படுகிறது. நீ
முதலில்
சொமனுக்கு உரியவளாக
இருந்தாய், பின்பு கந்தர்வன்
உன்னை அடைந்தான்,
பின்பு அக்கினி உன்னை
அடைந்தான்.
இப்பொழுது நான்காவதாக
ஒரு மானிடனை
அடைகிறாய். இதுதான் இந்த
மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள்
ஏற்கனவே மூன்று பேருக்கு
மனைவியாக இருந்தவளாம்.
இப்பொழுது நான்காவதாக
ஒருவனுக்கு மனைவியாகப்
போகிறார்களாம். அத்துடன்
அவள் எந்தக் காலத்தில்
யாருக்கு மனைவியாக
இருந்தால் என்று ஆபாசமான
விளக்கங்கள் (ரோமம் வளரும்
போது கந்தர்வனுக்கு....)
வேறு இருக்கிறது.
இதை பார்ப்பனர்கள் ஒத்துக்
கொள்கிறார்கள். இது அவர்கள்
தந்த விளக்கம்தான். ஆனால்
சில பார்ப்பனர்கள் மட்டும்
"அவள் மகளாக இருந்தாள்"
என்று விளக்கம்
சொல்லி தப்பிக்க
முனைவார்கள்
இது இருக்கட்டும்.
வேறு மந்திரங்களை
பார்ப்போம். (18
வயதுக்கு உட்பட்டவர்கள்
இதை படிக்க வேண்டாம்)
"தாம்பூஷன் சிவதாமம்
ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்
மனுஷ்யா பவந்த்தீயான
ஊரு உஷதி
விஸ்ரயாதையஸ்யா
முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்...
"
இதனுடைய அர்த்தம்: நான்
அவளோடு உறவு கொள்ளும்
பொழுது எமது பாகங்கள்
பொருந்துவதற்கு
தேவதைகளை நீங்கள் உதவ
வேண்டும்.
இன்னும் ஒரு மந்திரம்:
"விஷ்ணுர்
யோனி கர்ப்பயதுதொஷ்டா
ரூபாணி
பீசமிதுஆசிஞ்சாது
ப்ரஜபதிதாதா கர்ப்பந்தாது..."
இதனுடைய அர்த்தம்,
பெண்ணினுடைய அந்தரங்க
பகுதி மூன்று பாகங்களாக
பிரிக்கப்பட்டிருக்கிறது.
மூன்று பாகங்களிலும்
மூன்று தெய்வங்கள்
இருந்து காவல்
காக்கிறார்கள்.
(தெய்வங்களுக்கு வேறு
வேலையே இல்லையா? )
உறவின் பொழுது எல்லாம்
சரியாக நடக்கிறதா என்று
கண்காணிக்கின்ற
வேலையையும் இவர்கள்
செய்கிறார்கள்.
திருமணத்தின்
போது சொல்லப்படுகின்ற
அரசன் மனைவி மட்டுமல்ல,
எல்லாப் பெண்டிரையும்
பூப்புக் காலத்தில்
பஞ்சபூதங்கள்
அனுபவித்து விடுகின்றன
என்று வேதம் சொல்கிறது.
அப்படி பார்த்தால் ராணியும்
(எந்தப் பெண்ணுமே)
பத்தினி இல்லைதான்.”
பெண்கள் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
வேதத்தின்படி அவர்கள்
பத்தினிகள்
இல்லையென்பதால்
வேதத்தை நம்புகிறவர்கள்
மத்தியில் “பத்தினி”ச்
சண்டை ஏற்படுவதில்லை.
இந்து மதத்திற்கு வேத மதம்
என்றும் ஒரு பெயர் உண்டு.
ஆகவே வேத மதத்தைச் சேர்ந்த
பெண்களை அவர்களின்
பூப்புக்காலத்தில் பஞ்ச
பூதங்கள்
அனுபவித்துவிட்டு
போய்விடுகின்றன .
அவர்களும் அப்போதே தங்கள்
பத்தினித் தன்மையை இழந்து
விடுகிறார்களாம். இதுதான்
வேதம் கூறுவதாம்.
சமஸ்கிருதத்தில் ஓதப்பட்ட

posted from Bloggeroid

கரிபியி நாடுகளில் தமிழர்


கரீபியன் பகுதி அமெரிக்கக்
குடியரசு, இலத்தின்
அமெரிக்க நாடுகளின்
அருகில் இருக்கிறது.
இப்பகுதியில் டிரினிடாட்,
டொபாகோ கயானா,
சூரிநாம், ஜமைக்கா,
கிரெனடா, குவாடிலோப்,
மார்தினீக்,
அங்குயிலா போன்ற நாடுகள்
இருக்கின்றன.
வெளிசூலா கடற்கரை
அருகிலேயே டிரினிடாட்,
டொபாகோ முதலிய
இரண்டு தீவுகள் இருக்கின்றன.
இவை தென் அமெரிக்கத்
தலைநிலப்பரப்புப் பகுதியில்
இருக்கின்றன. கயானாவின்
மேற்கே வெனிசூலாவும்,
கிழக்கே சூரிநாமும்,
தெற்கே பிரேசில் நாடும்
இருக்கின்றன.
டச்சு கயானா என்று
அழைக்கப்படும் சூரிநாம்,
பிரேசில், கயானா அருகில்
இருக்கிறது. கரீபியன்
பகுதியில் பரப்பளவில்
மூன்றாவது இடத்தை
ஜமைக்கா பிடித்திருக்கிறது
. ஜமைக்கா,
கியூபா நாட்டின் அருகில்
இருக்கிறது.
தமிழர் குடியேறிய
வரலாறு :
கரீபிய நாடுகளில்
தமிழர்களுக்கு முன்பாக
தோட்டங்களில்
ஆப்ரிக்கர்களே வேலை
செய்து வந்தனர். 1834-ஆம்
ஆண்டு ஆகஸ்ட் முதல்
ஆப்ரிக்கர்களின்
அடிமைவாழ்வு முடிந்து
தோட்டங்களைவிட்டு
வெளியேறியவுடன்,
வேலை செய்வதற்கு
தொழிலாளர்கள்
தேவைப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து பிரஞ்சு
குடியேற்றங்களுக்கு
நிறையபேர்
அனுப்பப்படுவதை
கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள்
தாமும், இந்தியாவிலிருந்
தொழிலாளர்களை இறக்குமதி
செய்தனர். இதன் விளைவாக
1938-ஆம் ஆண்டு இந்தியக்
கூலிகள் கயானாவுக்கு
அழைத்துவரப்பட்டனர்.
பிறகு 1845-ஆம்
ஆண்டு டிரினிடாட்
டுபாக்கோவிலும், 1873-ஆம்
ஆண்டு சூரிநாம்,
ஜமைக்கா நாடுகளுக்கும்
இந்தியக் கூலிகள்
கொண்டு வரப்பட்டனர்.
இவ்வாறு வந்திறங்கிய
இந்தியக் கூலிகள் சிலர்
இத்தீவுகளிலிருந்து
கிரானடா நாட்டிற்கும்
சென்றனர்.
கயானாவிலிருந்து இரண்டு
பெரிய தோட்ட
முதலாளியான ஜான்
கிளாட்ஸ்டோன்,
கிளினெல்பிரபு என்பவரின்
துணையோடு
இந்தியாவிலிருந்து ஒப்பந்தக்
கூலிகளைக் கொண்டுவரத்
தொடங்கினார். இதன் பயனால்
156 ஒப்பந்தக் கூலிகள்
இந்தியாவிலிருந்து கிளம்பி
ஹெஸ்பரஸ் என்னும் கப்பலில்
1838-ஆம் ஆண்டு கயானாவில்
வந்து இறங்கிய கூலிகள்
மொத்தம் 156 பேர்.
அதே மாதத்தில்
விட்பை என்னும் கப்பலும் 263
கூலிகளைக்
கொண்டு வந்து இறக்கியது.
முதற் கப்பல் கொண்டு வந்த
கூலிகளைக் தோட்ட
முதலாளியான
கிளாட்ஸ்டோன்
டெமராரா நதிக் கரையில்
உள்ள வி.எம்.வூப், வீடஸ்டீன்
என்ற தோட்டங்களுக்கும்
எசிக்யூபோ நதிக்கரையில்
உள்ள அன்னாரி ஜ"னாவிற்கும்
அனுப்பி வைத்தார்.
விட்பை ஏற்றி வந்த
கூலிகளை டெமராராவில்
உள்ள பெலிவ்யூ என்னும்
தோட்டத்திற்கும்,
எசிக்யூபோ நதிக்கரையில்
உள்ள ஹைபரி,
வாடர்லூ என்னும்
தோட்டங்களுக்கும்
அனுப்பி வைத்தார்.
இவ்வாறு 1838-ஆம் ஆண்டில்
தொடங்கிய இந்தியக்
கூலிகளின்
கயானா வருகை 1917-ஆம்
ஆண்டோடு முடிவடைந்தது.
இந்த என்பது ஆண்டுகளில்
இந்தியாவிலிருந்து வந்த
கூலிகள் பலர் மேற்கிந்தியத்
தீவுகளான டிரினிடாட்,
ஜமைக்கா, செயிண்ட்
லூசியா, குவாடிலோப்,
மார்த்தினிக்கிற்கும்,
கயானாவின் கிழக்கில் உள்ள
சூரிநாமிற்கும்
அனுப்பப்பட்டனர். 1838-ஆம்
ஆண்டு தொடங்கி 1917-ஆம்
ஆண்டு வரை கயானாவிற்கு
மட்டும் வந்த இந்தியர்களின்
தொகை 2,38,979 ஆகும்.
டிரினிடாட் :
டிரினிடாட்டிற்கு முதன்
முதலாக 1845-இல் இந்தியர்கள்
வந்து குடியேறினார்கள்.
பேட்டல் ரோசாக் எனும்
கப்பலில் 1845-ஆம்
ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள்
போர்ட் ஆப் ஸ்பைன்
துறைமுகத்தில்
முதலாவது வந்த 225
இந்தியர்கள் இறங்கினார்கள்.
இந்தியர்கள் முதல் முதலாக
டிரினிடாட்டிற்கு வந்த
தினம் முதல் முறையாக 1978-
இல் கொண்டாடப்பட்டது.

ஜமைக்கா :


1845-ஆம் ஆண்டு மே திங்கள் 9-
ஆம் நாள் 200 இந்திய ஆண்கள், 28
இந்திய பெண்கள், 16
சிறுவர்கள் செயிண்ட்
கேதரைனிலுள்ள பழைய
துறைமுகத்தில் முதன்
முதலாக வந்திறங்கினார்கள்.
அடுத்த
நான்கு ஆண்டுகளுக்குள்
4,550 இந்தியர்கள்
ஜமைக்காவில்
வந்து குடியேறினார்கள்.
1845-1917 ஆம்
ஆண்டுகளுக்கிடையே 36,412
இந்தியர்கள்
ஜமைக்காவிற்கு வந்து
குடியேறினார்கள்.
சூரிநாம் :
தென் அமெரிக்கத்
தலை நிலப்பரப்பிலிருக்கும்
சூரிநாம் மட்டும்
டச்சுக்குடியேற்றப்
பகுதியாக இருந்தது.
1853-1939 ஆம்
ஆண்டுகளுக்கிடையே
ஒப்பந்தம் செய்துகொண்ட
74,000 கூலிகள்
சூரிநாமிற்குக்
கொண்டுவரப்பட்டனர். இதில்
இந்தியாவிலிருந்து
சென்றவர்கள் 46% பேர்கள்.
கிரானடா :
1857-1917 ஆம்
ஆண்டுகளுக்கிடையே
சுமார் 2,750 இந்தியக்
கூலியாட்கள்
இத்தீவிற்கு வந்து
குடியேறினார்கள். இவர்கள்
பிற கரீபியன்
தீவுகளிலிருந்து கொண்டு
வரப்பட்டனர். ஆனாலும்
தேவைக்கேற்ப மிகுதியான
கூலியாட்கள்
கிடைக்காததால், பல
கரும்புத் தோட்டங்கள்
வளர்ச்சியடைந்த போதிலும்,
பொதுவாக இத்தீவின்
பொருளாதார வளர்ச்சியில்
மாற்றம் தோன்றவில்லை.
மார்டினிக்தீவு :
காரைக்கால், பாண்டிச்சேரி
பகுதியிலிருந்து ஒப்பந்தத்
தொழிலாளர்களாக 10,063 பேர்
1874-ஆம் ஆண்டில் மார்டினிக்
சென்றுள்ளனர்.
இங்கிருந்து குவாடலோப்
முதலிய தீவுகளுக்கும்
சென்றுள்ளனர்.
தமிழரின் இன்றைய நிலை
சமயம் :
கரீபிய நாடுகளில்
மாரியம்மன், காளி,
மதுரை வீரன் கோயில்கள்
கட்டாயம் இருக்கும்.
ஏனெனில் தொழிலாளர்களாக
சென்ற தமிழர்களில்
முக்கால்வாசிபேர்
சமூகத்தின் அடித்தட்டில்
இருந்து சென்றவர்கள். மற்றும்
சிலர் மதம்மாறி
கிறிஸ்தவர்களானார்கள்.
ஒவ்வொரு தோட்டத்திலும்
இத்தெய்வங்களைக் காணலாம்.
இந்துக் கோயில்களைக்கூட
"சர்ச்" என்றே அழைக்கின்றனர்.
பெரும்பான்மையான
கோயில்கள் சர்ச்
பாணியிலேயே இருக்கின்றன
. சிலைகளுக்கு பதிலாக
படங்களே இருக்கின்றன.
'சேவலை'
காவு கொடுக்கும்
வழக்கமும்; வேலாடும்
வழக்கமும் இருக்கின்றன.
சாதிப்பேய் அங்கேயும்
இருக்கிறது. கோவிலில்
சிலரை உள்ளே
அனுமதிப்பதில்லை.
கயானாவில் பெர்பீஸ்
பகுதியில் இவ்வழக்கம்
இருப்பதாக ஈசா.
விசுவநாதன்
தெரிவிக்கிறார். மாரியம்மன்
தாலாட்டு,
சிலக்குத்து என்னும்
நூலிலுள்ள
பாடல்களை பாடுகின்றனர்.
ஒரு வரியை ஒருவர் வாசிக்க
மற்றவர்கள் பின்பற்றும்
கிருத்துவ
முறை காணப்படுகிறது.
பக்தர்களுக்கு சுண்டல்,
வடை உண்டு.
சாமிமீதேறப் பெற்றவர்
'வெறியாடும்' வழக்கம்
இருக்கிறது.
அப்போது 'குறி'யும்
சொல்லப் படுகிறது.
நோயுற்றோருக்கு மந்திரம்
ஜெபித்து, தண் ர்
தெளித்து வேப்பிலை
அடிப்பதோடு,
நாட்டு மருத்துவமும்
செய்கின்றனர். இத்தகைய
கோயில்களுக்கு எல்லோரும்
வருகின்றனர்.
கொரன்டீனிலுள்ள
ரோஸ்ஹால்
கோயிலை நடத்துபவர் ஓர்
ஆப்ரிக்கர்; ஹெர்ஸ்டெலிங்
கோயிலில் குறிசொல்பவர்
ஒரு முஸ்லீம், மதராசிகள்
(தமிழர்) நடத்தும்
இக்கோயில்கள் வெறும்
வழிபாட்டுக் கோயில்களாக
இல்லாமல் நோய் தீர்க்கும்
மருத்துவ
நிலையங்களாகவும் உள்ளன.
கிரானடாத் தமிழர்கள்
அனைவரும்
கிருத்துவர்களாக
மாறி விட்டனர். சூரிநாமில்
இந்துக்கள் வட இந்திய
முறைப்படி வழிபாடு
செய்கின்றனர். ஜமைக்கா,
குவாடலுப் போன்ற
நாடுகளில்
மதம்மாறி விட்டாலும்
ஒவ்வொரு நாட்டிலும்
முறையே 500 குடும்பங்கள்
இருப்பதாக 1987-ஆம்
ஆண்டு கணக்கெடுத்துள்ளனர்.
மார்ட்டினிக் தீவில் இன்றும்
ஏராளமான தமிழர்கள் தமிழக
முறைப்படி வழிபட்டு
வருகின்றனர். இந்துக்
கோயில்கள் மௌலின்,
கிராடிஸ்,
மாகௌபா முதலிய
ஏழு இடங்களில் இருந்ததாக
தனிநாயகம் அடிகள்
தெரிவிக்கிறார். 16
அடி உயரத்தில் இலிங்கம்
மௌலின் கோயிலில்
இருந்ததாக தெரிவிக்கிறார்.
மார்ட்டினிக்கில் தமிழக
முஸ்லீம்களும்
பெருமளவு குடியேறி
இருந்தனர். நாகூர் மீரான்
ஆண்டவருக்கு அங்கு ஒரு
நினைவு பள்ளி இருந்ததாக
வின்சென்ட்
சாய்பு தனிநாயகம்
அடிகளிடம்
தெரிவித்துள்ளார்
சாயுபு கூட வின்சென்ட்
ஆகியிருப்பதிலிந்து
நிலமையை உணரலாம்.
உணவு-உடை-தகவல்
தொடர்பு:
பெரும்பாலான பெண்கள்
இன்று நீக்ரோக்கள்
உடையையும்,
கௌனையுமே அணிகின்றனர்
. ஆண்கள் வேட்டி கட்டும்
பழக்கமே இல்லை. அமெரிக்க
உடைகளே வழக்கில்
இருக்கின்றன. உணவும்கூட
ஆங்கில, பிரஞ்சு முறைப்படி
இருந்தாலும்
சமயசடங்கு நேரத்தில் மட்டும்
சுண்டல், வடை முதலியவை
செய்யப்படுகின்றன.
காய்போட்டு காய்ச்சும்
குழம்பை 'கொலம்போ'
என்று அழைக்கின்றனர்.
புலவு,
பிரியாணிக்கு கரீபியர்களிடம்
செல்வாக்கு இருப்பதாகவும்,
முக்கிய உணவிடங்களில் கூட
பிரியாணிக்கு
செல்வாக்கிருப்பதாக
தனிநாயகம் அடிகள்
தெரிவிக்கிறார். இந்தியப்
படங்களை வீடியோ நாடாக்கள்
மூலம் பார்த்து வருகின்றனர்.
கரீபிய நாடுகளில் தமிழ்
இதழ்கள் எங்கும்
நடத்தப்படவில்லை என
ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
கரீபிய நாடுகளுக்குச் சென்ற
தமிழர்கள் பலரும்
படிப்பறிவில்லாத
கிராமப்புற தொழிலாளர்கள்
தங்கள் வேலை நேரம் போக
மற்ற
விடுமுறை காலங்களில்
தமிழகத்தில் தாங்கள்
பார்த்து கேட்டு அனுபவித்த
நாடகங்களை அங்கு
நடத்தியதை பல ஆவணங்கள்
தெரிவிக்கின்றன. அருணாசல
கவிராயரின் இராமநாடகம்,
தேசிங்குராசன் நாடகம்,
இரண்யன் நாடகம்,
அல்லாபாஷா நாடகம்
போன்றவையும், இராமாயண,
மகாபாரத கிளைக்
கதைகளை நடித்ததையும்
டி.டபிள்யூ.டி கொமின்ஸ்
தம் நூலில்
தெரிவித்துள்ளார். தமிழர்கள்
பாடிய பல
நாட்டுப்பாடல்களின்
மெட்டுக்களை ஆப்ரிக்கர்கள்
தங்கள் கிரியோல் மொழிப்
பாடல்களில் கேட்கலாம். சில
பாடல்களின்
இறுதி அடிகளில்
சின்னமுத்தம்மா,
பெரியமுத்தம்மா என
முடிவதிலிருந்து
அறிகிறோம்.
தமிழ்மொழியின் நிலை
கரீபிய நாடுகளில் வாழும்
தமிழர்களுக்கு இன்று
யாருக்கும் தமிழ்
தெரியாது. ஆங்கிலம்,
பிரஞ்ச், ஸ்பானிஷ்,
கிரியோல் பேசுபவர்களாக
மாறிப்போய் விட்டனர்.
தமிழர்களுடைய
பெயர்களை எழுதிய
பல்வேறு நாட்டு தோட்ட
முதலாளிகள் அவரவர்
மொழிக்கேற்ப
மாற்றி எழுதி வைத்துள்ளனர்
. அதை மாற்றாமல் பல
தமிழர்களும்
அப்படியே வைத்துக்
கொண்டுள்ளனர்.ராம்சமி
சின்னபேன் -
ராமசாமி சின்னப்பன்
மரியாய் - மாரியம்மா
வெள்ளினி - வள்ளி
-என மாறி இருக்கிறது.
இந்துக்களாக இருப்பவர்கள்
கூட தங்கள் பெயரின் பின்
ஜான், ஜோசப் முதலிய
கிருத்துவப்
பெயர்களுடனே இருப்பது
வியப்பாக இருக்கிறது.
கயானாவில் தமிழர்கள் 60
ஊர்களில்
வாழ்ந்து வருகின்றனர்.
கங்காராம், ரோஸ்ஹால்,
ஆல்பியன் போன்ற பெர்பீஸ்-
கொரன்டீன் பகுதியில் உள்ள
ஊர்களிலும்,
மேற்கு டெமராராவில் உள்ள
ஸ்டுவர்ட் வில்லிலும்,
ட்ரையம்பிலும்
நூறுகுடும்பங்கள்
இருப்பதாக விசுவநாதன்
தெரிவிக்கிறார்.
கல்வி நிலை :
"தம் தாய்மொழியை யார்
மறக்கிறார்களோ அவர்கள் தம்
பண்பாட்டையும்
மறக்கின்றார்கள்"
என்று கயனாநாட்டு நோயல்
மெனீஸ் கூறுகிறார். இன
உணர்வையும்,
மொழியையும் இழந்த
தமிழர்கள் இன்று அந்தந்த
நாட்டு மொழியைதான்
படிக்கின்றனர்.
மொழி இழந்ததால் அவர்களிடம்
இலக்கியமும் போய்விட்டது.
ஆப்ரிக்கர்கள்
பல்வேறு நாடுகளுக்கு
கடத்தப்பட்ட போதும் தங்கள்
வாய்மொழி இலக்கியத்தை
விடாமல் இருந்ததை தமிழர்கள்
இனியாகிலும் உணரத்தான்
வேண்டும்.
அமைப்புக்கள் :
ஜமைக்காவில் மட்டும் 8
இந்திய அமைப்புக்கள்
இருக்கின்றன. மற்ற
நாடுகளின் விபரங்கள் அறிய
முடியவில்லை.

தமிழர் சாதனைகள்


கயானாவில் மருத்துவத்
துறையில்
புகழ்பெற்று விளங்கும்
ஒருசிலரில்
திரு.லெஸ்வி முத்து
என்னும் தமிழர்
குறிப்பிடத்தக்கவர். இவர் ஜார்ஜ்
(தலைநகரம்) டவுனில்
மருத்துவராக உள்ளார். திரு.
சாமி என்பவர் வியாபாரத்
துறையில் செல்வாக்கு
பெற்றிருப்பதோடு, இந்த
நாட்டில் உள்ள
லட்சாதிபதிகளில் ஒருவராக
திகழ்கிறார்.
கல்வித்துறையில்
டாக்டர்.ஜே.ஆர் ராமசாமி,
கயானாப் பல்கலைக் கழகத்தில்
உயிர்நூல் துறையில்
பணியாற்றுகிறார்
இவருடைய தம்பி டாக்டர்
ஹெர்னன் ராமசாமி என்பவர்
செல்வாக்குள்ள
மருத்துவர்களில் ஒருவராக
கொரன்டீன் பகுதியில்
இருக்கிறார்.
அரசு அதிகாரியாக
வேலையில் இருக்கும்
ஒருநபர் ஜேம்ஸ்
நாயுடு ஆவார்.
ஜமைக்காவில் 1950
வரை காய்கறிகளின் ஏகபோக
உரிமை தமிழர்களிடமே
இருந்தன.
ஜமைக்கா பாராளுமன்றத்தில்
3 உறுப்பினர்கள் இந்தியர்
என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்/தொழில் புரிவோர்
விபரங்கள் :
கயானாவில் வாழும்
தமிழரில் 85%
விழுக்காட்டினர்
தோட்டங்களிலும்,
சிற்றூர்களிலும்
வாழ்கின்றனர். பொறியியல்
வினைஞர்களாகவும், நர்சு,
ஆசிரியர்களாக சிலர்
அங்கொன்றும்,
இங்கொன்றுமாக
வாழ்கின்றனர். நாட்டில்
நிலவும் அரசியல்,
பொருளாதாரச்
சூழ்நிலைகளின் காரணமாக
அமெரிக்காவிற்கும்,
கனடாவிற்கும்
சென்று விட்டதாக இங்குள்
தமிழர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள்
கூற்றை மெய்ப்பிக்கும்
வண்ணம் பெரும்பாலான
தமிழ்க் குடும்பங்களில்
குறைந்தது ஒருவராகிலும்
அமெரிக்காவிலோ
கனடாவிலோ,
பிரிட்டனிலோ வாழ்ந்து
வருகின்றனர். சூரிநாமில்
சரபாச்சா,
நிக்கெரி மாவட்டங்களில்
சிறுவிவசாயிகளாகவும்,
ஏற்றுமதி-
இறக்குமதி தொழிலிலும்
இவர்களின் பங்கு உள்ளது.
ஜமைக்காவில்
விவசாயத்திலும்
வியாபாரத்திலும்
இருக்கின்றனர். கிரனடாவில்
கரும்புத் தோட்டங்களி
பணிபுரிகின்றனர். கரீபிய
நாடுகளில் தமிழர்கள்
பண்பாட்டை முதலில் வட
இந்தியரிடம் இழந்தனர். பின்னர்
அந்தந்த நாட்டு மொழி,
பண்பாடுகளால்
விழுங்கப்பட்டவர்களாக
இன்று வாழ்கின்றனர். இன்றைய
இளம் தமிழர்கள் தமிழ்மொழி,
பண்பாடு,
வரலாறு பற்றி அறிந்து
கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்திய அரசாங்கம் உலகில் உள்ள
நான்கு நாடுகளில்
(கயானா, சுரிநாம், பீஜி,
மொரீசியஸ்) இந்திய
பண்பாட்டு மையம் (Indian
cultural centre) நிறுவி அதன்
மூலம் இந்திமொழி,
பண்பாடு, கலைகள்
ஆகியவற்றை பரப்பி
வருகிறது. அதுபோல தமிழக
அரசும் தமிழர்கள் அதிகமாக
அந்நாடுகளில் வாழ்வதால்
தமிழ்மொழி, பண்பாடு,
கலைகள் ஆகியவற்றை வளர்க்க
வேண்டும் என்கிறார்
விசுவநாதன். ஒட்டுமொத்த
தமிழரின் விருப்பமும்
இது என தமிழக
அரசு உணரவேண்டும்.
தொகுப்பு : ப.
திருநாவுக்கரசு
உதவிய நூல்கள் :
1. Tamil Emigration to Martinique -
Fr. Thaninayagam.
2. பாரெல்லாம் பரந்த தமிழர் -
ஈசா. விசுவநாதன்.
3. அயல்நாடுகளில் தமிழர் -
நாகராஜன

posted from Bloggeroid

மூவேந்தர் கள் வென்ற பேரரசு


^^^^^
சந்திரகுப்த மௌரியரின் காலம்
கி.மு.321
முதல் கி.மு.292 ஆகும். அவர்
மகன் பிம்பிசாரரின்
காலம் கி.மு.293 முதல்
கிமு.272 ஆகும்.
சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்
காலத்திலேயே,
கி.மு. 300-க்கு பின்
தக்காணத்தைக் கைப்பற்றும்
பணி தொடங்கி விடுகிறது.
ஆனால் பிம்பிசாரரின்
ஆட்சிக் காலத்தில்
அதாவது கி.மு.293-க்குப்
பிறகு அது தீவிரப்படுத்தப்
படுகிறது//
மௌரியர்கள் முதலில்
வடுகர்கள்
துணை கொண்டு துளுவ
நாட்டைத் தாக்கி, அதனை ஆண்ட
நன்னன்
மரபினனை முறியடித்து,
அவனது தலைநகர்
பாழியை கைப்பற்றிக்
கொண்டனர். பின்
அதனை ஒரு வலிமையான
அரணாக மாற்றியமைத்து,
அங்கிருந்து அவர்கள் அதியமான்
மரபினனாகிய
எழினியையும், சோழ நாட்டின்
எல்லையிலுள்ள
அமுந்தூர்வேல்
திதியனையும், பாண்டிய
நாட்டு எல்லையிலுள்ள
மோகூர்த் தலைவனையும்,
படிப்படியாகத் தாக்கத்
தொடங்கினர். சேரர்
எல்லையில் இருந்த
நன்னனை முதலிலேயே தாக்கியழித்திரு
ந்ததால்,
முதலில் சேரர்களைத்
தாக்கினர்.
சேரர் படைத் தலைவன்
பிட்டங்கொற்றன்
மோரியர்களோடு பல
தடவை போர் புரிகிறான். போர்
வெற்றி தோல்வி இல்லாமல்
தொடர்கிறது. பின்
மௌரியர்களை அதியமான்
மரபினன் எழினி என்பான்
முதலில் வட்டாறு என்ற
இடத்திலும், பின் செல்லூர்
என்ற இடத்திலும்
எதிர்த்து தாக்குதல்
நடத்துகிறான்.
இறுதியில் செல்லூர் போரில்
எழினி வீர
மரணமடைந்து பெரும்
புகழடைகிறான். அதன்
பின்னரும் அதியமான் மரபினர்
மௌரியர்களை எதிர்த்து தொடர்ந்து இறுதிவரை தாக்குதல்
நடத்தினர். அதன்
காரணமாகவே அசோகரின்
கல்வெட்டில்,
அவர்களின் அரச குல வடமொழிப்
(பிராகிருதம்)
பெயரில் ‘சத்திய புத்திரர்கள்’
என மூவேந்தர்களுக்க
ு இணையாக இடம் பெற்றனர்
எனலாம்.
சோழ நாட்டெல்லையில் உள்ள
அமுந்தூர்வேல் திதியனும்,
பாண்டிய நாட்டெல்லையிலுள
்ள மோகூர்த் தலைவனும்
மோரியர்களை எதிர்த்துத்
தாக்கி அவர்களைத்
தடுத்து நிறுத்து கின்றனர்.
இறுதியில் திதியனும்
மோகூர்த் தலைவனும்
மோரியர்களைப் போரில்
தோற்கடித்து தங்களது எல்லையை விட்டு துரத்தி விடுகின்றனர்.
மோரியர்
படை பின்வாங்கி துளுவ
நாட்டை அடைந்து,
பாழி நகரில்
நிலை கொள்ளுகிறது.
மௌரியப் பேரரசின்
படை இதுவரை முழுமையாக
போரில் ஈடுபடவில்லை. அதன்
தென்பகுதி படைத்தலைவர்களே வடுகர்களின்
துணை கொண்டு போரை நடத்தி வந்தனர்.தமிழக
எல்லையில் ஏற்பட்ட
பெருந்தோல்வி மௌரியப்பேரரசினை
கொதித்தெழச்செய்
தது.உடனடியாக
பெரும்படை திரட்டப்பட்டது.
முதலில்
துளு நாட்டையும்,
எருமை நாட்டையும்
கடந்து வரும்
வழிகளிலுள்ள
பாறைகளை வெட்டிச்
செப்பனிட்டு மௌரியப்
பெரும்படை வருவதற்கான
பாதைகள் உருவாக்கும்
பணி நடைபெற்றது.
இந்த பெரும் போருக்கான
ஆயத்தப் பணிகள் சில
ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெ
ரிகிறது.
இப்பாறைகளை வெட்டி பாதை அமைக்கும்
பணி குறித்தும், மோகூர்
தலைவன்
பணியாதது குறித்தும்,
வடுகர் வழி காட்டியாக
இருந்து மோரியர்களுக்கு உதவினர்
என்பது குறித்தும் சங்க
புலவர்கள தங்கள் பாடல்களில்
தெரிவித்துள்ளனர். இந்த
பெரும்போருக்கான ஆயத்தப்
பணிகள் முடிந்த பின்
மௌரியப் பேரரசின்
பெரும்படை துளுவ நாட்டில்
வந்து தங்கி, தமிழகத்தின்
மீது படையெடுக்கத்
தயாராகியது//
தமிழகத்துக்கு வந்துள்ள
மிகப்பெரிய ஆபத்தை, சோழ
அரசன்
இளஞ்செட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான்.
எல்லையிலுள்ள படைத்
தலைவர்களை வேளீர்கள் மற்றும்
சிற்றரசர்களை மட்டும்
இப்பெரும்
போருக்கு பொறுப்பாக்குவது
பெரும் ஆபத்தில் முடியும்
என்றெண்ணி, தமிழர் ஐக்கிய
கூட்டணி அரசுகளை (மாமூலனார்
மற்றும் கலிங்க மன்னர்
குறிப்பிடும் தமிழக
அரசுகளின் கூட்டணி)
ஒன்று திரட்டி,
தனது தலைமையில் பெரும்
படையைத் திரட்டுகிறான்.
இப்போர் தமிழகப் போராக, தமிழக
கூட்டணி அரசுகளின் போராக
நடைபெற்ற போதிலும்,
இப்போரின் வெற்றி சோழர்களின்
வெற்றியாகவே வடவரிடத்திலும்,
நமது இலக்கியங்களிலும்,
புராணங்களிலும்
பதிவாகி, சேர,
பாண்டியர்களை விட சோழர்கள்
பெரும் புகழடைகின்றனர்.
தமிழக
கூட்டணி அரசுகளுக்கும்,
மௌரியப்
பேரரசுக்குமிடையே பெரும்
போர் துவங்கியது.
சோழ நாட்டெல்லையிலேய
ே பல தடவை மௌரியர்கள்
தோல்வியுற்றனர். எனினும்
தொடர்ந்து புதுப் புதுப்
படைகளை போருக்கு அனுப்பினர்.
மௌரியப் பேரரசின்
முழு ஆற்றலும்
திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம்
தாக்கப்பட்டது. தமிழகத்தின்
வடபகுதி முழுவதும்
மௌரியப் பெரும்படையால்
தாக்கப்பட்டது. வட
ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற
இடத்தில் நடைபெற்ற
பெரும்போரில்,
இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெருந்தோல்வியடை
யச்
செய்து துரத்தியடித்தான்.
வல்லம் போர் குறித்து அகம் 336-
ல் பாடிய பாவைக்
கொட்டிலார்என்ற பெண்பாற்
புலவர், மௌரியர்களை ஆரியர்
எனக் குறிப்பிடுகிறார்.
மௌரியர்கள் தங்களைஆரியர்
என்றே அழைத்துக்
கொண்டனர். (இது கி.மு.3-ம்
நூற்றாண்டுப் பாடல்//
மௌரியர்கள் சளைக்காமல்
தொடர்ந்து பல தடவை,
பெரும்படைகளை அனுப்பிக்
கொண்டேயிருந்தனர்.
ஆனால் போரில் பெரும்
இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய,
அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத்
தெரியவில்லை.இறுதியில்
தொடர்ந்து அடைந்து வந்த
தோல்விகளால் தாக்குப்பிடிக்க
இயலாமல் பெரும்
இழப்போடு பாழி நகருக்குப்
பின்வாங்கினர்.
இளஞ்செட்
சென்னி போரை தொடர்ந்து நடத்தி,
பாழி நகர்
வரை படையெடுத்துச்
சென்று, அதனைத்
தாக்கி, இறுதியில் பெரும்
வெற்றியை தமிழகத்துக்கு வாங்கித்
தந்தனன்.
முழுமையாக

posted from Bloggeroid

Wednesday, 4 June 2014

2500ஆண்டுகளுக்கு முன்பே அமொரிக்கவுடண் வாணிபம் செய்த தமிழன்

2500
ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன்
வாணிபம் செய்த தமிழர்கள்!
இந்தக்கட்டுரையை
படிப்பதற்கு முன் நம்
பண்டைக்கால கடற்கரை நகரம்
பூம்புகாரையும் ஈஸ்டர்
தீவு பற்றியும், ஜப்பான்
மொழியின் மூலம்
பற்றியும்
அபோகாலிப்டோ படத்தையும்,
நினைவுகொள்ளவும்.
அமெரிக்காவின் மாயன்
நாகரீகத்தில் இருந்த தமிழர்
விளையாட்டு (தாயம்)
தாயம் பண்டைத்தமிழர்களின்
ஒரு விளையாட்டு.
தோன்றியதும்
நம்மிடமிருந்துதான்.
அப்படியென்றால் இந்த
விளையாட்டு மாயன்
மக்களுக்கு எப்படித்
தெரியும்?
தமிழர்களும்
செவ்விந்தியர்களும் (Mayans,
Incas) :
உலக நாகரீகங்களுடனான
நம்முடைய தொடர்பு.
இன்று உலகமே Mayan என்கிற
வார்த்தையை அறிந்திருக்கிறத
ு. Mayan Calendar-
யை வைத்து உலகம்
முழுவதும்
இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறத
ு. 2012-ல் உலகம்
அழிந்திவிடலாம் என்கிற
புனைவுகளும்
தொலைக்காட்சி மர்மத்
தொடர்களால்
முன்னெடுக்கப்படுகின்றன.
Mayan-கள் யார் என்றுத்
தெரியாதவர்கள் கூட Mayan
என்கிறப்
பெயரை உச்சரிக்கிறார்கள்.
தமிழ் நாட்டின் முன்னோடித்
தமிழ்
தொலைக்காட்சி நிறுவனங்கள்
அனைத்தும் Mayan Calendar
பற்றிய
நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிர
ுந்து பிச்சையெடுத்து,
தமிழ் படுத்தி கட்டைக்
குரல்களில் உலக அழிவைப்
பற்றி பேசுகின்றன.
வரலாற்று அறிவு கொஞ்சம்
கூட இல்லாத நம்முடைய
தமிழ்
தொலைக்காட்சி நிறுவனங்கள்
Mayan தொடர்பான
வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.
Olmec, Aztec, Mayan, Inca
இவைகள் வட மற்றும் தென்
அமெரிக்க கண்டங்களில்
வாழ்ந்த மக்களுடைய
நாகரீகங்களின் பெயர்கள்.
இவர்களை வெள்ளையர்கள்
செவ்விந்தியர்கள்
என்று பொதுபட
அழைத்தார்கள்.
ஆங்கிலேயர்கள்
இவர்களை செவ்விந்தியர்கள்
என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு.
கி.பி. 14, 15 ம்
நூற்றாண்டுகளில்
ஐரோப்பியர்கள்
இந்தியாவிற்கு செல்ல கடல்
வழியைத்
தேடிக்கொண்டிருந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் Atlantic
Ocean-யை குறுக்காக
கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம்
என்று Columbus நம்பினார்.
அவருடைய
நம்பிக்கையின்படியே அவர்
Atlantic Ocean-யை கடந்தார்.
ஆனால் அவர் போய் சேர்ந்த
கண்டம் அமெரிக்கா. ஆனால்
Columbus தாம் வந்து இறங்கிய
நாடு இந்தியா என்றே நம்பினார்.
அமெரிக்க கண்டத்தை சேர்ந்த
மக்கள்,
இனக்குழு வழக்கப்படி தங்கள்
உடம்பில் சிகப்பு சாயம்
பூசிக்கொள்வது வழக்கம்.
இதை பார்த்த ஐரோப்பியர்கள்
உடம்பில் சிகப்பு சாயம்
பூசிய அந்த மக்களையும்
தாங்கள்
கண்டுபிடித்தது இந்தியா என்கிற
நம்பிக்கையையும்
ஒன்றாக்கி அந்த
மக்களை செவ்ந்தியர்கள் (Red
Indians) என்று அழைக்கத்
தொடங்கினார்கள். Columbus-
க்கு முன்பே Americo Vesbugi
என்பவர் அமெரிக்க
கண்டத்தை கண்டுபிடித்துவி
ட்டார் என்பது வேறு கதை.
இவரை பெருமைபடுத்தும்
விதமாகவே அந்த கண்டம்
America
என்று அழைக்கப்படுகிறது.
இந்த செவ்விந்தியர்கள்
எப்படி இரு அமெரிக்க
கண்டங்களிலும் (Green Land,
Ice Land, Canada உட்பட)
குடியெரினார்கள்
என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத
முடிச்சாக இருக்கிறது.
ஆனால் ஒன்றை மட்டும்
வரலாற்று ஆராய்ச்சியாளர்க
ள் உருதிபடுத்தியிர
ுக்கிறார்கள். அந்த
ஒரு விசயத்தைப் பற்றிதான்
நம்முடைய முன்னோடித்
தமிழ்
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு
தெரியாமல் போயிற்று.
வரலாற்று அறிவுக்கும்
இவர்களுக்கும்தான் ஏழாம்
பொறுத்தமாயிற்றே!
வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்க
ள் உறுதிப்படுத்திய அந்த
விசயம் செவ்விந்தியர்கள
ுக்கும், தமிழர்களுக்கும்
தொடர்பு உண்டு என்பதுதான்.
இதை படிப்பவர்களுக்கு,
இது எதோ இட்டுகட்டிய
சமாச்சாரம்,
வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற
விசயம், உலகத்தில்
உள்ளவர்களையெல்லாம்
தமிழர்களோடு தொடர்புபடுத்துக
ிற மோசடி என்று நினைக்கத்
தோன்றலாம் ஆனால்
உண்மை இதுதான்.
கடலில் மூழ்கிய
தமிழர்களின் வாணிகக் கப்பல்:
நல்லவேளை இந்த
உண்மையை கண்டுபிடித்தவர்
கள்
வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்க
ள் அதனால் நம்மவர்கள்
இதை நம்பத் துணிவார்கள்.
நம்மவர்களுக்கு Made in Foreign
என்றாலே ஒரு கிலுகிலுப்புதான
ே! தமிழ்
வரலாற்று ஆராய்ச்சியாளர்
ஒருவர் இந்த
உண்மையை கண்டிருந்தால்
அவரை பைத்தியக்காரன்
என்று முத்திரை குத்தி மூலையில்
தள்ளி இருப்போம். தன்
இனத்து அறிஞனை மதிக்காத
எந்த இனமும் உருப்பட்டதாக
வரலாறு கிடையாது.
இதற்கு வாழும் உதாரணம்
தமிழனே.
The Conquest of Mexico and Peru
என்கிற
வரலாற்று நூலை எழுதிய
William H. Prescott
என்பவரே முதன் முதலில்
செவ்விந்தியர் தமிழர்
தொடர்பை பற்றி பேசுகிறார்.
ஐரோப்பியர்கள்
எப்படி செவ்விந்தியர்களை,
மெக்சிகோ மற்றும்
பெரூ நாடுகள்
முழுவதிலிருந்தும்
ஒழித்துகட்டினார்கள்
என்பதை விலாவாரியாக
இந்த நூல் விவரிக்கிறது.
இந்த நூலின் தொடக்கத்தில்
செவ்விந்தியர்களின்
பூர்வீகம் குறித்து பேசும்
Prescott தமிழர்
தொடர்பை அடித்து கூறுகிறார்.
வரலாற்று ஆராய்ச்சியாளர்
இல்லையென்றாலும்
சே குவேராவும்
தன்னுடைய தென் அமெரிக்க
பயண குறிப்புகளில்
இதை பற்றி எழுதியிருக்கிறா
ர்.
‘இன்காகள் (Incas) தென்
அமெரிக்க சோழர்கள்’ என்கிற
ஆராய்ச்சி நூல்
ஒன்று தமிழிலும்
இருக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன்னால்
நூலகத்தில், யாரும்
திரும்பி பார்க்க கூட
யோசிக்கும் புத்தக
அடுக்கில்,
தூசி தும்பட்டைகளுக்க
ு மத்தியிலிருந்து
எடுத்து இந்த
புத்தகத்தை நான்
படித்திருக்கிறேன். இந்த
புத்தகத்தை எழுதிய
ஆராய்ச்சியாளரின்
பெயரை நான்
மறந்துவிட்டதின் காரணமாக
என்னால் அது குறித்த
தகவலை தர இயலவில்லை.
இது வருத்தமளிக்க
கூடி விசயம். இந்த
கட்டுரை எழுதும்
பொறுட்டு இந்த
அறுமையான
புத்தகத்தை நூலக்கத்தில்
எவ்வளவோ முயன்று தேடியும்
கண்டுபிடிக்க
முடியவில்லை. இந்த
புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும்
வேதனையான விசயம். தமிழ்
அறிஞர்களின்
ஆராய்ச்சி அறிவு இப்படிதான்
கண்டுகொள்ள ஆளில்லாமல்
காணாமல் போகிறது.
செவ்விந்தியர்களின்
கலாச்சார கூறுகள் மிகத்
தெளிவாக தமிழர்களின்
கலாச்சார
கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன.
தமிழர்களின் வானியியல்,
செவ்விந்தியர்களின்
வானியியலோடு ஒத்துப்போகின்றன
. செவ்விந்தியர்களின்
வானியியல்
நுட்பத்தை ஆராய்ந்த
வரலாற்று ஆராய்ச்சியாளர்க
ள், பல்லாயிரம் ஆண்டுகள்
அனுபவத்தின்
மூலமாகே இத்தகைய
நுட்பங்களை பெற முடியும்
என்றும் செவ்விந்தியர்கள
ுக்கு இது ஒரே இரவில்
கைவர சாத்தியம்
இல்லையென்றும்
கணிக்கிறார்கள். காரணம்
செவ்விந்தியர்கள் ஒரிடத்தில்
நிலைத்து வாழ்பவர்கள்
கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம்.
நாடோடி இனம்
வானியியலில்
தேர்ச்சி பெறுவது சாத்தியம்
அற்றது. தமிழர்களுடனான
தொடர்பே இவர்கள்
வானியியலில்
தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும்
என்று கருதுகிறார்கள்.
மெசப்பத்தோமியா,
எகிப்பது நாகரீகங்களின்
தொடர்புகள்
செவ்விந்தியர்களிடம்
கிடையாது.
செவ்விந்தியர்கள்
ஏறக்குறைய 3000
ஆண்டுகளாக அமெரிக்க
கண்டங்களில் வாழ்ந்தாலும்
அவர்களுடைய வாழ்க்கை,
நிலையான விவசாய
முறை சார்ந்த
நிலவுடமை கலச்சாரம்
கொண்டது கிடையாது.
காடு சார்ந்த பொருட்களும்,
கால்
நடைகளுமே அவர்களுடைய
சொத்துகள். தென்
அமெரிக்காவில்
காடுகளிலும், வட
அமெரிக்காவில் இடம்
விட்டு இடம் நகரும்
வகையிலுமே அவர்கள்
தங்களுடைய
வாழ்க்கையை அமைத்துகொண்டார்
கள். அமெரிக்கா போன்ற
இயற்கை வளம் நிறைந்த
நாட்டில், செவ்விந்தியர்கள்
நிலையான விவசாய
சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான
விசயம். Mel Gibson-னின்
Apocalypto படம் தென்
அமெரிக்க செவ்விந்தியர்கள
ின் சமுதாய
அமைப்பை மிகத்
துள்ளியமாக
காட்சி படுத்தியிருக்கும்.
Hollywood-ன் இனவெறிப்
பிடித்த Cowboy படங்களில்
வெள்ளையர்களுக்கும்
செவ்விந்தியர்களுக்கும்
இடையிலான
சண்டை காட்சிகளில் வட
அமெரிக்க செவ்விந்தியர்கள
ின் சமுதாய
அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.
மாயன் காலண்டர்
ஐரோப்பியர்களுக்
கு அமெரிக்கா என்று ஒரு கண்டம்
இருப்பதே கி.பி.12, 13
நூற்றாண்டுகளுக்
கு பிறகுதான்
தெரியவந்தது. ஆனால் 2500
ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறத
ு. இது கற்பனை கதைப் போல
இருந்தாலும்
இதற்கு வலுவான
சான்று உண்டு. தென்
பசிபிக் மகாகடலில் (Pacific
Ocean) ஆஸ்திரேலிய கடல்
பகுதியில் கடல்
அகழ்வாராய்ச்சி(Ocean
Archaeology) மேற்கொண்ட
சமயத்தில் மிகப் பெரிய
சரக்குக் கப்பல்
ஒன்றை கண்டுபிடித்தார்கள்.
முழுவதும் மரத்தால்
கட்டப்பட்டிருந்த இந்த கப்பல்
வணிகப் பொருட்களுடன்
முழ்கியிருக்கிறது. Carbon-
Dating முறையின்படி இந்த
கப்பலின்
வயது இன்றிலிருந்து 2500
வருடங்களுக்கும் மேல்
என்று தெரிந்திருக்கிறது.
தரவுகளை ஆராய்ந்த
ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள்
வணிகத்திற்கு உபயோகப்படுத்திய
கப்பல்களில்
ஓன்று ஆஸ்திரேலிய
கண்டத்தைத்
தாண்டி அமெரிக்கா செல்லும்
வழியில் பசிபிக் கடலில்
முழுகியிருக்கிறது என்ற
முடிவிற்கு வந்தார்கள்.
ஆராய்ச்சியார்கள்
கண்ணை மூடிக்கொண்டு இந்த
கப்பல்
தமிழர்களுடையது என்கிற
கணிப்பிற்கு வந்துவிடவில்லை.
முதலில் இந்த கப்பல் எந்த
மரத்தால்
கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால்
ஆனது என்று தெரிந்திருக்கிற
து.
தேக்கு தென்னிந்தியாவின்
மேற்கு தொடர்ச்சி மலைகளில்
மட்டுமே கிடைக்க
கூடியது. அதுமட்டும்
இல்லாமல் 3000
ஆண்டுகளுக்கு முன்னால்
கடல்களில் மிகப் பெரிய
கப்பல்களை வைத்து வாணிபம்
செய்த நாகரீகம்
இரண்டே இரண்டுதான்.
ஒன்று தமிழர்களுடைய
நாகரீகம் மற்றது எகிப்திய
நாகரீகம். மூழ்கிய அந்த
கப்பலின் கட்டுமான
அமைப்பு எகிப்தியர்களின்
சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்
லை. மேலும் எகிப்தியர்கள்
கறையோரமாகவே பயணித்து செல்லக்
கூடியவர்கள்.
அவர்களுக்கு நடுகடலில்
கப்பல் செலுத்தத்
தெரியாது. அதன்
காரணமாக அவர்களுடைய
கப்பல்களின் கட்டுமானமும்
கரையோரமாக பயணிக்க ஏற்ற
வகையில்தான் இருக்கும்.
கண்டுபிடிக்கப்பட்ட
கப்பலோ மிகப் பெரியதாக
நிறைய
சரக்குகளை கையாளக்
கூடியதாக
இருந்ததோடு நடுகடலில்
பயணம்
செய்வதற்கு ஏற்றபடியும்
கட்டப்பட்டிருக்கிறது. இந்த
கப்பலில் இருந்த சரக்குகளும்
தென்னிந்தியாவில்
மட்டுமே கிடைக்ககூடியவைக
ள். தமிழ் இலக்கியங்கள்
மட்டுமே கடலில்
பயணிக்கும்
களங்களுக்கு உபயோகத்தின்
அடிபடையில் அமைந்த
பெயர்களைப்
பற்றி கூறுகிறது.
இவைகள் மூலம் தமிழர்களின்
கடலோடும்
அனுபவத்தை ஆராய்ந்த
ஆராய்ச்சியாளர்கள்
இது தமிழர்களுடைய வணிக
கப்பல்தான்
என்று உறுதி செய்திருக்கிறார
்கள். ஆக வெள்ளையர்கள்
நாடோடிகளாக
சுற்றிதிரிந்த
காலத்திலேயே தமிழன்
ஆஸ்திரேலிய
கண்டத்தையும், அமெரிக்க
கண்டத்தையும்
கண்டு அறிந்து வைத்திருந்தான்.
இந்த கண்டங்களோடு வணிகத்
தொடர்புகள்
அவனுக்கு இருந்திருக்கிறத
ு. நம்முடைய
சாபக்கேடு இவற்றை பற்றிய
முறையான
வரலாற்று ஆவணங்கள்
இல்லாதது. 3000
ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில்
பயணிக்கத் தெரிந்த தமிழன்,
தன்னுடைய சிறப்புகள்
பற்றி பதிய
தவறியது கேடுகாலமே.
(ஆஸ்திரேலியாவில்
தமிழர்களை ஒத்த
பழங்குடியினரின்
புகைப்படம் கீழே)
நல்லவேளை ஆரிய வேதங்கள்
கடல்
பயணத்தை தடை செய்திருக்கின்ற
ன (கடல் என்றால்
ஆரியர்களுக்கு பயத்தில்
பேதியாகிவிடும்)
இல்லை என்றால் மூழ்கிய
இந்த தமிழர்களுடைய
கப்பலுக்கு தலைவன்(Captain)
ஒரு பிராமணன்
என்று இல்லாத
வரலாற்றை இருப்பதுபோல்
எழுதியிருப்பார்கள்.
தன்னுடைய சிறப்புகள்
பற்றிய விழிப்புணர்வே அற்ற
தமிழனும்
அதை அப்படியே நம்பிவிடுவான்.
உலக நாகரீகங்களுடனான
நம்முடைய தொடர்புகளைப்
பற்றி பேச
இன்று நாதியில்லை.
ஆங்கொன்றும்
இங்கொன்றுமாக நம்முடைய
சிறப்புகள்
குறித்து வரலாற்று ஆதாரங்கள்
கிடைத்தாலும்
வெகு மக்களிடம்
அதை பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்த
தமிழர்கள்
தவறிவிடுகிறார்கள்.
தவறிவிடுகிறார்கள்
என்பதை விட
அக்கறை இல்லாமல்
இருக்கிறார்கள் என்பதுதான்
உண்மை. ஆயிரம்
ஆண்டுகளாக தொடரும் இந்த
அக்கறையின்மை,
நாடு இழப்புகளிலும், இனப்
படுகொலைகளிலும்
தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்க
ிறது.
ஆஸ்திரேலியா பழங்குடியினர் :
நியுசிலாந்தில்
கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்
எழுத்துடைய மணி - காலம்
AD 1200

posted from Bloggeroid

உலகம் வியந்த பண்டைய தமிழனின் ஆறிவாற்றல்


இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட
கரிகால சோழன் காவிரியில்
அடிக்கடி பெருவெள்ளம்
வந்து மக்கள் துயரப்பட்டதைக்
கண்டு அதைத் தடுக்க
காவிரியில் ஒரு பெரிய
அணையைக் கட்ட
முடிவெடுத்தான் . ஆனால்,
அது சாதாரன விசயம் அல்லவே .
ஒரு நொடிக்கு இரண்டு லட்சம்
கனநீர் பாயும் காவிரியின்
தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்க
ும் ஒரு வழியைக்
கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.
நாம் கடல் தண்ணீரில்
நிற்கும்போது அலை நம்
கால்களை அணைத்துச்
செல்லும்.
அப்போது பாதங்களின்
கீழே குறுகுறுவென்று மணல்
அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள்
இன்னும்
மண்ணுக்குள்ளே புதையும்.
இதைத்தான் சூத்திரமாக
மாற்றினார்கள் அவர்கள்.
காவிரி ஆற்றின் மீது பெரிய
பெரிய பாறைகளைக்
கொண்டுவந்து போட்டார்கள்.
அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின்
காரணமாக கொஞ்சம்
கொஞ்சமாக மண்ணுக்குள்
போகும். அதன் மேல்
வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத
ஒருவித ஒட்டும் களி மண்ணைப்
புதிய பாறைகளில்
பூசிவிடுவார்கள்.
இப்போது இரண்டும்
ஒட்டிக்கொள்ளும். இப்படிப்
பாறைகளின் மேல் பாறையைப்
போட்டு, படுவேகத்தில்
செல்லும் காவிரி நீர்
மீது கட்டிய அணைதான்
கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர்
காட்டன் தான் இந்த அணையைப்
பற்றிப் பலகாலம்
ஆராய்ச்சி செய்து இந்த
உண்மைகளைக் கண்டறிந்தார் .
காலத்தை வென்று நிற்கும்
தமிழனின் பெரும்
சாதனையைப்
பார்த்து வியந்து அதை '
தி கிராண்ட் அணைக்கட் ' என்றார்
சர் ஆர்தர் காட்டன் .
அதுவே பிறகு உலகமெங்கும்
பிரபலமாயிற்று.
உலகிற்கு பறைச்சாற்றுவோம்
தமிழனின் பெருமைகளை..!!

posted from Bloggeroid

என்றும் பதினாறாக இருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும், குறைந்தபட்சம் விரைவில் உடல் முதுமை தோற்றத்தை அடைவதை தள்ளிப்போடலாம்- சில வகையான உணவுகளை எடுத்துக்கொண்டா ல்...! அப்படியான எளிமையான உணவுகள் பட்டியல் இதோ:


என்றும் பதினாறாக
இருப்பது நடைமுறையில்
சாத்தியமில்லை என்றாலும்,
குறைந்தபட்சம் விரைவில்
உடல்
முதுமை தோற்றத்தை அடைவதை தள்ளிப்போடலாம்-
சில வகையான
உணவுகளை எடுத்துக்கொண்டா
ல்...!
அப்படியான எளிமையான
உணவுகள் பட்டியல் இதோ:
● பாதாம்:
பாதாம் பருப்பில்
முதுமையை தடுக்கும்
வைட்டமின் "ஈ" அதிக
அளவில் அடங்கியுள்ளது.ஆ
ரோக்கியமான
மேனி,தலைமுடி மற்றும்
நகங்களை அளிப்பதில்
பாதாமின்
பங்களிப்பு அபாரமானது என்கிறார்கள்
டயட்டீசியன்களும
்,அழகு கலை நிபுணர்களும்.பா
தாமில் உள்ள வைட்டமின் "ஈ",
சூரியனின் புற
ஊதா கதிர்கள்,காற்று
மாசு போன்றவற்றால் நோய்
எதிர்ப்பு அணுக்கள்
பாதிப்படைவதை தடுக்கிறது.நாளொ
ன்றுக்கு 12 பாதாம்
பருப்புகளை ஒருவர்
உண்ணலாம் என்கிறார்கள்
நிபுணர்கள்.
● அக்ரூட் பருப்பு
வால்நட்ஸ் எனப்படும் இந்த
அக்ரூட் பருப்பிலும்
ஏராளமான வைட்டமின் "ஈ"
சத்து நிறைந்துள்ளது.ந
ாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால்
அது உங்களது மேனியை மிளிர
வைக்கும்.
● வெள்ளரிக்காய்:
பாதாம், அக்ரூட்
பருப்புகளெல்லாம் நம்ம
பட்ஜெட்டுக்கு ஒத்து வராது என்று நினைப்பவர்கள்
சல்லிசான விலையில்
கிடைக்கும்
வெள்ளரிக்காயை தாராளமாக
எடுத்துக்கொள்ளலாம்.நீர்
சத்து அதிகம் நிறைந்த
வெள்ளரிக்காய்
நமது மேனியை பட்டுபோல்
மென்மையாகவும்,ம
ினு மினுப்பாகவும்
வைத்துக்கொள்ள அபார
பங்களிப்பை செய்கிறது.
● வெண்ணெய்
உடல்
முதுமை அடைவதை தடுக்கும்
உணவு வகைகளில்
வெண்ணெயும்
ஒன்று.சோர்வை போக்கி,
தோல்
வறண்டு போவதை தடுத்து,மேனியை பளபளக்க
வைக்கிறது.
● கற்றாழை:
கற்றாழையில் பல
வகை உண்டென்றாலும்,
வீடுகளில் வளர்க்கப்படும்
சோத்து கற்றாழை ஜூஸை தினமும்
அருந்தி வந்தால், என்றும்
இளமையாக
தோற்றமளிப்பது சர்வ
நிச்சயம்.வைட்டமின்
ஈ,சி மற்றும்
கொழுப்பு அமிலங்கள்
அடங்கியுள்ளன.மு
துமையை தடுக்கும் இந்த
சோத்துக்கற்றாழையின்
மடலில்
நல்ல
கொழுப்பு அடங்கியுள்ளது.ச
ற்று கூடுதலான
கசப்பு சுவை கொண்ட இந்த
மடலை அப்படியே வாயில்
போட்டு மென்று சாப்பிட்டு வந்தால்,
35
வயது பெண்ணை கூட,"எக்ஸ்கியூஸ்
மீ... நீங்க எந்த காலேஜ்ல்
படிக்கிறீங்க?"
என்று கேட்பார்கள்.இளம
ை தோற்றத்தை கொடுப்பது மட்டுமல்ல,
உடல் பருமனை தடுக்கும்
விதமாக
கொழுப்பை கரைத்து,
இருதயத்தையும்
பாதுகாக்கிறது.ம
டலை அப்படியே சாப்பிட
விரும்பாதவர்கள்,
இதனை சுமார் 30 மி.லி.
அளவுக்கு ஜூஸ் எடுத்து,
அதனுடன் 100 மி.லி.
தண்ணீரை கலந்து காலையில்
வெறும் வயிற்றில்
அருந்திவிட்டு, 30
நிமிடங்கள்
கழித்து வழக்கமான
உணவுகளை எடுத்துக்கொள்ளல
ாம்.
● எள்:
மளிகை கடைகளில் மிக
சாதாரணமாக கிடைக்கும்
இந்த எள்ளை பலவிதமாக
உணவில் சேர்த்துக்கொள்வ
ார்கள்.இதிலும் வைட்டமின்
"ஈ" சத்துக்கள்
நிறைந்துள்ளதால்,
மேற்கூறிய
பலன்களெல்லாம் இதிலும்
அடங்கியுள்ளது.
● பெர்ரி:
பெர்ரி பழங்களில் உடலில்
செல்களை புதுப்பிக்கும்
ஆண்டியாக்ஸிடண்ட் அதிக
அளவில் உள்ளது.நாளொன்று
க்கு ஒருவர்
ஒன்று அல்லது இரண்டு கப்
செர்ரி பழங்களை எடுத்துக்கொள்ளல
ாம்.
● கிரீன் டீ:
கிரீன் டீயின்
நன்மை குறித்து நாம்
ஏற்கனவே நிறைய
சொல்லிவிட்டோம்.இதிலும்
ஆண்டியாக்ஸிடண்ட்
மட்டுமல்லாது, உடலில்
உள்ள கெட்ட
கொழுப்பை கரைப்பது வரை பல
அற்புதங்கள் அடங்கியுள்ளது.
● தண்ணீர்:
நாளொன்றுக்கு குறைந்தது 2
முதல் 3 லிட்டர் தண்ணீர்
அருந்துவது சருமம்
வறண்டு போகாமல்
தடுக்கும்.
மேற்கூறிய
உணவு பட்டியல்
நமது அன்றாட வாழ்க்கையில்
பின்பற்றக்கூடிய
சாத்தியமானவை என்பதால்,சிறிது
நேரம்
ஒதுக்கி இவற்றை உண்டு வந்தால்
முதுமை அவ்வளவு சீக்கிரத்தில்
நெருங்காது!

posted from Bloggeroid

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு


அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய
கிணற்றில் தண்ணீர் வராமல்
போய்விட்டால்
அத்தனை உழைப்பும்
வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால்
இவற்றிற்கெல்லாம் எளிய
இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென
புற்கள் வளர்ந்திருந்தால், அந்த
இடத்தில் கிணறு தோண்ட
குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும்
என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால்
நல்ல நீரூற்று என
அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும்.
அடுத்த நாள் கவனித்தால்
எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டு சென்று சேர்த்த
அடையாளங்கள் ,
அதாவது தடயங்கள் இருக்குமாம்
அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . .
கோடைகாலத்திலும் வற்றாத
நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால்
சுரக்கும் பசுக்களை அந்த
நிலத்திட்க்குள் மேய விட
வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு ,
ஐந்து நாட்கள் கவனித்தால்
அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

posted from Bloggeroid